
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி , முதலில் போட்டியிட்ட மூன்று ரெஸ்ற் போட்டிகளிலும் படுதோல்வியை அடந்ததுடன் அதன் முன்னணி வீரர்கள் பலர் காயத்துக்கும் உள்ளானார்கள். இதில் முக்கியமானவர் தற்போதைய ஐ.சி.சி.யின் தர வரிசையின் படி உலகின் நம்பர் 1 துடுப்பாட்டவீரராக கௌரவிக்கப் பட்ட குமார் சங்கக்கார ஆவர்.
குமார் சங்கக்கார உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த விக்கட் காப்பாளருமாவார். இலங்கை போட்டியிடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் நிரந்தர விக்கட் காப்பாளரான இவருக்கு ஏற்பட்ட காயத்தின் பின், இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்ற வேண்டியிருந்தது.
அவரில்லாத இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் எப்படித்தாக்குப் பிடிக்கப் போகின்றதோ என்ற கேள்விதான் ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள், மற்றும் உலக கிரிக்கெட் ஊடகங்களிலும் எழுப்பப் பட்டது. ஆனால் நடந்ததோ எதிர்மாறானது, காயம் காரணமாக சங்கா விளையாட முடியாமல் போனது பெரும் நன்மையையே இலங்கை அணிக்கு ஏற்படுத்தி விட்டது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் திருமானே என்ற மற்றொரு இளம் வீரன் மிகப் பொறுமையாக ,அனுபவ ஆட்டக்காரனைப் போல் விளையாடி இலங்கைக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். ஆஸ்திரேலிய அணியை வெல்லுவதற்கு எடுக்க வேண்டிய ஓட்டங்கள் குறைவான அழவில் இருந்த போதும் அவரின் வயதுக்கும் அவரின் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய மிகக் குறைவான அனுபவத்துடனும் ஒப்பிடுகையில் திருமானேயின் ஆட்டம் மிகப் பொறுப்பு வாய்ந்ததாக இருந்தது. இவர் நடந்து முடிந்த ரெஸ்ற் போட்டி ஒன்றிலும் மிகச் சிறப்பாக பொறுமையாக ஆடி 91 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தனது Debut Century யை ஆஸியில் எடுப்பார் என எதிர்பார்த்திருந்த வேளை ஆட்டமிழந்து தன்னை நொந்த படி பவிலியனுக்குள் போனது பரிதாபமானது. அன்று விட்ட சென்சுரியை இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அட்லெய்டில் போட்டியின் இறுதிநேரத்தில் அடித்து அந்தப் போட்டிக்கே ஒரு விறு விறுப்பை ஏற்படுத்தினார்.. இவரை சதமடிக்க வைத்ததும் சங்கக்காரவின் காயம்.
ஏனெனில் வழமையாக சங்கா 3வது வீரராக முதலாவது வீரர் அவுட்டானவுடன்தான் களமிறங்குவது வழக்கம். அதற்குப்பிறகுதான் மகேலா களமிறங்குவார். ஆனால் அந்தப் போட்டியில் மூன்றாவதாக சங்காவின் இடத்துக்கு மகேலா இறங்கி விளையாடினார் அதனால் கீழ்வரிசை துடுப்பாட்ட வீரனான திரிமானேவுக்கு 4வதாக களம் இறங்கி விளையாடும் வாய்ப்புக்கிடைத்ததால் அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பும், நிதானித்து விளையாடும் அவகாசமும் கிடைத்தது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டார். விளைவு அவரின் செஞ்சுரி. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில் சென்சுரி போடுவது ஒன்றும் லேசுப்பட்ட விடயமல்ல. உண்மையான தகுதி,திறமையுடன் சேர்ந்த வேகப் பந்துவீச்சுக்கு எதிரான ஆட்ட நுணுக்கம் தெரியாத எவராலும் இந்த மைதானக்கலில் ஒரிரு ஓவருக்கு மேல் நின்றுபிடிக்க முடியாது. அந்த வகையில் இளம் வீரன் திரிமானே இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமே.
அடுத்தவர் என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானவர், ஒருகாலத்தில் மிகப் பெரிய வீரராக வரப் போகின்றவர், அவர்தான் இளம் விக்கெட் காப்பாளர் குஷால் ஜனித் பெரேரா

இவர் இன்னும் கிரிக்கெட் உலகில் பிரபலமாகவில்லையென்றே தோன்றுகிறது. ஆக ஆஸியில் இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும் தான் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஆனால் இவரின் விக்கெட் காக்கும் technique மற்றும் பந்தை அடித்தாடும் technique ஆகியவற்றைப் பார்க்கும் போது இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கின்றது என்பது துல்லியமாகத் தெரிகிறது. 23 வயதேயுடைய இவரின் தோற்றமும் அழவும், Body language ம் முக்கியமாக பந்தை அடிக்கும் Styleம் அப்படியே சனத் ஜயசூரியாவை கண்முன் கொண்டுவருகிறது. விக்கட்டுக்கு விக்கட் ஓடும் வேகமும் அச்சு அசலாக ஜெயசூரியாதான். சனத் ஜெயசூரியா ஒரு Lower arm batsman. அவரது அதிரவைக்கும் அடிகளில் கீழ்க்கையின் ஆதிக்கமே அதிகமிருக்கும்.அதே போலவே குஷால் பெரேரவின் Styleம் இருப்பது இவர் அவரைக் கொப்பி பண்ணுகிறாரா, அல்லது சிறு வயது முதல் ஜெயசூரியவைப் பார்த்து வளர்ந்ததால அவரின் Inspiration காரணமா??, அல்லது இயற்கையாகவே இவருக்கு இந்தத் திறமை கைவந்ததா எனச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் எது எப்படியோ இவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
இந்த மூன்று இலங்கையின் எதிர்கால கிரிக்கெட்டர்களை, அதுவும் மிகத்தைறமைசாலிகளான கிரிக்கெட்டர்களை அடையாளம் காண வைத்தது சங்கக்காரவின் காயம் தான். இது சங்கக்காரவைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானாலும், இலங்கைக் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அதிர்ஷ்டக் காயம்
No comments:
Post a Comment