( லக்ஷ்மன் தனது குடும்பத்துடன் )
Steve Waugh தனது Fielders இனை Shane Warne இன் சுழல்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு நிறுத்தியதும் லஷ்மன் சுழலுக்கு எதிராக அடிக்கத்தொடங்கியது இன்னொருவிதமான சிக்கலை Steve Waugh வுக்கு உண்டுபண்ணியது. சுழலுக்கு எதிர்பக்கம் இரண்டே இரண்டு காப்பாளர் நின்றதால் லஷ்மன் தொடர்ந்து அதிக பவுண்டரிகள் அடித்து ஓட்டங்களை மிக விரைவாகக் குவிக்கத்தொடங்கியதுதான் அந்தச் சிக்கல். தாம் நினைத்ததைப் போல் லஷ்மன் இலகுவான வீரரல்ல என்பதையும் அவருக்கு களத்தடுப்பு ஏற்படுத்துவது இலகுவானதல்ல என்பதையும் கிறிக்கற்றில் பழுத்த அனுபவ சாலியான Steve Waugh புரிந்து கொண்டார். இந்த வேளையில் விக்கற்றுக்கு இருபக்கமும் ஒரே மாதிரியான பலத்துடன் விளையாடும் ஆற்றலைக் கொண்ட லஷ்மனின் திறமை பற்றி உலகின் அதிக விக்கற்றுக்களை கைப்பற்றிய சாதனையாளர் முத்தையா முரளீதரன் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.;
லஷ்மனிடம், விக்கற்றின் இரு பக்கமும் ஒரேமாதிரி விளையாடக் கூடிய திறமை இருப்பது, எதிரணிக் கப்ரன்களிற்கு மிகுந்த தலையிடியை கொடுக்கிறது. அவரால் எப்படியான பந்தையும் எப்பக்கத்துக்கும் அடிக்க முடியும் என்பதால் எதிரணிக்கப்ரன்கள் களத்தடுப்பாளர்களை( Fielders) நிறுத்த முடியாமல் திண்டாடுவார்கள்.
( ஷேன் வார்னும் ஸ்டீவ் வாஹும் )
லக்ஷ்மன் தொடர்ந்து பவுண்டரிகள் எடுத்து ஓட்டங்களை அதிரடியாக உயர்த்திக் கொண்டிருந்ததால் அவரை அவுட்டாக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர் ரன் குவிக்கும் வேகத்தை குறைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு Steve Waugh தள்ளப்பட்டார். அதாவது இதுவரை Attacking field setup ல் இருந்து Defensive field setup ற்கு தள்ளப்பட்டார். இதுதான் அந்தப் போட்டியில் லக்ஷ்மன் அவ்ருக்குக் கொடுத்த முதல் அடி.. நெத்தி அடி. எனவே, Shane Warne உடன் கலந்தாலோசித்து இருவரும்,அடுத்த தந்திரமான (tactic) எதிர்மறையான பந்துவீசும் தந்திரத்தை (Negative Bowling tactic) பிரயோகிக்கும் முடிவை எடுத்தார்கள். Negative Bowling tactic என்பது, வலது கை துடுப்பாட்ட வீரரான லஷ்மனுக்கு அவரின் Leg Stump இற்கு வெளியே பந்தை வீசுவதன் மூலம் அவரால் பந்தை அடிக்க முடியாமல் பண்ணுவதை குறிக்கும். 2004/ 2005 என்று நினைக்கிறேன், இந்தியாவுக்கு Nasser hussein ( இவரின் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தமிழ் இஸ்லாமியர்) தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, சச்சினை வீழ்த்துவதற்கு இதே தந்திரத்தைத்தான் பிரயோகித்தார்கள். Ashley Gilles என்ற இங்கிலாந்தின் சுழல் பந்து வீரர் நாசீரின் கட்டளைக்கிணங்க, சச்சினுக்கு எதிராக இப்படியான பந்து வீச்சை மேற்கொண்டு கணிசமான வெற்றிகளையும் பெறுள்ளார். கிறிக்கற் உருவாகிய நாடான இங்கிலாந்து அணி இப்படியான முறையில் சச்சின் ரெண்டுல்கரை ஆட்டமிழக்க வைக்க முயன்றதை , நீண்ட கிறிக்கற் பாரம்பரியத்தை கொண்ட அந்த நாட்டின் முன்னை நாள் வீரர்களாலும், வயதான ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் எதிர் விமர்சனத்தை நாசீர் சந்திக்க வேண்டியிருந்ததுடன், அவரின் கிறிக்கற் வாழ்க்கையில் ஒரு களங்கத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்தி விட்டது. இன்றுவரை எந்த ஒரு கிறிக்கற் வல்லுனரும், எங்காவது Negative Bowling இனை பற்றி உரையாட முற்படும் போது, இந்தச் சம்பவத்தைத்தான் உதாரணத்துக்கு சொல்லுவார்கள். நசீர் ஹுசேனை பொறுத்தவரை, இது துரதிர்ஷ்ட வசமானது.
Add caption
( நசிர் ஹுஸெய்ன் )
தனது கப்ரனின் கட்டளைக்கு இணங்கவும், வேறு வழி இல்லாததாலும் Warne எதிர்மறை பந்துவீச்சை லஷ்மனுக்கு எதிராகத்தொடங்கினார். ஆனால் எதை எதிர்பார்த்து ஆஸ்திரேலியர்கள் தங்களது தந்திரத்தை மாற்றினார்களோ அது நடக்கவில்லை. இவர்கள் என்ன விதத்தில் பந்து வீசப் போகிறார்கள் என்றும், இவர்களின் தந்திரம் என்னவென்பதையும் உடனேயே கிரகித்துக் கொண்ட லக்ஷ்மன், தனது Batting Style இனை உடனேயே ஆஸ்திரேலியர்களுக்கு பதிலடி கொடுக்குமுகமாக மாற்றிக் கொண்டார். வார்ன் leg stump இற்கு வெளியே பந்தை போடும் போது ,அந்தப் பந்து ஆடுகளத்தில் விழமுன்னரேயே ஆடுகளத்தின் உள்ளே முன்னே வந்து,தனது Bat இனை உள் இழுத்து வெளியே அடிக்கும் தந்திரமான In and out ஐ பயன் படுத்தி அந்தப் பந்துகளையெல்லாம் தனது off side ற்குள் விளாசத்தொடங்கினார். நண்பர்களே உண்மையில் இந்தியக் கிறிக்கற்றுக்கு மட்டுமல்ல உலக கிறிக்கற்றுக்கே அது ஒரு பொன்நாள் என்றுதான் அந்தநாளை குறிப்பிடுவேன். பின்பு பத்திரிகையாளரிடம் Shane warne இப்படிக் கூறினார்:
எனக்கு என்ன செய்து லக்ஷ்மனை அடித்தாடாமல் கட்டுப் படுத்துவதென்றே தெரியவில்லை.என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. யுத்த களத்தில் எதிரியின் முன் நிராயுதபாணியாக நிற்பது போலிருந்தது எனது நிலை. இப்படிச் சொன்னவர் உலகின் இரண்டாவது அதிக விக்கற்றுக்களை கைப்பற்றிய சாதனையாளன் Shane Warne.
இதற்கிடையில் மற்றய பக்கத்தில் 35.6 வது ஓவரில் ரெண்டுல்கர் 10 ரன்னுடன் அவுட்டாகிப் போக, 66.4 வது ஓவரில் கங்குலி 48 ஓட்டங்களுடன் அவுட்டாகிச் செல்லும் போது இந்தியாவின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 232 -4 என்ற கணக்கில் இருந்தது. இந்த நிலையில் லக்ஷ்மனுடன் கூட்டுச் சேர்ந்து விளையாட வந்தவர், இந்தியாவின் தடுப்புச் சுவர் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப் படும் ராகுல் ட்ராவிட் ஆகும். இவர்கள் இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதாலோ என்னமோ இருவருக்கும் இடையில் எப்போதுமே நல்ல நட்பும். புரிந்துணர்வும் உண்டு. இருவரின் விளையாட்டைப் பற்றியும் இருவரும் நன்கறிவர். ட்றாவிட் ஒரு முறை பேட்டியில் கூறும்போது ஸ்லிப்பில் நின்று, தானும் லக்ஷ்மனும் களத்தடுப்பில் ஈடுப்ட்டுக் கொண்டிருக்கும் போது, பந்து வீச்சாளர் பந்து வீசாத வேளையில் தாம் இருவரும் தத்தமது பிள்ளைகளின் படிப்பை பற்றியும், தமது குடும்பத்தில் நடந்த, நடக்க இருக்கின்ற விஷேஷங்கள் பற்றியும் கதைத்துக் கொள்வதாக கூறியிருந்தார்.அவ்வளவு நெருக்கமானவர்கள் இந்த இருவரும்., சரி விடயத்துக்கு வருவோம்:
இதே வேளை மறுபுறத்தில் பந்துவீசிக்கொண்டிருந்தவர், உலகின் வேகப்பந்து வீச்சாளர்களில் முதல் பத்துப் பேருக்குள் வரக் கூடியவரும், ஆஸ்திரேலியர்களின் தொடர்வெற்றிக்கு காரணமானவர்களில் முக்கியமானவருமான Glen McGrath ஆவார். ஆஸ்திரேலியாவின் ஸ்ரார் பந்து வீச்சு இரட்டையர்கள் இவரும் வோர்னும் ஆகும். இவர் பந்து வீசும் போது சரியான இடத்தில், சரியான வேகத்தில், சரியான நீளத்தில், துடுப்பாட்ட வீரர்களிற்கு ஏற்ற விதத்தில் மாற்றி மாற்றி வீசுவதுதான் இவரின் வெற்றியின் ரகசியம். இவரின் இந்தச் சிறப்புக்கு நல்லதோர் உதாரணம், முதலாவது இனிங்சில் 18 overs பந்து வீசி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கற்றுக்களை எடுத்தது ஆகும். இந்த 18 ஓவர்களில் 8 ஓவர்கள் maiden overs ஆகப்போட்டது இதன் தனிச்சிறப்பு.( 18@Overs, 8@Maidens 14@Runs 4@wickets, Average 1.28 ) இது சாதாரண பந்துவீச்சாளர்களால், சச்சின், ட்ராவிட், கங்குலி, லக்ஷ்மன் போன்ற உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக செய்ய முடியாத சாதனை. சரி இவரை லக்ஷ்மன் எவ்வாறு இரண்டாவது இனிங்சில் கையாண்டார் ??? அதை புரிந்து கொள்ள லக்ஷ்மனுக்கு இருக்கும் ஒரு அபூர்வத் திறமையை பற்றி தெரிந்து கொள்வோம்.
( விஜய் மஞ்ரேக்கர் )
உலக கிறிக்கற்றில் இந்திய துணைக்கண்ட வீரர்கள், முக்கியமாக இந்திய வீரர்கள் வித்தியாசப்படுவது இரண்டு முக்கிய விடயத்தில் அவை:
1- சுழல் பந்து வீச்சிலும், அதை எதிர்த்தாடுவதிலும் வல்லவர்கள்
2- கையின் மணிக்கட்டை ரப்பர் போல வளைத்து பந்தை லாவகமாக திருப்பும் (Wrist shots) இயல்பு உள்ளவர்கள்.
இதில் சுழல் பந்துக்கு எதிராக விளையாடும் திறமை முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் எல்லோருக்கும் இயற்கையாகவே அமைந்துள்ளது என்றே சொல்லலாம். காரணம், இந்திய துணைக்கண்ட பிச்சுக்கள், அவை அமைந்துள்ள மண்ணுக்கு ஏற்ற வகையில் பந்தை அதிக அழவில் திருப்புகின்றன. எனவே சிறுவயதில் இருந்து அந்தச் சுழலையும், சூழலையும் சமாளித்து விளையாடிப் பழகிப் பழகி தம்மையறியாமலேயே சுழல் பந்துக்கு எதிராக திறம்பட விளையாடத் தொடங்கி விடுவார்கள். தற்போதைய வீரர்களில் இந்தியாவின் கம்பீரும், இலங்கையின் மகேல ஜெயவர்தனா வும் சுழல் பந்துக்கு எதிரான மிகச் சிறந்த வீரர்கள். கடந்த உலகக் கோப்பையில் முத்தையா முரளிதரனுக்கு எதிராக கம்பீர் மிக லாவகமாக விளையாடி, இந்திய அணியை, எப்படி வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என்பது இறுதிப்போட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும்.
( குண்டப்பா விஸ்வநாத் )
இரண்டாவது அந்தச் சுழல் பந்துகளின் சுழலுக்கு ஏற்ப தமது மணிக்கட்டுகளை தம்மையறியாமலேயே சுழற்றத் தொடங்கி ஒருகட்டத்தில் அதில் பாண்டித்தியம் பெற்றுவிடுவார்கள். இந்த மணிக்கட்டை சுழற்றி விளையாடும் (Wrist shots ) திறமை பரவலாகக் காணப்படுகின்ற போதும், அந்தத்திறமை மிகச் சிலரிடம் மட்டும் மிக மிக உறுதியுடனும், பந்துவீச்சாளர்களை கிலி கொள்ளும் வண்ணமும் காணப்படுகிறது. இப்படியான அபூர்வ திறமைசாலிகள் ஒரு தசாப்தத்துக்கு ஒருவர்தான் உருவாகிறார்கள் எனக் காட்டுகிறது கிறிக்கற், முக்கியமாக இந்திய கிறிக்கற் வரலாறு. அந்த அபூர்வ ஆற்றலுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டோர் வருமாறு:
( அசாருதின் )
1- விஜய் மஞ்ரேக்கர் (Vijay Manjrekhar)
2- ஜெயசிம்மா (Jeyasimmaa)
3- குண்டப்பா விஸ்வநாத் (Gundappa Visvanaath)
4- மொகமட் அசாருதீன் (Mohamad Azzarudin)
5- அந்த வரிசையில் இறுதியாக நம்ம ஹீரோ லக்ஷ்மன் (V.V.S.Laxman)
சரி இந்தத் திறமையை கொண்டு எப்படி McGrath வை சமாளித்தார்?? சக துடுப்பாட்ட வீரர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்த McGrath, லக்ஷ்மனை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் ?????
வரும்….. வாரங்களில் வரும்..


No comments:
Post a Comment