17 வது சாதனை வெற்றியை நோக்கி மிகத்தன்னம்பிக்கயுடன் பந்துவீசிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை எதிர்த்து முதலில் நிதானமாக ஆடிய லக்ஷ்மன் மெது மெதுவாக தனது சுயரூபத்தைக் காட்டத்தொடங்கினார். இதில் கவனிக்கப் பட வேண்டியது லக்ஷ்மனிடம் எந்தவித பதட்டமோ, பயமோ காணப்படாததுதான். நிலமை விபரீதமாகப் போகத்தொடங்கியதை உணர்ந்த ஸ்ரிவ் வோஹ் தனது இரு சம்பியன் பந்துவீச்சாளர்களான shane warne ஐயும் Mc grath வையும் அழைத்து அவர்களுக்கு ஏற்றவாறான களத்தடுப்பையும் (fielding) ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் லக்ஷ்மன் அசரவில்லை. தொடர்ந்து நிதானமாக ஆடத்தொடங்கினார்.
3வது நாள் காலையில் ஆடுகளம் (Pitch) ஓரளவு காய்ந்து காணப்பட்டது. ஆடுகளத்தின் மேல் ஆங்காங்கே பந்து வீச்சாளர்களின் கால் தடங்கள் சிறிய வெடிப்புக்களையும் சிறு குழிகளையும் உருவாக்கத் தொடங்கியிருந்தன. இப்படியான சந்தர்ப்பத்தில் அதாவது ஒரு ரெஸ்ற் போட்டியின் 2ம் நாள் தொடங்கி அதன் முடிவு வரை சுழல் பந்து வீச்சாளர்கள் மிக முக்கியமானவர்கள். ஐந்து நாட்கள் வரை செல்லும் ரெஸ்ற் போட்டியின் ஒவ்வொரு நாளும் ஆடுகளத்தில் மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த மாறுதல்கள் நாட்டுக்கு நாடு, அவற்றின் புவிசார் தன்மைகள் மற்றும் காலநிலை, மண்ணின் தன்மை போன்ற காரணிகளால் மாறுபடும், ஆனால் எந்த நாட்டில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் ரெஸ்ற் போட்டியை பொறுத்த வரை சுழல் பந்து வீச்சாளர்கள் முக்கியமானவர்கள். நாளுக்கு நாள் மாறிக்கொண்டும் பழுதடைந்து கொண்டும் வரும் ஆடுகளத்தில் சுழல் பந்தை எதிர்த்தாடுவது இலகுவானதல்ல. அதிலும் உலகின் தலை சிறந்த சுழல் பந்து வீச்சாளரான Warne. ரெஸ்ற் போட்டியின் இரண்டாம் இனிங்ஸில் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளராகக் கணிக்கப்படுபவர். ஏனென்றால் ஆடுகளத்தில் (Pitch) ஏற்படுத்தப்பட்டிருக்கும் கால்தடங்கள் மீது பந்தை வீசி, பந்தின் சுழற்சியிலும், வேகத்திலும், போக்கிலும் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படச் செய்வதன் மூலம் துடுப்பாட்ட வீரனின் கவனத்தை சிதறடித்து விக்கற் எடுப்பதில் அவர் ஒரு கில்லி. உலகின் பல சுழற்பந்து விற்பன்னர்கள், (முரளி உட்பட) பல சாதனைகள் செய்திருந்தாலும் இந்த விசயத்தில் எனக்கு ஏனோ வார்ன் எல்லோரையும் விட சிறந்தவராகத் தெரிகிறார் இது எனது தனிப்பட்ட கருத்து. ( முரளி ரசிகர்கள் பொறுத்தருள்வார்களாக. முரளி Vs Warne யார் சிறந்தவர் அடுத்த பதிவில் எழுதவுள்ளேன் இருவரின் சாகசத்தையும் அதில் பார்ப்போம்) நிலையற்ற வேகத்திலும் சுழற்சியிலும், போக்கிலும் செல்லும் ஒரு பந்தை அடிப்பதென்பது, அதுவும் Shane Warne இன் பந்தை எதிர்த்து அடிப்பது என்பது சாதாரண துடுப்பாட்ட வீரனால் முடியாத விடயம்.
வார்ன் பந்து வீசத்தொடங்கியதும் லக்ஷ்மன் ஒரு தந்திரம் செய்தார் அதுதான் கிரிக்கற் தியரியையே ஆட்டங்காணச் செய்த தந்திரம். அது என்னவென்றால் leg spinner ஆன வார்னின் பந்துகளை அவரின் சுழலுக்கு (Spin) இற்கு எதிராக Long on ஐ நோக்கி அடிக்கத் தொடங்கினார். இங்குதான் அந்தப் போட்டியின் போக்கையே தலை கீழாக மாற்றிய லக்ஷ்மனின் புத்திசாலித்தனமும், தன்னம்பிக்கயும், கிறிக்கற்றின் தியறியை மாற்றிய சாணக்கியமும் ஆரம்பமாகியது. அப்படி என்னதான் லக்ஷ்மன் வித்தியாசமாக செய்தார் என்பதை ஆராய்வதற்கு முன் கிறிக்கற்றின், சுழல் பந்துவீச்சுக்கு எதிராக (Spin Bowling) எப்படி விளையாட வேண்டும் என்பதை, பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
கிறிக்கற்றை பயிற்றுவிக்கும் coaching Manual ல், சுழல் பந்துவீச்சுக்கு எதிராக விளயாடும் போது மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது என்ன என்பதைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
இந்த அழகிய விளையாட்டில் பலவிதமான சுழல் பந்து வீச்சுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகான திறமைகள். Off spin. Leg spin, finger spin, Orthodox, Mystery spin, Carom board spin, china-man, ….இப்படி இன்னும் பல்வகை சுழல் பந்து வீச்சுக்கள் இருக்கின்றன, இதில் முரளியும், ஹர்பஜன் சிங்கும் Off Spin பந்து வீச்சாளர்கள், Shane Warne ம் அனில் கும்ப்ளேயும் Leg spin பந்து வீச்சாளர்கள், ஆனால் எவர் என்ன விதமாகப் பந்து வீசினாலும் அந்தப் பந்தை அது சுழன்று செல்லும் பக்கத்தை நோக்கி அல்லது அதன் சுழலும் பாகைக் கேற்பவே அடிக்க வேண்டும்.( Playing with spin) இதை எக்காரணத்தைக் கொண்டும் சுழற்சிக்கு எதிராக ( Against Spin) அடிக்கக் கூடாது.காரணம் சுழலுக்கு எதிராக அடிக்கும் போது பந்து மீண்டும் பந்து வீச்சாளரிடம் சென்று பிடிபடும் வாய்ப்பு 100க்கு 99 வீதமாகக் காணப்படுகிறது. . மற்றயது பந்துக்கு குறுக்காகவும் அடிக்கக் கூடாது. (Cross shot) இதுடான் அந்தத் theory சாராம்சம். இதன்படிதான் உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் காலகாலமாக விளையாடி வருகிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள். எல்லா சர்வதேசப் பயிற்சியாளர்களும் இதன் அடிப்படையில் தான் தமது பயிற்சியை மேற்கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தியறியை, இந்தப் பாரம் பரியத்தை லஷ்மன், வார்னின் Leg spin பந்துகளை தொடர்ந்து அந்தப் பந்தின் சுழலுக்கு(Spin) எதிராக Long on இன் Boundary களை நோக்கி வெற்றிகரமாக அடித்து பொய்யாக்கினார். எப்படி அவரால் இந்தத் தியறியை பொய்யென நிரூபிக்க முடிந்தது??? வெற்றிகரமாக சுழலுக்கு எதிராக எப்படி ஆடமுடிந்தது????
லஷ்மன் செய்தது இதுதான்; பந்தின் சுழலுக்கு எதிராக அடிக்கும் போது Bat இனை கீழே (close bat) பார்க்கும் வண்ணம் பிடித்தபடி, பந்து Bat ஐ சந்திக்கும் போது கொஞ்சமும் தளம்பாமல், சிறு அசைவு கூட இல்லாமல் உறுதியாக பிடித்தபடி அடித்தால் அவர் (Batsman) எதிர்பார்க்கும் இடத்துக்கு பந்தை செலுத்தமுடியும் என்பதை அன்று அவர் நிரூபித்தார். இது கிறிக்கற்றை பொறுத்தவரை ஒரு புரட்சி என்றே சொல்ல வேண்டும். நூறாண்டு பழமையான கிரிக்கற்றில், Spin இற்கு எதிர்ப்பக்கமாக தொடர்ந்து அடித்து வெற்றிபெற்றது லஷ்மன் ஒருவரே. இதில் இன்னொரு சிரப்பு என்னவென்றால்; ஒரு கப்ரனானவன், தனது முக்கியமான சுழல் பந்து வீச்சாளன் பந்து வீசும் போது, அந்த சுழல் பந்தின் திசையிலேயே ( leg side or off side) அதிக Fielders இனை நிறுத்துவான். ஏனென்றால் எந்தவொரு முன்னணி துடுப்பாட்ட வீரனும், கிறிக்கற் தியறிக்கு ஏற்பவே விளயாடுவார்கள் அப்படி விளயாடும் போது சுழலின் திசையிலேயே பந்தை அடிப்பார்கள் எனும் நம்பிக்கை ஆகும்.இதுதான் யதார்த்தமும் கால காலமாக நடப்பதும் கூட. ஆனால் இந்தத் தியறியும் லஷ்மனின் விடயத்தில் தலைகீழாகிவிட்டது.
அதைப் பற்றி வரும் வாரங்களில் பார்ப்போம்.

No comments:
Post a Comment