Sunday 30 June 2013

என்னைச் சிந்திக்க வைத்த சினிமாக்கள் – 1 ( NO Man's Land )

திரும்ப திரும்ப அரைச்ச மாவையே அரைக்கும் சினிமாவை விட்டிட்டு கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது பாத்தால் என்ன?? எண்டு மனசு சொன்னதாலை சில வருஷங்களுக்கு முந்திப் பாத்து சிந்திக்க வைச்ச ஒரு ஆங்கில படத்தை தேடி எடுத்து இன்னுமொருக்காப் பாத்தன். அந்தப் படத்தை முதலிலை நான் பாத்தது 2009க்கு முதல் இப்ப பாக்கிறதுக்கும் அப்ப பாத்ததுக்கும் கனக்க வித்தியாசம் தெரிஞ்சிது. அந்தப் படத்தை 99ம் ஆண்டுக்கு முதலிலை பாக்கேக்கை எனக்கிருந்த மன முதிர்ச்சி, கண்டவை கேட்டவையால் பெற்ற அனுபவம், உலகத்தைப் பார்க்கும் பார்வை போன்ற காரணிகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றத்துக்கும் இப்போ பாத்த போது அதே காரணிகள் ஏற்படுத்திய மாற்றத்துக்கும் நிரம்ப வித்தியாசம். இப்போ அந்தப் படத்தை மிக நன்றாக என்னால் புரிஞ்சுகொள்ள முடியுது. முதலில் பார்த்தபோது சினிமாவாக பார்த்த காட்சிகளில் இப்போ ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை உணர்ந்து ஒன்றித்து திகைக்க முடியுது. அப்போது விறு விறுப்பில்லாமல் தொய்வாக சென்றகாட்சிகள் ஏன் அப்படி எடுக்கப் பட்டிருக்கிறது என்ற உண்மை இப்ப நல்ல வடிவாப் புரியுது. அந்தப் படத்தின்ரை பேர் “NO MAN LAND” யூகோஸ்லாவியா என்ற நாட்டுக்குள் இணைக்கப்பட்ட சேர்பிய பொஸ்னிய நாடுகள் தமக்குள்ளே அநெஇயாயத்துக்கு மோதிக் கொண்ட உள்நாட்ட்டுப் போர் சம்பந்தப் பட்ட ராணுவப் படம்.

  நள்ளிரவில் நடந்து ரோந்து போகும் பொஸ்னியன் இராணுவம் கடும் பனிப்புகாருக்குள் அகப்படுகிறது. ஆளையாள் முகம் தெரியாத அழவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டதால் அதற்குமேல் ரோந்து போவது ஆபத்து என்பதை உனர்ந்து அந்தக் கடும் பனி இருட்டில் அவ்வளவு இராணுவத்தினரும் இளைப்பாறுகின்றனர். விடிந்து பனி விலகியவுடன் பார்த்த போதுதான் நிலைமையின் விபரீதம் புரிகிறது. அவர்கள் தமது எதிரியான சேர்பிய ராணுவத்துக்கு மிக அருகில் இருப்பதை உணர்வதுடன் சேர்பியரின் ஆக்ரோஷமான தாக்குதலையும் எதிர்கொண்டு ஒவ்வொருவராக இறக்கின்றனர். இறுதியில் சிலர் தப்பி “NO MAN LAND” ற்குள் ( போரில் ஈடுபட்டிருக்கும் இரு இராணுவத்தின் எல்லைகளுக்கும் இடைப்பட்ட பகுதி. இந்தப் பகுதி மனித நடமாட்டத்துக்கு தடைசெய்யப் பட்டிருக்கும். இரு இராணுவமும் மனித நடமாட்டம் தெரிந்தால் சுட்டு வீழ்த்துவதற்காக குறிபார்த்துச்சுடும் துப்பாக்கியான Sniper உடன் 24 மணி நேரமும் கொலை வெறியுடன் காத்துக் கிடப்பர். ) பதுங்கி விடுகின்றனர். அவர்களை தேடி அழிப்பதற்காக சேர்பியா தனது ராணுவ வீரர்களை அனுப்புகிறது. அதில் ஒருவன் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் கொண்ட இளம் வீரன். அந்த சேர்பிய வீரனும், பொஸ்னிய வீரனும் எதிரெதிராக நேருக்கு நேராக சந்திக்கிறார்கள். அந்த மரணப் பொறியில் ஆயுதத்துடனும் சம பலத்துடனும் சந்தித்து மரணத்தின் விளிம்பில் நிற்கும்போது, அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் முறுகலையும் கருத்துப் பகிர்வையும், இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது இந்தப் படம். எந்த செக்கனிலும் எவருக்கும் மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலையிலும், யாரால் யுத்தம் தொடங்கியது என்று இருவரும் தமக்கு சார்பாக வாக்குவாதப் படுவது யதார்த்தத்தின் உச்சக்கட்டம், அந்த இராணுவ வீரர்களின் உயிரை இரு பக்கத்தாருமே துச்சமாக மதிக்காமல் எகத்தாளமாக இருப்பது யுத்தத்தைப் பற்றிய தெளிவை பலருக்கு புரியவைக்கக் கூடும் 

பொஸ்னியன் இயக்குனர் Danis Tanovic இன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் யூகோஸ்லாவியா என்ற நாட்டின் இருவேறு இனங்களிற்கிடையிலான யுத்தத்தைப் பற்றியது. கட்டாயத்தால் ஒன்றாக்கப் பட்ட பல்லின, பல முரண்பாடுகள் கொண்ட நாட்டில் பல்லாண்டுகாலமாக பரம வைரிகளாக இருக்கும் சேர்பிய இன இராணுவ வீரனும், அவர்களை வேற்று மனிதர்களாக, பரம வைரிகளாக கருதும் பொஸ்னிய இராணுவ (கிளர்ச்சிப்) படைவீரனினதும் மன உணர்வை பற்றியது., ,
சேர்பியாவுக்கும், பொஸ்னியாவுக்கும் இடையில் பகைமையை ஒழித்து பிரச்சினையை சுமுகமாக தீர்க்கப் போகிறோம் என்று உலகிற்கெல்லாம் பறைசாற்றிக்கொண்டு யூகோஸ்லாவியாவிற்குச் சென்ற ஐ.நாவின் அமைதிப்படையின் பொறுப்பற்ற தன்மையையும், அதன் தளபதியின் மிலேச்சாதிகாரத்தையும் இந்தப் படத்தில் பார்த்த போது உண்மையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. ஒரு பிரபல தொலைக்காட்சியின் போர் நிலவர செய்தியாளரின் வெளிப்பாட்டைப் பார்த்தபோது அமெரிக்க C.N.N. தொலைக்காட்சியின் யுத்தச் செய்தியாளராக இருந்து புகழ்பெற்ற பெண் நினைவுக்கு வந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை.
யுத்தத்தை பற்றிய படங்களென்றால் ஹீரோயிசத்தையும், அக்க்ஷனையும் காட்டி பிரமையை ஏற்படுத்தும் என நினைத்துப்பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் உண்மையையும், மனித உணர்வுகலையும், ஐ.நாவின் அமைதிப்படையை பற்றிய உண்மையான மறு பார்வை போன்றவற்றையுமே காட்டும்.

http://www.youtube.com/watch?v=HQpb8Y4-XzU

இந்தப் படத்தைப் பற்றி இன்னும் எழுத ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன ஆனால் வேகமாகிவிட்ட இந்த உலகில் சுருக்கமாக ஒன்றைச் சொல்லலாம்.
இந்தப் படம் போரில் யார் வென்றார்கள், எப்படி வென்றார்கள் என்பதை காட்ட எடுக்கப் படவில்லை… மாறாக போரின் வடுக்களைக் காட்டவும், அதனால் குளிர்காய்பவரைத் தோலுரித்துக்காட்டவும் எடுக்கப் பட்டிருக்கிறது. யாருக்குப் புரியுமோ இல்லையோ ஈழத்தமிழனால் துல்லியமாகப் புரிந்துகொள்ளக் கூடிய படம் இது. இதுவரை பார்க்காதோர் கட்டாயம் பார்க்க வேண்டிய தரமான படம் இது. இப்படியான படங்கள் தமிழில் வந்தால் எவ்வளவு நல்லாக இருக்கும்..??? வருமா??

Monday 1 April 2013

தமிழ்த் திரையிசையில் காணாமல் போன வாத்தியங்கள் – 2 பொங்கஸ் (Bongo Drums )

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலத்தில் அவர் இசையமைத்த திரையிசைப் பாடல்களில் பிரபலமாகக் காணப்பட்டு காலமாற்றத்துக்கு ஏற்ப காலவோட்டத்தில் காணாமல் போன எக்கோடியன் இசைக்கரிவியைப் போன்ற இன்னொரு இசைக்கருவி பொங்கஸ்  ( Bongo Drums) ஆகும்.

பொங்கஸ் ட்றம் என்றழைக்கப் படும்  இந்த வாத்தியம் காலத்துக்குக் காலம் அதன் தோற்றத்திலும் தரத்திலும் மாற்றமடைந்து வந்தாலும் அது இசை  உலகின் மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில்  உருவாக்கப் பட்டதாகக் கருதப்படும் இதன் பூர்வீகம் கியூபா எனக் கணிக்கப் பட்டுள்ளது. வித்தியாசமான அழவு கொண்ட இரண்டு ட்றம்ஸ் களை ஒன்றோடு ஒன்று சேர்த்துப் பொருத்துவதன் மூலம் பொங்கஸ் வடிவமைக்கப் படுகிறது. பெரிய ட்றம் இனை ஹெம்ப்றா ( hembra) என்று அழைக்கப் படுகிறது. இது ஸ்பானிய மொழியில் பெண்பாலைக் குறிக்கும். சிறிய Drum மஹ்கோ (macho ) என்று ஸ்பானிய மொழியில் ஆண்பாலாக அழைக்கப் படுகிறது. இதன் அழவு 6 – 7inch  தொடக்கம் 7 – 8.5 inch   ஆகும்.  ( சிறுவர்களுக்காக செய்யப்படுவது அழவில் சிறியதாகக் காணப்படும் )

1900இன் ஆரம்பத்தில் கியூபாவில் வாழ்ந்த ஆபிரிக்க ஸ்பானிய மக்களால் "changui`என்ற இசைக்கு/ பாடலுக்கு இசையாக இது பயன்படுத்தப் பட்டதாதாகவும் காலப்போக்கில் அதுவே மருவி இப்போதைய சல்சா ( Salsa ) ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

1900 தின் நடுப்பகுதியில் இந்த வாத்தியம்,  பொங்கோ மற்றும் ஜக் கோஸ்ரன்சோ என்பவர்களால் மிகப்பிரபலமாகி உலகின் எல்லா இசைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.  தற்போதும் உலகெங்கும் பிரபலமாகவுள்ள jazz ற்கு அடித்தளம் இந்த வாத்தியமென்றால் அது மிகையல்ல.

இதை இசைப்பவர்கள் தங்களின் இரு கால்களிற்கிடையிலும் தாங்கிப்பிடித்தபடியே விரல்களால் லாவகமாக  இசைக்கவேண்டும்.
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது.  அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன்  குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான்.  இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப,  தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
( பாடலைப் பார்க்க இங்கே சொடுக்கவும் http://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E )
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச்  சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில்  மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில்  மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில்  காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.  

அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார். ( பாடலைப் பார்க்க http://www.youtube.com/watch?v=nTO5U9tcNWU )

எக்கோடியனைப் போலவே 70 களின் கடைசியுடன் மெதுவாகக் காணாமல் போகத்தொடங்கி 80 களில் முற்றிலும் காணாமல் போய்விட்டது இந்த உலகின் பழம்பெரும் வாத்தியம்.

ஆனால் இந்தி இசையமைப்பாளர்களான ஆர்.டி. மற்றும் எஸ்.டி. பர்மன்கள் இறுதிவரை இந்த இசைக்கருவிமேல் எம்.எஸ்.விஸ்வநாதனைப் போலவே அதிக வாஞ்சை கொண்டிருந்தார்கள். அடிக்கடி தங்களின் பாடல்களில் பயன்படுத்தத் தவறியதில்லை.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலமாக தமிழ் திரையிசையில் அருகிப் போகத்தொடங்கியிருந்த பொங்கசின் ஓசையை எங்களின் 80களின் பாடல்களில் அதிகமாக கேட்கமுடியாமல் மனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன். ஆனால் மனதின் அடிமூலையில் உலகில் Trend setter ஆக விளங்கும் இந்த வாத்தியம் மீண்டும் தமிழ் தமிழ் திரையிசைக்கு வந்து ஒரு கலக்குக் கலக்கும் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருந்தது.

90களின் நடுப்பகுதி வரை இளையராஜா என்ற ஜாம்பவானால் கட்டிப்போடப்பட்டு அவரின் ஆதிக்கத்தில் சுகமான மெலடிப்பாட்டில் சங்காரித்துக் கொண்டிருந்த தமிழ் இசை ரசிகன் குடும்பஸ்தனாகி வாழ்க்கையில் பிசியாகிப்போனான்.

அந்த இடத்துக்கு புதிதாய் வளர்ந்த இளம் ரசிகனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது, அந்த நேரத்து இந்திய அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப, புதிதாய் தென்னாசியாவில் புகுந்து கொண்ட எம்.ரீ.வியைப் பார்த்த பாதிப்பினால் ஏற்பட்டதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த மாற்றம் , மாற்றான் தோட்டத்து மல்லிகையான உலக இசையை ரசித்துப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டதுதான்.
அதுவரை அமைதியான மெல்லிசையான தமிழ்த்திரையிசையைப் போற்றிப் புகழ்ந்தவர்களின் வழிவந்த வாரிசுகள், அட்டகாசமான கொம்பியூட்டர் இசையில் கவனத்தைத் திருப்பத் தொடங்கியதுடன் நில்லாது, உலகமயமாக்கலுக்கேற்ப உலகிலுள்ள வித்தியாசம் வித்தியாசமான இசைகளை நோக்கி எட்டிப்பார்க்கத் தொடங்கினர். இந்த வேளையில் காலமாற்றத்துக்கு ஏற்ப மணிரத்னத்தால் அறிமுகமானர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மான் அறிமுகமாகும் போது மிகச்சிறிய வயது. எனவே இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிவதில் அவருக்குக் கஷ்டம் இருக்கவில்லை. அதனால் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப உலகின் பல விதமான இசைச்சேர்க்கைகளையும் ,இசைக்கருவிகளையும் தமிழிசையுலகில் அறிமுகப் படுத்தினார். அப்படி அவர் jazz ஐயும் அறிமுகப்படுத்தினார். அந்தப் பாட்டுத்தான் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் சக்கைபோடு போட்ட முக்காலா ..முக்காபுலா.. ( முக்காலா..பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் http://www.youtube.com/watch?v=erwQhJImpfo ) இந்தப் பாட்டில் மீண்டும் பொங்கசையே போன்ற ஆனால் பொங்கசிலும் பார்க்க நவீனமானதும் பெரிதானதுமான ஒரு இசைக்கருவியை பயன்படுத்தினார் அதன் பெயர்  Tumba (drum) ஆகும். முக்காலா பாட்டுக்கு இந்த Tumba (drum) ஆற்றிய பங்கிருக்கே… அப்பாடா அதைப் பற்றி விளக்கத்தேவையில்லை, காரணம் அது உலகத்துக்கே தெரிந்த விடயம்.

இந்தப் பாட்டுப் பெற்ற அமோக வரவேற்பின் பின் மீண்டும் அனேகமான இசையமைப்பாளர்கள் பொங்கொஸ் போன்ற ஆனால் அதைவிட நவீனமான கொங்கோ, ரும்பா போன்ற இசைக்கருவிகளைப் பாவிப்பதைக் கேட்ட்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் எனக்கென்னமோ எம்.எஸ்.வி. அழவுக்கு அவற்றை ஆழமாக ஒருவரும் இப்போ பயன்படுத்துவதில்லை என்ற எண்ணம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

Thursday 14 February 2013

ஆறாங்கிழமையின், ஆறா வடு..

Add caption

இந்தியாவில் 2001இல் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியாகக் கணிக்கப் பட்டு மரணதண்டனைக்குள்ளான Afzal Guru,வைப் பற்றி முகநூல் நண்பர் Narayana moorthy@
யின் பதிவு கீழ்வருமாறு முடிகிறது.

அப்சலுக்கு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்சநீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறார்,

"1. அப்சல் குரு எந்த ஒரு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை,

2. பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டார் என்பதற்கு எந்த வித முகாந்திரமும் ஆதாரமும் இல்லை, ஆனால்

3.இந்தியாவின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கபடுகிறது" என தீர்பளித்தார்
இந்தியாவின் கூட்டு மனசாட்சி யார்?

இந்தியாவின் கூட்டு மனசாட்சி யார்??? என்ற கேள்வியுடன் முடிந்த மூர்த்தியின் பதிவு எனது மனசாட்சியை தட்டி எழுப்பியது.

Add caption
  அது 1988 இன் தொடக்க மாதங்களில் ஒன்று. இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கும் போராளிகளுக்கும் அகோர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். இலங்கையின் வட கிழக்கில் கொலைகள் மலிந்திருந்தது. அடுத்த நிமிடத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஷெல் வந்து விழுமா.. ஹெலிகளில் இருந்து குண்டுமழை பொழியப் படுமா.. கடலில் இருந்து பீரங்கித்தாக்குதல் மக்கள் மேல் நடாத்தப் படுமா ?? மரணம் பிடரிக்குப் பின்னிருந்த காலமது. மக்கள் பீதியுடன் இருந்தார்கள்.

இநதப் போரை யாருமே எதிபார்த்திருக்கவில்லை. பல்லாண்டுகளாக தாம் அடைந்துவரும் வேதனைகளுக்கு ஒரு முடிவு வந்துவிட்டது என்று எல்லோரும் மகிழ்ந்திருந்த நேரத்தில் மீண்டும் யுத்தம்.

சில மாதக் கடும் யுத்தத்தின் பின் போராளிகளின் பெரும்பான்மையானோர் காட்டுக்குள் சென்று விட்டார்கள் என்றும் அமைதிப்படையின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் குடாநாடு வந்து விட்டது என்றும் பேசப் பட்டது.

முழத்துக்கு முழம் இந்திய ராணுவக் காவலரண்கள். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் ஜவான்கள்.எல்லோருக்கும் எல்லோரிலும் சந்தேகம். ஆனால் போராளிகளின் தளபதிகளும் கட்டுப்பாட்டாளர்களும் யாழ்குடாவை விட்டுப் பின்வாங்கியிருந்தாலும் அவர்களின் சிறு தாக்குதல் பிரிவுகள் ஒரிருவராக செயல்படத் தொடங்கியுள்ளார்கள் என்பதை ஆங்காங்கே நடக்கத் தொடங்கிய சிறு தாக்குதல்களை பத்திரிகைகள், வானொலிகள் வாயிலாக வெளியாகத்தொடங்கின.. எதிர்வரும் காலங்கள் எவ்வளவு கொடுமையானவையாக இருக்கப் போகின்றன என்பதை யுத்தத்துக்குள் பல வருடங்களாக வாழ்ந்த ஒவ்வொரு ஈழத்தமிழனும் உணரத்தலைப்பட்டான்.

காரணம் இனிவருங்காலங்களில் ஒவ்வொரு இளைஞனையும் இளைஞியையும் இந்திய ராணுவத்தினர் சந்தேகத்துடனேயே பார்ப்பர் என்பதும், அவர்களுக்குத் தெரியாத , புதிய மொழி பேசும் மக்களை பீதியுடனேயே எதற்கும் அணுகுவார்கள் என்பதும் எவராலும் விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றுதானே.
மறு புறத்தில் தமது அமைப்பின் பெரும்பாலானவர்களையும், கட்டுப்பாட்டாளர்களையும், தளபதிகளையும் விட்டுத்தனித்து ஒரிருவராக இயங்கத் தொடங்கிய போராளிகள் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவான தாக்குதல்களும் எவ்வளவு தூரத்துக்கு நிதானமானதாகவும், நியாயமானதாகவும் இருக்கப் போகின்றது என்ற கேள்வியும் யுத்தத்துக்குள் பல வருடங்களாக இருந்து அனுபவித்த ஒவ்வொரு ஈழத்தமிழனுக்குள்ளும் எழுந்தது.

நாட்டுக்குள் ஆரம்பித்த அகோர யுத்தம் படிப்படியாக காட்டிற்குள் சென்றிருந்தது. தொடர் ஊரடங்குச் சட்டத்தை அமுல் படுத்தியிருந்த அமைதிப்படை கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தளர்த்தி இரவு 7 மணிவரை மக்கள் நடமாடலாம் என அறிவித்தது. பல மாதங்களாக மரவள்ளிக் கிழங்கையும் சம்பலையும் இடைக்கிடை சிறிதளவு சோற்றையும் மட்டுமே உணவாகக் கொண்டிருந்த எமக்கு அது பேராறுதலாக இருந்தது. அப்போதைய அந்த இருண்ட நாட்களில் ஒரு நாள் எங்கள் ஊரின் பெரிய கோயிலில் ஆறாம் கிழமை எனும் பெருநாள் காலம் ஆரம்பித்திருந்தது.

ஆறாம் கிழமை என்பது ஒவ்வொரு ஆண்டினதும் ஆரம்ப மாதங்களில் எங்கள் ஊரின் பெரிய கோயிலில் நடக்கும் பெருநாளாகும். சிறு வயதில் இருந்தே எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இந்த விழாக்காலம் பேரானந்தத்தை அளிக்கும் ஒன்று. விழா தொடங்கியதும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு (Loud Speakers ) பக்திப் பாடல்கள் மற்றும் சினிமாப் பாடல்கள் என பெரிய சத்தத்துடன் அலற விடப்படும். இது பெருநாளுக்கான கட்டியம் எனச் சொல்லலாம். அந்த நாட்களில் இந்த ஒலி பெருக்கிகளின் காதைப் பிளக்கும் ஒலி கொடுக்கும் உவகையை சொல்ல வார்த்தையில்லை. பலூன் வியாபாரிகளும், விளையாட்டுப் பொருட்களை விற்பவர்களும் ,ஐஸ்கிறீம் வாகனங்களும், தும்பு மிட்டாஸ் விற்பவர்களும், கடலை முதற்கொண்ட நொறுக்குத்தீனி விற்போரும் கோயிலைச் சுற்றி, சிறு சிறு தற்காலிக கூடாரங்கள் அமைத்து அதற்குள் தமது நடைபாதைக்கடைகளை போடுவார்கள்.

எனது சிறுவயதுக்காலத்தில் அங்கே விற்கப்படும், பல வண்ணத்தினாலான காட்போட்டில் செய்யப்பட்ட கலர்க் கண்ணாடியை வாங்கி அணிவதும், நீராவியால் ஓடக் கூடிய சிறிய படகுகளை வாங்கி வீட்டில் உள்ள கிடாரத்தில் தண்ணீர் நிரப்பி, அவற்றை ஓட்டி மகிழ்வதிலும் அலாதிப் பிரியம் அடைவேன் நான்.
இளைஞர் இளைஞிகள் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றே அர்த்தம்” என்பதை மெய்ப்பிப்பதும், கோயிலில் கொடுக்கப்படும் அன்னதானத்துக்கும் பாணுக்கும் பெரியவர்கள் முண்டியடிப்பதையும் அங்கே பார்ப்பது அலாதியான அனுபவம்.

சரி விடயத்துக்கு வருவோம்.. அகோர யுத்தத்தினை சார்ந்து அந்த ஆண்டின் ஆறாம் கிழமை வந்திருந்தபடியால் பெரிதளவில் வியாபாரிகளும் வரவில்லை, மக்களும் அவர்களை எதிர்பார்க்கும் மனநிலையிலும் இருக்கவில்லை. அப்படி எதிர்பார்ப்பு இருந்தாலும், பல மாதங்களாக ஒழுங்கான வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தவர்களிடம், வாங்குவதற்குப் பணம் இருக்க வேண்டுமே. அது மட்டுமல்லாமல் கோயிலில் இருந்து சில மீற்றர் தூரத்தில் அமைதிப்படையின் முகாம் அமைக்கப் பட்டிருந்ததாலும் எது நடக்குமோ என்ற பயமும் எல்லோரிடமும் காணப்பட்டது.

பதின்ம வயதுள் நுழைந்திருந்து, வாழ்க்கையின் வசந்தத்தை அப்போதான் உணரத்தலைப்பட்ட என்னையும் எனது கல்லூரி நண்பர்களையும் யுத்தம் கட்டிப் போட்டது. பெற்றோர் வெளியே செல்லத்தடை விதித்தார்கள். நாங்கள் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தை செலவழித்தோம். ஆனால் ஆறாங்கிழமைக்கு எப்படியாவது போவது எனத்தீர்மானித்து ஒருவாறாக நண்பர்கள் எல்லோரும் கூடி, ஒரு மாலை வேளையில் கோயிலடிக்குச் சென்றிருந்தோம். கோயிலின் வெளியே பாதிரியாரின் தலைமையில் இளைஞிகள் பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை நோட்டம் விட்டபடி கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கெடுத்த உற்சாகத்துடன் கடலை வாங்கிச் சாப்பிட்டபடி கோவிலைச் சுற்றியிருந்த வீதியால் கதைத்துச் சிரித்தபடி நடந்து கொண்டிருந்த பொழுது நண்பனொருவன் கிசுகிசுத்த குரலில் பட படப்புடன் கத்தினான்..

       டேய் நில்லுங்கோடா .. அங்கை பாருங்கோடா.. கோயில் Transformer ற்குப் பக்கத்திலை ஆர் நிக்கிறாங்களெண்டு கவனியுங்கோடா.. என்றான். அவன் சொல்லி முடிக்கவும் நாம் அந்த இடத்தை அடையவும் சரியாக இருந்தது.
அங்கே மூன்று இளைஞர்கள் தங்களின் சைக்கிலை மதிலில் சார்த்தி வைத்துவிட்டு கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் எங்களின் பாடசாலையில் எமக்கு ஜூனியராக கல்விபயின்றவர் , உதைபந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வமாகக் காணப்பட்ட அவர் எமது கல்லூரியில் உதை பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய எங்களின் நண்பர்களில் ஒருவரிடம் மிகுந்த மரியாதையுடன் பழகுவார். காலவோட்டத்தில் போராளியாகிய அவரை பல காலமாக நாம் காணவில்லை. எம்மைக் கண்டதும் சிரித்தபடியே அருகில் வந்து எனது ,நண்பனின் பெயர் சொல்லிக் கூப்பிட்டு என்னண்ணா தெரியாத மாதிரிப் போகிறீர்கள் என்றார். எனது நண்பனும் நீங்கள் ஏன்ரா இதிலை நிக்கிறியள்??? ஏதாவது செய்து கிய்து துலைக்கப் போறியளே?? அதுதான் பயமாக் கிடக்கு.. மற்றது உங்களோடை கதைக்கிறதை ஆமி பாத்தானெண்டால் துலைச்சுப் போடுவான்.. அதுதான் பேசாமல் போகிறோம் என்றான். அதற்கு அந்த இளைஞன் பெரிதாகச் சிரித்தபடி ஏனண்னை பயந்து சாகிறியள்.. நாங்கள் சும்மா நிண்டாலும் விடமாட்டியள் போல இருக்கு என்று விட்டு சரி ..சரி பயப்பிடாதேங்கோ நாங்கள் சும்மா பெருநாள் பாக்கத்தான் வந்தனாங்கள் என்றார்.

அப்பாடா எமக்குப் போன உயிர் திரும்பி வந்தது அட அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் பெருநாள் பார்த்துப் பைம்பல் அடிக்க ஆசையிருக்கும் தானே .. நாங்கள் தான் தேவையில்லாமல் குழம்பிவிட்டோம் என எமக்குள் கதைத்துச் சிரித்த படி நிம்மதியுடன் எமக்கு எதிரே சைக்கிலில் வந்த ஒரு இளைஞனை விலத்தியபடி தொடர்ந்து மீண்டும் பழைய உற்சாகத்துடன் நடக்கத்தொடங்கினோம்.
ஒரு சில மீற்றர் தான் நடந்திருப்போம் எமக்குப் பின்னால் சைக்கில் ரயர் வெடித்ததைப் போன்றதொரு சத்தமும் அதைத் தொடர்ந்து சைக்கிலுடன் ஒருவர் படாரென்று விழும் சத்தமும் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினோம். சைக்கிலுடன் விழுந்தவரை நோக்கி இன்னும் சில வேட்டுக்கள் தீர்க்கப் பட்டுக் கொண்டிருந்தது.

தொடர்ந்து அங்கே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் எந்தவித அவசரமோ படபடப்போ இல்லாமல் ஒரு பேப்பரை அந்த இடத்தில் போட்டுவிட்டு தமது சைக்கிலில் ஏறி சாவதானமாக சென்றுகொண்டிருந்தார்கள் . முதலில் என்ன நடக்கிறது என்பதை புரிய முடியாமல், செய்வதறியாது ஆளையாள் பார்த்துக் கொண்டு திகைத்து நின்ற நாம் ஒருவாறு சுதாரித்து அந்த இடத்தை நோக்கி ஓடோடிச் சென்றோம். அங்கே நாம் கண்ட காட்சி எங்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. சே இதுவெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று சிந்திக்க வைத்தது. அங்கே எம்மை சில நிமிடங்களுக்கு முன்னர் விலத்திச் சென்று கொண்டிருந்த இளைஞர் துடித்துக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் போட்டிருந்த செபமாலை முன்னே வந்து அவரின் முகத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவருக்கு அருகில் போடப்பட்டிருந்த பேப்பரில் இராணுவத்தினருடன் அவருக்கிருந்த தொடர்பு காரணமாக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக எழுதப் பட்டிருந்தது. 

அங்கே ஓடிவந்த அந்த இளைஞனின் தாய் கதறிய கதறல்.. அடுத்த நாள் வெளிநாடு போவதாக இருந்த தனது மகன் இறுதியாக கோயிலுக்கு சென்று வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்ததாகவும், ஆனால் ஆள்மாறி தனது மகன் குறிவைக்கப் பட்டுவிட்டான் என்றும், மாதாவே உன்னைக் கும்பிட வந்த எனது மகனுக்கு ஏன் இந்தக் கதி என நெஞ்சிலடித்தும் கத்திய ஓலம் இன்றும் என் காதை விட்டு அகலவில்லை.. அகலாது.

இந்தக் கொடூரத்தைப் பார்த்து, வாயடைத்து, நாங்கள் நின்று கொண்டிருந்த போது கோயிலடியில் கட்டப் பட்டிருந்த ஒலி பெருக்கியில் அந்த கால கட்டத்தில் வெளிவந்து பிரபலமான, வேதம் புதிது படப் பாடலான மாட்டுவண்டி சாலையிலே பாட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அன்றிலிருந்து அந்தப் பாட்டை எங்கே எப்போது கேட்டாலும் நடந்த அவலம் அப்படியே நினைவுவரும்.. அதிலும் அதில் வரும் வரிகளான ஓடிப்போய் சொல்லிவிட ..உயிர் கிடந்து துடிக்கிறது.. ஊமை கண்ட கனவு இது.. உள்ளுக்குள் வலிக்கிறது.. என்ற காதல் பிரிவுக்காக வைரமுத்து எழுதிய வரிகள் ஏனோ எனக்குள்ளும் வலியை.. அந்த இளைஞனின் வலியை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அந்த இளைஞன் இறந்திருக்க வேண்டியவனா????

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்று அடிக்கடி எல்லோரும் எல்லா இடங்களிலும் சொல்கிறார்கள். அப்படியானால் மரணதண்டனை என்ற ஒன்று மனுக்குலத்துக்கு தேவையா?? ஒருவன் குற்றவாளியா சுற்றவாளியா என்பதை தீர்மானிப்பதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை, பலம்,பலவீனம்,அரசியல் சூழ்நிலை, நிர்ப்பந்தம்.. போன்ற பல காரணிகள் இருக்கின்றன. ஆனால் மரண தண்டனை என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் ஒருவனுக்கு அநீதியாக தவறான தண்டனை கொடுக்கப் பட்டிருந்தால் அதிலிருந்து எப்பவாவது ஒருநாள் நீதியை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் அவனுக்கு இருக்கிறதல்லவா??.

ஒரு காலத்தில் சிவில் நிர்வாகமும் சட்ட திட்டங்களும் இல்லாமல் குழம்பிப் போயிருந்த ஈழத்தில் தான் இப்படியான சம்பவங்கள் நடந்ததென்றால் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் இது நடக்கவேண்டுமா??

எனது இந்தப் பதிவின் முடிவை, Afzal Guru விற்கான தண்டனையைப் பற்றிய மனுஷ்ய புத்திரனின் பார்வையுடன் முடிக்கலாம் என நினைக்கிறேன், :

. அப்சல் குரு வழக்கில் முக்கியமான ஆதாரங்களாக சொல்லப் படுபவை இரண்டு , ஒன்று அவரது மொபைல் போன் , இன்னொன்று அவரது மடிக் கணினி , இவை இரண்டின் கதையை கேட்டால் , நமது நீதித் துரையின் செயல்பாடும் மற்றும் காவல் துறையின் லட்சணங்கள் நமக்கு மேலும் புலப்படும் #

அதாவது அந்த இரண்டுமே அவரது கைதின் பொழுது கைப்பற்றப் பட்டதாக கூறப் படுகிறது .... பொதுவாக கைதின் பொழுது கைப்பற்றப் படும் பொருட்கள் , முறையே அதே தருணத்தில் சீல் வைக்கப் பட்டு தான் சமர்பிக்கப் பட வேண்டும் , இந்த நடைமுறை பின்பற்றப் படவில்லை , மேலும் , அவரது மடிக் கணினி ஹார்ட் டிஸ்க் கைதான தேதிக்கு பின்னரும் திறக்கப் பட்டுள்ளது என்பது நீதி மன்றத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது ... அந்த மடிக் கணினியில் தான் தீவிரவாதிகளுக்கும் அப்சலுக்கும் இருந்த தொடர்பு பற்றிய விவரம் இருந்ததாகச் சொல்கிறது காவல் துறை .. இதில் நகைச்சுவை என்னவென்றால் , விசாரணைக்கு தேவைப் படும் அந்த விஷயங்களை தவிர மற்ற அனைத்தையும் அப்சல் அழித்து விட்டார் என்று நீதி மன்றத்தில் சொல்கிறது காவல் துறை .... குற்றம் செய்தவன் ஆதாரத்தை அழிப்பானா ? அல்லது ஆதாரத்தை விடுத்து மற்ற அனைத்தையும் அழிப்பானா ? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன் ...

இன்னொரு விஷயம் என்னவென்றால் , கைப்பற்றப் பட்ட மொபைல் போனில் இருந்த சிம் கார்டு மூலமாகத் தான் குரு அனைத்து தீவிரவாதிகளுடனும் தொடர்பு கொண்டார் என்கிறது காவல் துறை , அதற்காக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய மொபைல் கடைக் காரர் அளித்த சாட்சியத்தின் படி அவர் அந்த சிம் கார்டை விற்ற தேதி டிசெம்பர் 4 2001 . ஆனால் , காவல் துறையின் கோப்புகளிலேயே விசாரணை அறிக்கையில் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் அந்த சிம் கார்டு உபயோகப் படுத்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .... டிசெம்பர் 4 ஆம் தேதி விற்பனை செய்யப் பட்ட சிம் கார்டு நவம்பர் 6 ஆம் தேதி 2001 முதலே எப்படி செயல் பட்டிருக்க முடியும் என்று நீங்கள் கேள்வி கேட்டால் , நீங்கள் தேசத் துரோகி ..... அவர் சாக வேண்டும் , சமூகத்தின் திருப்திக்காகவாவது அவர் சாக வேண்டும் அவ்வளவு தான் ...

நாணல் போல வளைப்பது தான் சட்டமாகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா என்கிற பாடல் வரி தான் நினைவுக்கு வருகிறது

Friday 8 February 2013

மகேல ஜெயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் சொத்தா ? இல்லை சொத்தையா??

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியத்தொடருடன் தனது ரெஸ்ற் மற்றும் ஒருநாள் கப்ரன் பதவியில் இருந்து விலகும் மகேல இலங்கை அணியில் இருந்து நீக்கப் பட வேண்டும் என்றும், இலங்கை கிரிக்கெட்டுடன் அவருக்கு ஏற்பட்ட மனக் கசப்புக் காரணமாக அவர் அணியிலிருந்து விலக்கப் படுவார் என்றவாறான செய்திகளை எல்லோரும் தமது விருப்பத்துக்கு ஏற்றபடி வெளியிட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நியாயமான அடிப்படையில் பார்த்தால், மகேல இலங்கை அணியின் சொத்தா அல்லது சொத்தையா??

1983, இல் ரெஸ்ற் அந்தஸ்து கிடைத்த பிறகுதான் இலங்கை வீரர்கள் உன்னிப்பாக வெளியுலகிற்கும், கொழும்புக்கு வெளியே வாழ்ந்த இலங்கை மக்களுக்கும் தெரியவந்தார்கள். காரணம் ரெஸ்ற் போட்டிகளின் போதான தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு. இந்த வீரர்களில் றோய் டயஸ், அரவிந்த , அத்தபத்து, மகேல, சங்கக்கார இவர்களைத்தான் ,துடுப்பாட்ட விதிகளுக்கு ஏற்ப விளையாடும், அதாவது சரியான Batting technique இன் படி ஆடும் வீர்ர்கள் என சர்வதேச விமர்சகர்கள் கணித்துள்ளார்கள். . இதில் வெத்தமுனியின் பெயரை ஏனோ குறிப்பிடுவதில்லை. முக்கியமாக அரவிந்த டி சில்வாவின் துடுப்பாட்ட technique மிகச் சரியானதாக Coaching manual இல் உள்ளவாறே இருக்கும், அவர் இன்றுவரை உலக கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒருவராக இருப்பதற்கு அவரது மாசற்ற துடுப்பாட்டமே காரணம். அந்த வகையில் மகேலாவின் துடுப்பாட்டமும் பாரம்பரியமானது, முறையானது. ஏதோ ரன்களைக் குவித்துவிட்டால் போதும் என்ற வகையில் ஆடாமல், .ஓட்டங்களை கிரிக்கெட் தியறிக்கேற்ப சரியாக எடுக்கும் ஒரு தலை சிறந்த வீரர் மகேலா.

 தற்போதுள்ள சர்வதேசக் கிரிக்கெட் வீரர்களில் கிரிக்கெட்டை (முக்கியமாக ரெஸ்ற் ) கிரிக்கெட்டின் வரைமுறையுடன் விளையாடுவோர் மிகச் சிலரே அதில் சச்சின், கலிஸ் , மகேலா மற்றும் சங்கக்கார எனும் நால்வர் மிக முக்கியமானவர்கள். இவர்கள் எல்லோருமே 10.000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த வீரர்கள். இதுவரையில் இவர்களின் batting average 50 ரன்கள். அப்படிப்பட்ட மகேலாவை அணியிலிருந்து நிறுத்த வேண்டும் என்போர் சொல்லும் காரணங்கள் என்ன???

 கடந்த ஆண்டு அவர் விளையாடிய ரெஸ்ற் போட்டிகளில் அவரின் Batting average மிக குறைவானதாக இருந்ததும், அவரால் இலங்கையில் குவிக்கும் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில் ( batt.avg 61.12 ) வெளிநாட்டில் குவிக்கும் ஓட்டங்கள் (batt.avg 39.59 ) மிகக் குறைவானதாக இருப்பதையும் முதலாவது குறைபாடாக, அவரை விமர்சிப்போர் காரணம் காட்டுகிறார்கள். உண்மைதான். ஏறத்தாழ கடந்த ஒருவருடமாக அவரது துடுப்பாட்டம் இறங்கு முகத்தில் தான் உள்ளது. அதற்குத்தனியே அவரை மட்டும் குறை கூற முடியாது. அதற்கான பல காரணங்களில் முதன்மையானது சிறீலங்காவின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் தோல்விகளாகும்.. கடந்த சில வருடங்களாக இலங்கை அணி சரியான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. அந்த இடத்துக்கு டில்ஷானுடன் சேர்ந்து விளையாடும் மற்றய வீரருக்காக இதுவரை பலரை பரீட்சித்துப் பார்த்துவிட்டார்கள் ஆனால் தகுந்த வீரரை அடையாளம் காண முடியவில்லை. இதுதான் இலங்கை அணிக்கும் அதன் வீரர்களுக்கும் ஏற்படும் தோல்விகளுக்கான முக்கிய காரணம். இதைச் சரி செய்தால் மகேலாவின் துடுப்பாட்டச் சிக்கல் தீர வாய்ப்பு இருக்கிறது. துடுப்பாடும் ஒரு வீரர்,தான் வரவேண்டிய நேரத்துக்கு முன்பு வந்து விளையாடுவதால் ஏற்படும் பிரச்சினை அது. ஏனெனில் பந்தின் அசைவு ஓவருக்கு ஓவர் மாறுபடும். எனவே நாலாவது துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கும் மகேலா, ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் அவுட்டாகும் காரணத்தால் வரவேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே களமிறங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார். இதனால் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதால், Middle order batsman ஆன அவருக்கு பெரிய சவாலாக இது இருக்கின்றது.( இதைப் பற்றிய விளக்கமான பதிவு இந்தப் பக்கத்தில் முன்பு பதியப்பட்டுள்ளது ) எனவே இதைக் காரணம் காட்டி மகேலாவை நிறுத்துவது சரியா??

அடுத்ததாக வேகமான பிச்சுக்களில் வேகப் பந்து வீச்சாளரை இவரால் எதிர் கொள்ள முடியாது என்ற குற்றச்சாட்டும் வைக்கப் படுகிறது. இது சரியான தகவலாக எனக்குப் படவில்லை. இலங்கை அணியில் வேகப் பந்து வீச்சாளர்களுக்கெதிராக விளையாடும் வீரர்களில் மகேலா முக்கியமானவர் . அவர்களுக்கெதிராக அவரின் ஹூக் ஷொட் ரிக்கி பொண்டிங்கின் ஹூக் ஷொட்டை ஒத்தது என்பதை பலமுறை கண்டு வியந்துள்ளேன். முக்கியமாக 140 கி.மீ. வேகத்தில் வரும் Short ball களை இடை வெளி பார்த்து அடிக்கும் வல்லமை (gab Placement ) மகேலாவுக்கு இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் இறுதியாக மெல்பெர்ணில் நடந்த 20/20 போட்டியில் அவரின் துடுப்பாட்டம்/.

Mahela Jayawardene in perfect position to play the hook shot
( Mahela's perfect hook shot ) 

அவரது பலவீனமாக நான் கருதுவது என்னவென்றால் ஆட்டத்தின் தொடக்கத்தில் 1st slip, 2nd slip அல்லது keeper இடம் பிடி கொடுத்து அவுட் ஆவது. இது பந்தின் அசைவுகளுக்கேற்ப (out swing / Movements ) விளையாடாமையாகும். 10,000 ஓட்டங்களுக்கு மேலெடுத்த ஒருவர் தொடர்ந்து இந்த வகையில் ஆட்டமிழப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.. இந்தப் பலவீனத்தை மகேலா உடனடியாக பயிற்சியின் மூலம் சரிசெய்வாராக இருந்தால் இன்னும் பல ஆயிரம் ரன்களை எடுப்பார் என்பதில் ஐயமில்லை., 

Mahela Jayawardene edges a catch to Virender Sehwag at slip
( Mahela Jayawardene edges a catch to Virender Sehwag at slip )

 இலங்கை வீரர்களில் அனேகமானோர் இளம் வீரர்கள். அவர்களின் முதல் ஓரிரு ஆட்டங்களைப் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கான இனிங்சுகளை விளையாடி பல வருடமாக தனது Avg இனை 50ற்கு மேல் வைத்திருந்த மகேலாவின் இடத்தை அவர்களால் நிரப்ப முடியும் என நினைப்பது நகைப்புக்கு உரியது. அதுமட்டுமல்லாமல் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடும் அணிக்கு மனப் பலம், மற்றும் ஊடகங்களை வெற்றிகரமாக சமாளிக்கும் திறமை, இக்கட்டான நேரங்களில் பொறுப்பாக முடிவெடுக்கும் சாணக்கியம் போன்றவையும் இன்றியமையாதவை. இவை மகேலாவுக்கு கைவந்த கலை, இதற்கான நல்ல எடுத்துக்காட்டு, கடைசியாக மெல்பேர்ணில் நடைபெற்ற 20/20 போட்டியாகும். இந்தப் போட்டியில், மெல்பெர்ணின் வேகப் பந்துப் பிச்சில், வேகப் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக , பொறுப்பாக விளையாடி 61 ஓட்டங்கள் எடுத்ததோடல்லாமல் கடைசி ஓவரின் கடைசிப் பந்துவரை எவர் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியாத பரபரப்பான நேரத்தில், இளம் கப்ரன் மத்தியூசுக்குத் துணையாக நின்று, ஆஸ்திரேலிய வீரன் மக்ஸ்வெல்லின் வாய்த்தர்க்கத்துக்கு முற்றுப் புள்ளி வைத்ததோடல்லாமல் . இலங்கை பந்து வீச்சாளர் திசர பெரேராவை நிதானமாக பந்துவீச வைத்ததற்கும், அதன் மூலம் கிடைத்த வெற்றிக்கும் முழுமுதற்காரணம் மகேலாவும் அவரது சர்வதேசக் கிரிக்கெட் அனுபவமும தான்.

இவையெல்லாவற்றையும் தாண்டி மகேலாவுக்குள்ள இன்னொரு சிறப்பம்சம் அவர் தன்னை இரு இனங்களுக்கும் பொதுவானவராக காட்டிக் கொள்வது. அவர் வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளின் முடிவில் பொது மொழியான ஆங்கிலத்திலேயே உரையாற்றுவார். ஒரு போதும் இனவேறுபாட்டையோ, மத வேறுபாட்டையோ தனது நடவடிக்கைகளில் காட்டாத உண்மையான வீரர் . இது இலங்கையர்கள் எல்லோருமே அவரை விரும்புவதற்கான இன்னொரு காரணம்.

சர்வதேசக் கிரிக்கெட் அனுபவம் சிறிதுமற்ற இளம் வீரர்கள் பலரைக் கொண்ட இலங்கை அணிக்கு மகேலாவின் பிரசன்னம் குறைந்தது அடுத்த இரு வருடங்களுக்கு மிக முக்கியம்.

கடைசியாக மெல்பேர்ணில் நடந்த போட்டியில் மகேலா வாய் மூட வைத்தது ஆஸ்திரேலிய வீரரை மட்டுமல்ல அவருக்கு எதிரான விமர்சனங்களையும் தான் !!!

 Photo: மகேல ஜெயவர்தன  இலங்கை  அணியின் சொத்தா 
??? இல்லை சொத்தையா?? 

Thursday 7 February 2013

உலகை இன்னும்.. இன்னும் இன்னும் ரசிக்க வைக்கும் ராஜாவின் பாடல்கள்-

நெஞ்சில் நிறைந்தவை - 2

 நண்பர் ஒருவர் இசைஞானியின் பாடல்களைப் பற்றி என்னிடம் கேட்ட கேள்விக்குப் பின் சற்றே சிந்தித்துப் பார்த்தேன். இசைஞானியின் பாடல்கள் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்துடனும் எவ்வளவுதூரம் பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும், அந்த மாமனிதன் தனது தொழிலின் நிமித்தம் அந்தப் பொக்கிஷங்களை எமக்காகத் தந்திருந்தாலும், அவற்றை எவ்வளவு சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார் என்பதையும், சும்மா ஏனோதானோவென்று அவற்றை உருவாக்கவிலை என்பதையும் உணர்ந்தபோது அவர்மேல் இருந்த மரியாதை இன்னும் அதிகரித்தது.

அவரின் ஒவ்வொரு பாடல்களின் மெட்டுக்களில் மட்டுமல்லாமல் அவற்றின் தொடக்கத்தில் வரும் ஆரம்ப இசையிலும், இடையிசையிலும், அந்தப் பாடல்கள் இடம்பெற்ற படத்துக்காக அவர்போட்ட பின்னணி இசையிலும் உள்ள நேர்த்தி, எனக்குத் தெரிந்த, வேறு எந்த இசையமைப்பாளர்களிடமும் நான் காணாத ஒன்று.

மனிரத்னம் யாரென்று தெரியாத காலத்தில் வந்த படம் மௌனராகம். இந்தப் படத்தில் வரும் காட்சி ஒன்றில்: மனதால் ஒத்துப்போகாத இளம் தம்பதிகளான மோகனும் ரேவதியும் காதலின் சின்னமென அழைக்கப்படும் தாஜ்மஹாலைப் பார்க்கச் செல்கின்றனர். இரவுப் பொழுதில் , குளிருக்காகப் போடப் பட்ட நெருப்பு வெளிச்சத்தில் தாஜ்மகாலைப் பார்க்கத் தொடங்கும் போது ராஜா ஒரு பின்னணி இசையைப் போட்டிருப்பார். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அதன் பின் மனம் ஒன்றுபடாத இளம் தம்பதிகள் தாஜ்மஹாலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருகில் இருக்கும் நாடோடிகள் விரகத்துடன் பாடும் பாட்டொன்று, தாஜ்மஹாலுடன் சேர்ந்து இந்தத்தம்பதிகளுக்கு ஏற்படுத்தும் மாறுபட்ட மன உணர்வுகளைக் காட்டுவதாக இந்தப் பாட்டு இருக்க வேண்டியதன் அவசியத்தை மணி ராஜாவிடம் கூறியுள்ளார் அந்தக் காட்சிக்கு ஏற்றதான பாட்டை ராஜா உருவாக்கிய விதத்தை.அப்பப்பா.. என்னவென்று சொல்வது..எப்படிச் சொல்வது?? எனக்குப் புரிந்ததை ஏதோ கீழே கிறுக்கியுள்ளேன்.

இரவு நேரத்தில், குளிரில், புதிதாகத்திருமணமான ஆனால் மனதால் வேறுபட்ட‌ தம்பதி, காதலின் உச்ச சின்னமான தாஜ்மஹாலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பெண்ணோ தனது காதலனைப் பறிகொடுத்துவிட்டு வேறுவழியில்லாமல் குடும்ப சூழ்நிலையால் திருமணமாகி வந்துள்ளாள். தாஜ்மஹாலைப் பார்க்கும் போது, இள‌ம் காதலனைப் பறிகொடுத்திருந்த அவளுக்கு ஏற்படும் மனப் பிறள்வுகளையும், அவளது இளம் கணவனுக்கு எற்படக்கூடிய மனப் போராட்டங்களையும் தத்ரூபமாக இசைஞானி தனது இசைமூலம் வெளிக் கொணர்ந்திருப்பார்.

 பாடலின் தொடக்கத்தை ஒரு புல்லாங்குழல் இசை தொடக்கி வைக்கும். இந்தப் புல்லாங்குழல் சாதாரண புல்லாங்குழல் இசையைப் போலில்லாது வித்தியாசமானதாக.. கொஞ்சம் கடின ஒலி உள்ளதாக இருக்கும். இதற்கான காரணம் எதுவாக இருக்கும் ?????

சாதாரணமாக புல்லாங்குழலானது மிக மென்மையான ஒலியைக் கொடுக்கக் கூடியது. கேட்கும் போது நெஞ்சில் ஒரு அமைதியையும் சுகத்தையும் ஏற்படுத்தக் கூடியது. மனிதனின் சந்தோஷ‌ உணர்வுகளைக் தூண்டக் கூடியது. ஆனால் இந்தப் பாடல் இடம்பெறும் சூழ்நிலையோ வித்தியாசமானது. காதலனைப் பறிகொடுத்துவிட்டு அன்னியனுக்கு வாழ்க்கைப் பட்ட ஒரு பெண்ணும், திருமணமாகியும் பிரம்மச்சாரியாக, தனது இள‌ம் மனைவியின் துன்பத்தைப் புரிந்துகொண்ட வனாக வாழும் அவளது கணவனும் தாஜ்மஹாலுக்கு முன் குளிர் இரவில் நெருப்புக் காய்ந்துகொண்டு இருக்கும் போது மகிழ்ச்சியான புல்லாங்குழல் இசையைப் பாவித்தால் அந்தக் காட்சிக்கும் பாட்டுக்கும் தொடர்பில்லாமல் போய் காட்சியே அடிபட்டுப் போய்விடும். ஆனால் அதேநேரத்தில் அருகில் பாடுபவர்களின் விரகத்தையும் தாஜ்மஹாலையும், அது ஏற்படுத்தும் மன உணர்வையும் காட்டுவதற்கு புல்லாங்குழலிசை இன்றியமையாதது. இதற்காக ராஜா எடுத்த முடிவுதான் இந்த வித்தியாசமான, சோகத்துடன் கூடிய தாபத்தை ஏற்படுத்தும் புல்லாங்குழல் இசையென நான் நினைக்கிறேன்,

அதைத் தொடர்ந்து ஒலிக்கும் பொங்கஸ் இசையும் அதைத்தொடர்ந்து பொங்கஸ் இசையுடன் ஒட்டிக் கொண்டு தொடங்கும் கோரசும் பாடலிற்கான சூழ்நிலைக்கு எம்மைத்தயார் படுத்திவிடும். அதன் பின் எஸ்.பி.பி.யும் ஜானகியும் ஒரு விதமான தாபத்தை குரலில் கொண்டுவந்து பாடும் அழகிருக்கே சூ..ப்பர். அதிலும் பாலு தனது குரலில் ஏற்ற‌மும் இறக்கமும், மோகமும் தாபமும் என பல உணர்ச்சிகளைப் பிர‌வாகிக்க விட்டுள்ளார்.

இந்தப் பாட்டில் ராஜா தபேலவோ, மிருதங்கமோ பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன், பொங்கஸ் என்ற வாத்தியத்தை மட்டுமே முழுப் பாடலிலும் மிக அருமையாகப் பயன்டுத்தியுள்ளார்.
முதலாவது இடையிசையை பல வயலின்களின் சங்கமத்தோடு ஆரம்பிக்கும் ராஜா அதைத்தொடர்ந்து கிட்டாரை இசைக்கச் செய்து அந்தச் சூழ்ச்நிலையை மனதுக்குள் கொண்டு வந்து என்னவோ செய்யவைக்கும் போது அந்தக் கிட்டாருக்கு பின்னணியாக வயலின்கள் மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும்.. ஆஹா... என்ன ஒரு ஞானம்.. இது மனதை எங்கோ கொண்டு சென்றுவிடுகிறது.

முதலாவது பல்லவி தொடங்கியதுமே எங்கிருந்தோ மீண்டும் வந்து சேரும் பொங்கஸ் பாலுவையும் ஜானகியையும் கட்டிக் கொண்டு செல்லுவது அவ்வழவு அழகு. இந்தச் சரணத்தில் பாலு தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம் என்ர வரிகலைப் பாடும் போது தாபம் என்ற வரியில் தாபத்தை அப்படியே வழிய விடுகிறார். அடுத்து வரும் ஜானகி தனிமையே போ.. இனிமையே வா... என்று பாடும் போது நான் எங்கோ தனிமையில் இருப்பதைப் போலவே சத்தியமாக உணர்கிறேன்.. அப்படி ஒரு பாஃவம், அந்த ஏக்கததை ஜானகி தன் குரலில் கொடுக்கிறார். இதில்தான் ராஜா பாலு ஜானகி என்ற இனிமேல் கிடைக்க முடியாத வெற்றிக் கூட்டணியின் தனித்துவம் தெரிகிறது. ராஜா என்ற இசைஞானியை, அப்படியே இவர்கள் தங்கள் குரலில் வெளிக்கொணர்கிறார்கள்.

ஆரம்பத்தில் சோகமான சுகத்தைத் தரக் கூடிய புல்லாங்குழலைப் பயன்படுத்திய ராஜா இரண்டாவது இடையிசையில் சாதாரண புல்லாங்குழலைப் பயன்படுத்துகிறார். பாடலின் தொடக்கத்தில் நாயகனுக்கும் நாயகைக்கும் இருந்த மன இறுக்கம் பாடலின் பாதிப்பால் குறைவடைந்து இருவரும் ஒருவரின் தவிப்பை மற்ரவர் புரிய எத்தனிக்கிறார்கள் என்பதைக் காடௌவதற்காகவே ராஜா அதைப் பயன் படுத்தியுள்ளார். இதை கச்சிதமாக உண‌ர்ந்து மணிரத்னமும் ஒளிப்பதிவாள‌ர் ஸ்ரீராமும் அந்தக் காட்சியை ராஜாவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ப‌டமாகியிருக்கிறார்கள்.

இரண்டாவது சரணத்தின் முதல் வரிகளான காவலில் நிலை கொள்ளாமல்.. தாவுதே மனசு என்று பாடும் போது தாவுதே என்ற வரிகளை பாலு எப்படிப் பாடுகிறார் என்று கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.. அந்தக் குரல் உணர்ச்சிகளின் உச்சம். அதற்கு சோடைபோகாமல் ஜானகி பாடி முடித்ததும், ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் . தாளாமல் துள்ளும் என்று பாடும் எங்கள் பாலு அங்கம் என்னும் போது அங்..கம் என்றும் துள்ளும் எனும் போது துள்.. என்பதை மிக மென்மையாகவும் மெதுவாகவும் உச்சரித்துவிட்டு ..ளும் என்பதை மட்டும் சாதாரணமாக உச்சரிப்பார். சரணத்தின் இறுதியில் வரும் வரிகளான விரகமே.... ஓ...ர்.. நரகமோ.. சொல்.. என்ற வரியில் பாலு புகுந்து விளையாடியிருப்பார் .. அற்புதம். இந்த வரிகளில் விரகத்துடனும், தாபத்துடனும் கூடிய குரலை பாலுவிடம் நீங்கள் கேட்கலாம்.

நண்பர்களே கேட்பதற்கு இது ஒரு சிறிய விடயம்.. பொடி சங்கதி என்று சொல்வார்கள் ஆனால் இந்தச் சங்கதிகள் அந்தப் பாட்டின் அர்த்தத்துக்கும் அது அமைந்த சூழ்நிலைக்கும் கொடுக்கும் கொடுக்கின்ற கனம் இருக்கிற‌தே அதுதான் முக்கியம்.. அங்குதான் இசைஞானியினதும் பாலுவினதும் இடத்தை இனிமேல் ஒருவராலும் நிரப்ப முடியாது என்ற உண்மை தொக்கி நிற்கிறது. காரணம் இது சொல்லிக் கொடுத்தோ பயிற்சியாலோ வருவதல்ல .. இதுதான் ஞானம்.

இந்தப் பாட்டில் நடித்த ரேவதியை சமீபத்தில் ரிவி பரிசளிப்பொன்றில் பார்த்தபோது முதுமை தெரிந்தது. மோகனும் விக் போட்டு நடித்தும் எடுபடாமல் தொலைந்து போய்விட்டார். பாடலுக்கு ஆடிய ஜான் பாபுவும் வயோதிபராகி முடி கொட்டி ஒய்வெடுக்கிறார் ஆனால்.... ராஜாவின் இந்தப் பாட்டு மட்டும் ஒவ்வொருமுறை கேட்கும் போதும் புதிதாக இருக்கிறது. இசையின் சூட்சுமங்களை புரியவைக்கிறது.
இந்தப் படம் வந்து 26 வருடங்கள் இருக்கலாம்.. ஆனால் இந்த இசை இப்போதைய இளம் இசை. 26 வருடங்களுக்கு முன்னேயே இதைக் கொடுத்த இசைப் பிதாவை என்னவென்று சொல்வது????

பாடலைக் கேட்டுப்பாருங்கள் நண்பர்களே. ( இங்கே சொடுக்கவும் http://www.youtube.com/watch?v=gFm3UdTKCgQ )
இசையை மேலோட்டமாக ரசிப்பதற்கும் அதன் சூட்சுமத்தை அறிந்துகொண்டு ரசிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. எமக்கெல்லாம் கிடைத்துள்ள ஒரு பெரும் இசைச் சமுத்திரம் இசைஞானி. அவர் இதுவரை படைத்துள்ள ஒவ்வொரு பாட்டுக்களிலும் தனது ஞானத்தை நுணுக்கமாக உட்புகுத்தியுள்ளார். தான் ஏன், எதற்காக,எப்படி, பிரத்தியேகமான இடங்களில் பிரத்தியேகமான இசைக் கருவிகளையும், இசையையும், சிலவேளைகளில் அமைதியையும் பயன்படுத்தியுள்ளார் என்பதை அவராக ஒவ்வொன்றாக விளங்கப் படுத்திக் கொண்டு இருப்பது நடைமுறை சாத்தியமற்றது. நாமாகத்தான் அதைப் புரிந்துகொண்டு ரசிக்கவேண்டும். அப்படிப் புரிந்து ரசிப்பவர்கள் பெரும் பாக்கியவான்கள். அந்தப் பாக்கியவான்களில் அடியேனும் ஒருவன் என்பதில் பேருவகையும், ஆனந்தமும் எனக்கு.

இலங்கை வீரன் குமார் சங்கக்காரவின் காயம் அடையாளம் காட்டிய , இளம் கிரிக்கெட் வீரர்கள்.

Photo: இலங்கை வீரன் குமார் சங்கக்காரவின் காயம் அடையாளம் காட்டிய , இளம் கிரிக்கெட் வீரர்கள்.

ஒருகாலத்தில் கிரிக்கெட்டின் மிகப் பெரியா வீரராக வரப் போகும், இளம் சனத் ஜயசூரியாவை நினைவுபடுத்துகின்ற இளம் வீரன் குஷால் ஜனித் பெரேரா.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி , முதலில் போட்டியிட்ட மூன்று ரெஸ்ற் போட்டிகளிலும் படுதோல்வியை அடந்ததுடன் அதன் முன்னணி வீரர்கள் பலர் காயத்துக்கும் உள்ளானார்கள். இதில் முக்கியமானவர் தற்போதைய ஐ.சி.சி.யின் தர வரிசையின் படி உலகின் நம்பர் 1 துடுப்பாட்டவீரராக கௌரவிக்கப் பட்ட குமார் சங்கக்கார ஆவர்.

குமார் சங்கக்கார உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த விக்கட் காப்பாளருமாவார். இலங்கை போட்டியிடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் நிரந்தர விக்கட் காப்பாளரான இவருக்கு ஏற்பட்ட காயத்தின் பின், இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்ற வேண்டியிருந்தது.
அவரில்லாத இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் எப்படித்தாக்குப் பிடிக்கப் போகின்றதோ என்ற கேள்விதான் ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள், மற்றும் உலக கிரிக்கெட் ஊடகங்களிலும் எழுப்பப் பட்டது. ஆனால் நடந்ததோ எதிர்மாறானது, காயம் காரணமாக சங்கா விளையாட முடியாமல் போனது பெரும் நன்மையையே இலங்கை அணிக்கு ஏற்படுத்தி விட்டது.

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்பேர்ணில் நடைபெற்று இலங்கை படுதோல்வி அடைந்தது . இருந்தும் அந்தப் போட்டியில் சங்காவுக்குப் பதிலாக விக்கெட் காப்பில் ஈடுபட்ட சண்டிமாலின் திறமை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியதோடல்லாமல், அதன் பின் அவரின் துடுப்பாட்டமும் விழிகளை உயர்த்தவைத்தது. துரதிர்ஷ்ட வசமாக அந்தப் போட்டியில் அவருக்கும் ஏற்பட்ட காயம் காரணமாக அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சண்டிமாலால் விளையாட முடியவில்லை. இருந்த போதிலும் சண்டிமால் என்Ra துடுப்பாட்ட வீரனால் , ஆஸ்திரேலியா போன்ற Fast pitch களில் திறமையாக துடுப்பாடுவதோடல்லாமல் சிறப்பாக விக்கட் காப்பையும் செய்ய முடியும் என நிரூபிக்கக் காரணமானது சங்காவின் காயம்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் திருமானே என்ற மற்றொரு இளம் வீரன் மிகப் பொறுமையாக ,அனுபவ ஆட்டக்காரனைப் போல் விளையாடி இலங்கைக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். ஆஸ்திரேலிய அணியை வெல்லுவதற்கு எடுக்க வேண்டிய ஓட்டங்கள் குறைவான அழவில் இருந்த போதும் அவரின் வயதுக்கும் அவரின் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய மிகக் குறைவான அனுபவத்துடனும் ஒப்பிடுகையில் திருமானேயின் ஆட்டம் மிகப் பொறுப்பு வாய்ந்ததாக இருந்தது. இவர் நடந்து முடிந்த ரெஸ்ற் போட்டி ஒன்றிலும் மிகச் சிறப்பாக பொறுமையாக ஆடி 91 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தனது Debut Century யை ஆஸியில் எடுப்பார் என எதிர்பார்த்திருந்த வேளை ஆட்டமிழந்து தன்னை நொந்த படி பவிலியனுக்குள் போனது பரிதாபமானது. அன்று விட்ட சென்சுரியை இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அட்லெய்டில் போட்டியின் இறுதிநேரத்தில் அடித்து அந்தப் போட்டிக்கே ஒரு விறு விறுப்பை ஏற்படுத்தினார்.. இவரை சதமடிக்க வைத்ததும் சங்கக்காரவின் காயம்.

ஏனெனில் வழமையாக சங்கா 3வது வீரராக முதலாவது வீரர் அவுட்டானவுடன்தான் களமிறங்குவது வழக்கம். அதற்குப்பிறகுதான் மகேலா களமிறங்குவார். ஆனால் அந்தப் போட்டியில் மூன்றாவதாக சங்காவின் இடத்துக்கு மகேலா இறங்கி விளையாடினார் அதனால் கீழ்வரிசை துடுப்பாட்ட வீரனான திரிமானேவுக்கு 4வதாக களம் இறங்கி விளையாடும் வாய்ப்புக்கிடைத்ததால் அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பும், நிதானித்து விளையாடும் அவகாசமும் கிடைத்தது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டார். விளைவு அவரின் செஞ்சுரி. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில் சென்சுரி போடுவது ஒன்றும் லேசுப்பட்ட விடயமல்ல. உண்மையான தகுதி,திறமையுடன் சேர்ந்த வேகப் பந்துவீச்சுக்கு எதிரான ஆட்ட நுணுக்கம் தெரியாத எவராலும் இந்த மைதானக்கலில் ஒரிரு ஓவருக்கு மேல் நின்றுபிடிக்க முடியாது. அந்த வகையில் இளம் வீரன் திரிமானே இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமே.

அடுத்தவர் என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானவர், ஒருகாலத்தில் மிகப் பெரிய வீரராக வரப் போகின்றவர், அவர்தான் இளம் விக்கெட் காப்பாளர் குஷால் ஜனித் பெரேரா.

குஷால் பெரேரா என்றழைக்கப் படும் இவர் சண்டிமாலுக்கு மெல்பேர்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரின் இடத்துக்கு விக்கெட் காப்பாளனாக வந்த இளம் வீரன். 1990இல் கொழும்பு கழுபோவிலவில் பிறந்த இவர் றோயல் கல்லூரியின் மாணவன். இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடிய இவரின் திறமையால் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப் பட்டு போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் வாங்குகளில் இருந்து இலங்கை வீரர்களின் விளையாட்டைப் பார்ப்பதும் அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதுமாக இருந்த இள‌ம் வீரனான இவருக்கு சங்கக்காரவின் காயத்தின் மூலம் அதிர்ஷ்டம் அடித்தது.

இவர் இன்னும் கிரிக்கெட் உலகில் பிரபலமாகவில்லையென்றே தோன்றுகிறது. ஆக ஆஸியில் இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும் தான் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஆனால் இவரின் விக்கெட் காக்கும் technique மற்றும் பந்தை அடித்தாடும் technique ஆகியவற்றைப் பார்க்கும் போது இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கின்றது என்பது துல்லியமாகத் தெரிகிறது. 23 வயதேயுடைய இவரின் தோற்றமும் அழவும், Body language ம் முக்கியமாக பந்தை அடிக்கும் Styleம் அப்படியே சனத் ஜயசூரியாவை கண்முன் கொண்டுவருகிறது. விக்கட்டுக்கு விக்கட் ஓடும் வேகமும் அச்சு அசலாக ஜெயசூரியாதான். சனத் ஜெயசூரியா ஒரு Lower arm batsman. அவர‌து அதிரவைக்கும் அடிகளில் கீழ்க்கையின் ஆதிக்கமே அதிகமிருக்கும்.அதே போலவே குஷால் பெரேரவின் Styleம் இருப்பது இவர் அவரைக் கொப்பி பண்ணுகிறாரா, அல்லது சிறு வயது முதல் ஜெயசூரியவைப் பார்த்து வளர்ந்ததால அவரின் Inspiration காரணமா??, அல்லது இயற்கையாகவே இவருக்கு இந்தத் திறமை கைவந்ததா எனச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் எது எப்படியோ இவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

இந்த மூன்று இலங்கையின் எதிர்கால கிரிக்கெட்டர்களை, அதுவும் மிகத்தைறமைசாலிகளான கிரிக்கெட்டர்களை அடையாளம் காண வைத்தது சங்கக்காரவின் காயம் தான். இது சங்கக்காரவைப் பொறுத்தவரை  துரதிர்ஷ்டவசமானாலும், இலங்கைக் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அதிர்ஷ்டக் காயம்

படம் 1  குஷால் பெரேரா ( ஜெயசூரியாவின் style mid wicket shot )

படம் 2  சனத் ஜெயசூரியா

படம் 3 திரிமானேயும் குஷால் பெரேராவும் ஆஸியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றி ஓட்டம் எடுத்தவுடன்.

படம் 4 சங்கக் காரவும் முரளியும்ஒருகாலத்தில் கிரிக்கெட்டின் மிகப் பெரியா வீரராக வரப் போகும், இளம் சனத் ஜயசூரியாவை நினைவுபடுத்துகின்ற இளம் வீரன் குஷால் ஜனித் பெரேரா.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி , முதலில் போட்டியிட்ட மூன்று ரெஸ்ற் போட்டிகளிலும் படுதோல்வியை அடந்ததுடன் அதன் முன்னணி வீரர்கள் பலர் காயத்துக்கும் உள்ளானார்கள். இதில் முக்கியமானவர் தற்போதைய ஐ.சி.சி.யின் தர வரிசையின் படி உலகின் நம்பர் 1 துடுப்பாட்டவீரராக கௌரவிக்கப் பட்ட குமார் சங்கக்கார ஆவர்.

குமார் சங்கக்கார உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த விக்கட் காப்பாளருமாவார். இலங்கை போட்டியிடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் நிரந்தர விக்கட் காப்பாளரான இவருக்கு ஏற்பட்ட காயத்தின் பின், இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்ற வேண்டியிருந்தது.
அவரில்லாத இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் எப்படித்தாக்குப் பிடிக்கப் போகின்றதோ என்ற கேள்விதான் ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள், மற்றும் உலக கிரிக்கெட் ஊடகங்களிலும் எழுப்பப் பட்டது. ஆனால் நடந்ததோ எதிர்மாறானது, காயம் காரணமாக சங்கா விளையாட முடியாமல் போனது பெரும் நன்மையையே இலங்கை அணிக்கு ஏற்படுத்தி விட்டது.

 இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்பேர்ணில் நடைபெற்று இலங்கை படுதோல்வி அடைந்தது . இருந்தும் அந்தப் போட்டியில் சங்காவுக்குப் பதிலாக விக்கெட் காப்பில் ஈடுபட்ட சண்டிமாலின் திறமை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியதோடல்லாமல், அதன் பின் அவரின் துடுப்பாட்டமும் விழிகளை உயர்த்தவைத்தது. துரதிர்ஷ்ட வசமாக அந்தப் போட்டியில் அவருக்கும் ஏற்பட்ட காயம் காரணமாக அடிலெய்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சண்டிமாலால் விளையாட முடியவில்லை. இருந்த போதிலும் சண்டிமால் என்Ra துடுப்பாட்ட வீரனால் , ஆஸ்திரேலியா போன்ற Fast pitch களில் திறமையாக துடுப்பாடுவதோடல்லாமல் சிறப்பாக விக்கட் காப்பையும் செய்ய முடியும் என நிரூபிக்கக் காரணமானது சங்காவின் காயம்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் திருமானே என்ற மற்றொரு இளம் வீரன் மிகப் பொறுமையாக ,அனுபவ ஆட்டக்காரனைப் போல் விளையாடி இலங்கைக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். ஆஸ்திரேலிய அணியை வெல்லுவதற்கு எடுக்க வேண்டிய ஓட்டங்கள் குறைவான அழவில் இருந்த போதும் அவரின் வயதுக்கும் அவரின் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய மிகக் குறைவான அனுபவத்துடனும் ஒப்பிடுகையில் திருமானேயின் ஆட்டம் மிகப் பொறுப்பு வாய்ந்ததாக இருந்தது. இவர் நடந்து முடிந்த ரெஸ்ற் போட்டி ஒன்றிலும் மிகச் சிறப்பாக பொறுமையாக ஆடி 91 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தனது Debut Century யை ஆஸியில் எடுப்பார் என எதிர்பார்த்திருந்த வேளை ஆட்டமிழந்து தன்னை நொந்த படி பவிலியனுக்குள் போனது பரிதாபமானது. அன்று விட்ட சென்சுரியை இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அட்லெய்டில் போட்டியின் இறுதிநேரத்தில் அடித்து அந்தப் போட்டிக்கே ஒரு விறு விறுப்பை ஏற்படுத்தினார்.. இவரை சதமடிக்க வைத்ததும் சங்கக்காரவின் காயம்.

ஏனெனில் வழமையாக சங்கா 3வது வீரராக முதலாவது வீரர் அவுட்டானவுடன்தான் களமிறங்குவது வழக்கம். அதற்குப்பிறகுதான் மகேலா களமிறங்குவார். ஆனால் அந்தப் போட்டியில் மூன்றாவதாக சங்காவின் இடத்துக்கு மகேலா இறங்கி விளையாடினார் அதனால் கீழ்வரிசை துடுப்பாட்ட வீரனான திரிமானேவுக்கு 4வதாக களம் இறங்கி விளையாடும் வாய்ப்புக்கிடைத்ததால் அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பும், நிதானித்து விளையாடும் அவகாசமும் கிடைத்தது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டார். விளைவு அவரின் செஞ்சுரி. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடி ஆஸ்திரேலிய விக்கெட்டுகளில் சென்சுரி போடுவது ஒன்றும் லேசுப்பட்ட விடயமல்ல. உண்மையான தகுதி,திறமையுடன் சேர்ந்த வேகப் பந்துவீச்சுக்கு எதிரான ஆட்ட நுணுக்கம் தெரியாத எவராலும் இந்த மைதானக்கலில் ஒரிரு ஓவருக்கு மேல் நின்றுபிடிக்க முடியாது. அந்த வகையில் இளம் வீரன் திரிமானே இலங்கையின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமே.

அடுத்தவர் என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானவர், ஒருகாலத்தில் மிகப் பெரிய வீரராக வரப் போகின்றவர், அவர்தான் இளம் விக்கெட் காப்பாளர் குஷால் ஜனித் பெரேரா

 குஷால் பெரேரா என்றழைக்கப் படும் இவர் சண்டிமாலுக்கு மெல்பேர்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரின் இடத்துக்கு விக்கெட் காப்பாளனாக வந்த இளம் வீரன். 1990இல் கொழும்பு கழுபோவிலவில் பிறந்த இவர் றோயல் கல்லூரியின் மாணவன். இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடிய இவரின் திறமையால் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப் பட்டு போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் கிடைக்காமல் வாங்குகளில் இருந்து இலங்கை வீரர்களின் விளையாட்டைப் பார்ப்பதும் அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதுமாக இருந்த இள‌ம் வீரனான இவருக்கு சங்கக்காரவின் காயத்தின் மூலம் அதிர்ஷ்டம் அடித்தது.

இவர் இன்னும் கிரிக்கெட் உலகில் பிரபலமாகவில்லையென்றே தோன்றுகிறது. ஆக ஆஸியில் இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும் தான் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஆனால் இவரின் விக்கெட் காக்கும் technique மற்றும் பந்தை அடித்தாடும் technique ஆகியவற்றைப் பார்க்கும் போது இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கின்றது என்பது துல்லியமாகத் தெரிகிறது. 23 வயதேயுடைய இவரின் தோற்றமும் அழவும், Body language ம் முக்கியமாக பந்தை அடிக்கும் Styleம் அப்படியே சனத் ஜயசூரியாவை கண்முன் கொண்டுவருகிறது. விக்கட்டுக்கு விக்கட் ஓடும் வேகமும் அச்சு அசலாக ஜெயசூரியாதான். சனத் ஜெயசூரியா ஒரு Lower arm batsman. அவர‌து அதிரவைக்கும் அடிகளில் கீழ்க்கையின் ஆதிக்கமே அதிகமிருக்கும்.அதே போலவே குஷால் பெரேரவின் Styleம் இருப்பது இவர் அவரைக் கொப்பி பண்ணுகிறாரா, அல்லது சிறு வயது முதல் ஜெயசூரியவைப் பார்த்து வளர்ந்ததால அவரின் Inspiration காரணமா??, அல்லது இயற்கையாகவே இவருக்கு இந்தத் திறமை கைவந்ததா எனச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் எது எப்படியோ இவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

இந்த மூன்று இலங்கையின் எதிர்கால கிரிக்கெட்டர்களை, அதுவும் மிகத்தைறமைசாலிகளான கிரிக்கெட்டர்களை அடையாளம் காண வைத்தது சங்கக்காரவின் காயம் தான். இது சங்கக்காரவைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானாலும், இலங்கைக் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை அதிர்ஷ்டக் காயம்

இசைஞானியும் திமிரும்-

மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல் சொல்வது..

"இந்த உலகத்தில் நேர்மையாய் இருப்பவர்களுக்கு திமிர்தான் வேலியே"

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..

குமுதத்தில் வெளிவரும் இசைஞானியுடனான கேள்விபதிலைக் கொண்டு அவரை திமிர் பிடித்தவன் என காரசாரமான விமர்சனங்க்ள் முன்வைக்கப் படும் இந்த வேளையில் முகநூல் நண்பர்
Venkata Swaminathan ன் Status Update இல், கமல்ஹாசன் படத்தில் வரும் ஒரு வசனம் கருத்தாக பதியப் பட்டிருந்தது. அந்தக் கருத்து ராஜாவைப் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கான பதிலாக எனக்குப் பட்டது. அதனால் அதை Share பண்ணியுள்ளேன்.

சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் பார்த்த ராஜாவின் நிகழ்ச்சியொன்றில், ராஜாவின் ஊரான பண்ணைபுரத்திலிருந்தே அவருடன் பழகிவரும் இயக்குனர் பாரதிராஜா பேசும் போது ராஜவிடம் உள்ள தலைக்கனத்தைப் பற்றி தனக்கு அபிப்பிராய பேதம் இருந்ததாகவும் ஆனால் அது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் போட்டி, பொறாமை நிறைந்த சினிமா உலகில் அவர் காணாமல் போயிருப்பார் என்பது இப்போ புரிகிறது என்றும் கூறி இருந்தார்.

சத்தியமான வார்த்தை. ஒரு விடயத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன்னை நேர்மையாளனாகக் காட்டவும், மற்றவர்களுக்கு ஏற்றமாதிரிப் பேசவும் வேண்டிய கட்டாயம் இசைஞானிக்கில்ல.. அவர் ஒரு அரசியல் தலைவரோ ஒரு நாட்டின் பிரதமரோ அல்ல. அவர் ஒரு இசைக்கலைஞர்.

உலக இசை வல்லுனர்களை அறிந்தவர்களுக்குப் புரியும், அது மைக்கேல் ஜாக்சனாக இருந்தாலும் சரி, பிறின்ஸ் ஆக இருந்தாலும் சரி.. அவர்களின் செயற்பாடு ஊக்க மாத்திரை எனும் Drugs சம்பந்தப் பட்டதாகவும், பாலியல் துஷ்பிரயோகங்கள் நிறைந்ததாகவும், ( பெரும்பான்மையானவர்கள் ) இருக்கிறது. இது இசைகலைஞர்களுக்கே உரித்தான ஒரு பொதுவான பலவீனமாக / குணாம்சமாகப் பார்க்கப் படுகிறது. தேவைக்கதிகமான புகழும், பணமும், ரசிக ரசிகைகள் செல்வாக்கும் ஏற்படும் போது அதிலிருந்து மீழ முடியாமல் திக்குமுக்காடி சின்னாபின்னமாகிறார்கள்.

தமிழகத்திலேயே இசைஞானியின் திறமையுடன் ஒப்பிட முடியாத ஒரு இசையமைப்பாளர், 85 களில் வைரமுத்துவுடன் சேர்ந்து மிகப் பெரிய சினிமா நிறுவனம் ரஜினியை வைத்தெடுத்த சில படங்களுக்கு இசையமைத்து அவை ஹிட்டானதால் திடீர் உச்சத்துக்கு போய் அந்தப் புகழ் போதையால் திக்குத்தெரியாமல் போயிருந்தார்.

ஆனால் அவை ஒன்றுக்கும் ஆட்படாமல், எந்தக் கிசுகிசுவுக்கும் உள்ளாகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று நினைத்து எம்மையெல்லாம் பல தசாப்தங்களாக இசையெனும் இன்ப மழையால் நனைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி, எப்படிப் பேசுகிறார், எப்படிப்பதிலளிக்கிறார் என்பதல்ல முக்கியம். உலக அழவில் மற்றய இசைவல்லுனர்களோடு ஒப்பிடுகையில் இது அற்ப விடயம்.. அவர் இசையெனும் அந்தத் தெய்வீகத் தொழிலை ஒழுங்காகச் செய்துள்ளாரா என்பதுதான் முக்கியம். அவர் கிராமத்தில் இருந்து வந்த மனிதன். பல்கலைக் கல்விகளோ, காலேஜ் கல்விகளோ கற்று வந்து பேட்டி கொடுக்கவில்லை. அதனால் அவரின் பதில் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற மாதிரித்தான் இருக்கும். அவரை இசை என்ற அதீத ஆற்றல் கொண்ட ஒரு சராசரி மனிதனாக, கிராமத்தானாக பார்ப்பவர்களுக்கு இதில் எந்த குழப்பங்களுமே ஏற்படாது. மாறாக அந்த வித்தகச் செருக்கைப் பார்த்து ரசிக்கத்தான் முடியும்.

இப்போ மீண்டும் அந்த வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள் :

மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல் சொல்வது..

"இந்த உலகத்தில் நேர்மையாய் இருப்பவர்களுக்கு திமிர்தான் வேலியே"

இசைஞானிக்கு திமிர் வேலிமட்டுமல்ல , அவரைப் பாதுகாக்கும் அரண் , அது அவருக்கு அழகும் கூட.