Thursday, 17 January 2013

V.V.S.லக்க்ஷ்மன் - தன்னம்பிக்கயின் தாரக மந்திரம்கிறிக்கற்றின் சித்தாந்தத்தை (Theory) உடைத்தெறிந்த, அவுஸ்திரேலியர்களின் புரியாத புதிர் - 3





11.3.2001 கொல்கொத்தா EDEN GARDENல் 3 வது ரெஸ்ற் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டிக்கு அம்பயர்களாக இந்தியாவை சேர்ந்த எஸ்.கே. Pansal இங்கிலாந்தை சேர்ந்த பி.wills சும் பணியாற்றினார்கள். மூம்பாயில் நடந்த முதல் test ல் இந்தியா படு தோல்வியடைந்திருந்தாலும்,EDEN GARDEN ல் கூட்டம் நிரம்பத்தொடங்கியது. கொல்கத்தாவில் கங்குலியின் செல்வாக்கு, STEVE WA
UGH கல்கத்தாவிலுள்ள உதயன் என்ற ஆதரவற்ற அமைப்பின் மேல் காட்டிவந்த பரிவும் உதவிகளும், மற்றும் ஆஸ்திரேலியா 17 வது வெற்றியை பெற்று இந்தியாவில் சாதனையை நிலைநாட்டுவார்களா??? அல்லது இந்திய வீரர்கள் தொடரும் ஆஸ்திரேலியர்களின் சாதனையை முறியடிப்பார்களா?? போன்ற ஆர்வக் கோளாறுகளுடன் , கொல்கத்தா வாசிகளுக்கு இயல்பிலேயே கிறிக்கற்றின் மேலுள்ள வெறித்தனமான காதலையும் இதற்கான காரணங்களாகக் கொள்ளலாம்,

நாணயச் சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆடத்தொடங்கியது. இதில் STEVE WAGH 110 ரன்களும், MATHEW HEYDEN 97 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினார்கள். இதில் முக்கியமானது கடைசி விக்கற்றான JASON GILLESPIE STEVE WAUGH வும் கூட்டுச் சேர்ந்து 133 ரன்கள் எடுத்ததுதான். இறுதியில் ஆஸ்திரேலியா எல்லா விக்கட்டுக்களையும் இழந்து 445 ரன்களை எடுத்திருந்தது. உண்மையில் eden gardenல் இந்த எண்ணிக்கையான ரன்களை முதலில் எடுக்கும் அணி அதை வெற்றி எண்ணிக்கை என்றே கொள்வார்கள். இந்தியாவின் பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி 7 விக்கட்டுக்களை எடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலியர்களின் வேகப் பந்துக்கு முகம் கொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக விக்கட்டுக்களை இழக்கத்தொடங்கியது. இதில் ஆறாவது வீரனாக களமிறங்கிய லக்ஸ்மன் மட்டும் 122 நிமிடங்கள் விளையாடி 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் விஷேடம் என்னவென்றால் 48 (12@4) ரன்களை boundry யாக அவர் எடுத்திருந்ததுதான். இதைப்பற்றி STEVE WAUGH தனது நூலில் ,இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஆறாவது துடுப்பாட்ட வீரனாக களமிறங்கிய laxman Out of foam மில் இருந்தார்.அந்த வேளையில் இந்திய அணியில் நிரந்தரமான வீரராக இடம்பிடிப்பதற்கு மிகவும் போராடிய லக்ஸ்மனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் test ராக அந்த போட்டி இருந்தது.. லக்ஸ்மன் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது சக வீரராகவும் இந்திய அணியின் இறுதி வீரருமாக விளையாடிக்கொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாத் Gillespieயின் ஒரு பந்துக்கு clean L.B.W. ஆனால் அம்பயரின் பிழையான தீர்ப்பால் அவருக்கு அவுட் கொடுபடவில்லை. இதனால் லாபம் அடைந்தவர் லக்ஸ்மனே, ஏனெனில், பிரசாத் அவுட் ஆகி இருந்தால் முதலாவது இனிங்ஸ் முடிந்திருக்கும், ஆனால் இந்த bad decision ஆல் லக்ஷ்மனுக்கு மேலும் விளயாடி தனது foam இனை திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது. 37ரன்னுடன் போக வேண்டியவர் கடைசியில் 59 ரன்வரை விளையாடியதால் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டார்.. இப்படிச் சொல்கிறார் steve, இதில் உண்மை இல்லாமலில்லை ஆனால் ஒரு கட்டத்தில் தவறான தீர்ப்பினால் Gillespie யிற்கும் கொடுக்கப்பட வேண்டிய அவுட்டும் கொடுக்கப் படவில்லை என தனது நூலில் Gillespie குறிப்பிடுகிறார். எனவே கிறிக்கற்றில் இப்படியான சம்பவங்கள் நடப்பது இயல்பானது.தவிர்க்க முடியாதது. அதைக் கொண்டு எதனையும் தீர்மானிக்க முடியாது

இந்தியா தனது முதலாவது இனிங்ஸில் 171 ரன்கள் மாத்திரமே எடுத்திருந்தது. இதில் லக்ஸ்மன் அதிக ஓட்டங்களான 59 ஓட்டங்களை எடுத்திருந்தார்.ஆஸ்திரேலியர்கள் மிகத்திறமையாக பந்துவீசியிருந்தனர்.அவர்களின் 3 வேகப் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து Shane Warne ம் பந்துவீச்சில் கலக்கி இருந்தார்.இவர்களில் Glen Mcrath 14 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கட்டுக்கள் எடுத்திருந்தார். இவரின் இந்த 14 ஓவர்களில் 8 Maiden ஓவராகப் போட்டிருந்தது அவரின் பந்து வீச்சின் தரத்தையும் சாணக்கியத்தையும் எடுத்துக் காட்டுகிறதல்லவா???







Photo: இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகளின்  ரெஸ்ற் போட்டிகளின் எதிர்காலம்.

சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு ரெஸ்ற் கிரிக்கெட்  சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இந்திய அணியை ( சீரீஸ்)  வெற்றி கொண்டது. . கடந்த 28 வருடங்களுக்குப் பின் இங்கிலாந்து இந்தியா சென்று ஒரு சீரிஸை வெற்றிகொண்டது சாதாரண விடயமல்ல. கவலைக்குரிய விடயம்.   அதே போல் 

ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள  இலங்கை அணி,  மிகச் சாதாரணமாகக் கணிக்கப் பட்ட ஆஸி அணியிடம் படு தோல்விகளைக் கண்டு வருகின்றது.   இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களால் ஒரு இனிங்சில் 10 விக்கட்டுக்களை எடுக்க முடியாது... என்ற துர்ப்பாக்கிய நிலையை காணக் கூடியதாக உள்ளது. ஆஸி அணியின் பந்து வீச்சாளர்களால் இலகுவாக எடுக்கும் ஓட்டங்களுக்கு இணையான ஓட்டங்களை இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களால் கூட எடுக்க முடியாத நிலையிலேயே அவர்களின் நிலை காணப் படுகிறது. 

 நாடுகளைப், பிரதிநிதித்துவப் படுத்துவதும், ஒரு நாட்டின் கௌரவம் எனக் கருதப் படுவதுமான சர்வதேசக் கிரிக்கெட் அணிகளின் இந்த அவல நிலைக்கான காரணம் என்ன ??? 

ஆஸி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய இலங்கை அணிகள் திண்டாடுவது ஏன்?? என  அறிய முற்பட்டேன், அப்போது ந்என்னால்   கண்டறியப் பட்ட பல காரணங்களில் முதன்மையானது தற்போதைய  ஆசிய வீரர்களில் பலர் ரெஸ்ற் கிரிக்கெட்டின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதும்.. பாரம்பரியமான ரெஸ்ற் கிரிக்கெட் என்ற இந்த அற்புத விளையாட்டை விளையாடும் அழவுக்கு மன உறுதியும், பொறுமையும், திடகாத்திரமும்,, ஓர்மமும் ,வைராக்கியத்தையும் தம்முள்ளே வளர்த்துக் கொள்ளாதவர்கள் என்பதும் புரிந்தது. 

ஒரு ரெஸ்ற் கிரிக்கட்டர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இந்தியாவின் சச்சின், ட்ராவிட்,  மற்றும் லக்ஷ்மன் மிகப் பெரிய உதாரணங்கள். ஆழுமையும் திறமையும் ஓர்மமும், விடாமுயற்சியும், கொண்ட தன்னம்பிக்கையாளர்கள்.  இவர்களை இப்படி அழைப்பதற்கான காரணம் என்ன???  அதற்கான விளக்கததை பல மாதங்களுக்கு முன்னர் லக்ஷ்மனைப் பற்றி நான் எழுதிய தொடரில் குறிப்பிட்டிருந்தேன். தற்போதைய நிலையில், இந்திய இலங்கை அணிகள் ரெஸ்ற் கிரிக்கெட்டில் மண்கவ்விக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களின் இந்த அவல நிலைக்கான காரணத்தை ஓரளவுக்காவது புரிந்து கொள்ள,  எனது அந்தத் தொடர் கட்டுரை உதவக் கூடும். அதனால் அதை மீண்டும்  பதிவிடுகிறேன். 
நண்பர்களே உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். 


V.V.S.லக்‌ஷ்மன் - தன்னம்பிக்கயின் தாரக மந்திரம் கிறிக்கெட்டின் சித்தாந்தத்தை (Theory)
உடைத்தெறிந்த, அவுஸ்திரேலியர்களின் சிம்ம சொப்பனம் - 1 


2003 -2004ல் இந்திய‌ கிறிக்க‌ற் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்டிருந்த‌ கால‌ம், அந்த‌ அண
ியில் ச‌ட‌கோப‌ன் ற‌மேஷ் என்ற‌ ஒரு த‌மிழ‌னும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இட‌ம்பிடித்திருந்தார். அதுவ‌ரை கிறிக்க‌ற்றில் பெரித‌ள‌வான அக்க‌றை இல்லாதிருந்த‌ என‌க்கு, சக‌ த‌மிழனின் விளையாட்டை பார்க்கும் ஆர்வ‌க்கோளாறு ஏற்ப‌ட்டது. அத‌ற்கு ம‌ற்றுமோர் கார‌ண‌ம் இந்த‌ ச‌ட‌கோப‌ன் ற‌மேஷ் என‌து ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ ந‌டிக‌ரும், ந‌ம‌க்கெல்லாம் "த‌ல‌"யுமான‌ க‌வுண்ட‌ம‌ணியின் தீவிர‌ ர‌சிக‌ன் என்ற‌தை வார‌ ச‌ஞ்சிகையொன்றில், அவ‌ரின் பேட்டியின் மூல‌ம் அறிந்திருந்த‌தும் ஆகும். ர‌சிக‌னுக்கு ர‌சிக‌ன் ந‌ண்ப‌ன் என்ற‌த‌ற்க‌மைய‌ அந்த‌ 3 ரெஸ்ற் ம‌ச்சையும் பார்ப்போம் என்று முடிவெடுத்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் பிய‌ருட‌ன் அம‌ர்ந்தேன்.

சனல் 9 என்னும் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய கிறிக்கற் சனல் வழமைபோல் போட்டியை ஒளிபரப்பத்தொடங்கியது. இந்தச் சனல் 9 இன் கிறிக்கற் விமர்சகர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல.. ரோனி கிறேக்(tony craig), றிச்சி பெனோ,(Richi beno)இயன் சப்பல் (ian chappel), மார்க் ரெய்லர்,(Mark taylor) பில் லோறி,(bill lawry)இயன் ஹீலி (ian healy) ,மார்க் நிக்கிலஸ்,(Mark Nicholas) மைக்கல் ஸ்லேற்றர் (Mikaell Slater) என முன்னாள் கிறிக்கற் வீரர்கள். பெரும்பாலானவர்கள் அவுஸ்திரேலியாவினதும், இங்கிலாந்தினதும் முன்னாள் கப்ரன்கள் (Captains).இவ‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஒவ்வொரு வீர‌ரைப்பற்றிய‌ க‌ணிப்பும் அச்சொட்டாக‌, நெத்திய‌டியாக‌ இருக்கும். இலேசில் யாரையும் புக‌ழ்ந்தோ, புழுக‌வோ மாட்டார்க‌ள்.. அத‌ற்கான‌ அவசிய‌மும் ,எந்த‌ அழுத்த‌மும் இல்லாத‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள்.

போட்டி ஆர‌ம்பித்த‌து என‌க்கோ ஏமாற்றம், கார‌ண‌ம் அந்த‌ போட்டியில் ர‌மேஷ் விள‌யாட‌வில்லை. அவ‌ருக்கு ப‌திலாக‌ ஆகாஷ் சோப்ராவும், ஷேவாக்கும் க‌ள‌மிற‌ங்கினர். மிக‌வும் மெதுவாக‌ ஆர‌ம்பித்த‌ ஆட்ட‌ம் மெதுமெதுவாக‌ ஆஸ்திரேலிய‌ரின் ப‌க்க‌ம் சாய‌த்தொட‌ங்கிய‌து. இந்திய‌ வீர‌ர்க‌ள் அடுத்த‌டுத்து ஆட்ட‌மிழ‌க்க‌த்தொட‌ங்கின‌ர். ட்றாவிட் ,பின் ச‌ச்சின் (0) என‌ ஆட்ட‌மிழ‌ந்து இந்திய‌ அணி சொத‌ப்பிக்கொண்டிருந்த‌போது ஆறாவ‌தாக‌ ஒருவ‌ர் க‌ள‌மிற‌ங்கினார்.அதுவ‌ரை சாத‌ர‌ண‌மாக‌ போய்க்கொண்டிருந்த‌ ரி.வி. வ‌ர்ண‌னை திடீரென்று சூடுபிடிக்க‌த்தொட‌ங்கிய‌து. ஒருவ‌ர் மாறி ஒருவ‌ராக‌ புதிதாக‌க் க‌ள‌மிற‌ங்கிய‌வ‌ரை ப‌ற்றியும் அவ‌ரின் ம‌ணிக்க‌ட்டை சு‌ழ‌ற்றி ஆடும் வ‌ல்ல‌மையையும், கிளன்ம‌க்றா( Glen Mcrath) என்ற, உலக துடுப்பாட்ட வீரரையெல்லாம் க‌திக‌ல‌ங்க‌ச் செய்து கொண்டிருந்த அவுஸ்திரேலிய‌ வேக‌ப்ப‌ந்துவீச்சாள‌ரை எந்த‌வித‌ ப‌ய‌முமின்றி நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் லாவ‌க‌த்தைப் ப‌ற்றியும், ஷேன் வார்ன் (Shane warne) என்ற‌ சுழ‌ல்ப‌ந்தின் உச்ச‌ வீர‌னை பிச்சுக்கு உள்ளே வ‌ந்து அடித்தாட‌ப் போகும் ஸ்ரைல‌யும் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டே இருந்தார்க‌ள்.. என‌க்கோ ஒன்றுமே புரிய‌வில்லை, ஒரு வெளி நாட்டு வீர‌னை, அதுவும் த‌ம‌து நாட்டு அணியை எதிர்த்து மோத‌ப் போகின்ற‌வ‌ரைப் ப‌ற்றி இந்த‌ப் பெரிய‌ கிறிக்க‌ற் ஜாம்ப‌வான்க‌ளும், கிறிக்க‌ற்றை க‌ரைத்துக் குடித்த‌ ப‌த்தி எழுத்தாள‌ர்க‌ளும் புக‌ழ்கிறார்க‌ளென்றால் !! இவ‌ர் சாமானிய‌ கிறிக்க‌ற்ற‌ர் அல்ல‌.. இவ‌ர் சாத‌னையாள‌ராக‌த்தான் இருக்க‌ வேண்டுமென்ற‌ முடிவுட‌ன் அவ‌ரின் ஆட்ட‌த்தை பார்க்க தொடங்கினேன்.ஏற்கனவே மற்றய பக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த இந்தியாவின் மிகச் சிறந்த கப்ரன் கங்குலியுடன் சேர்ந்து,தோல்வியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்த அணியை அந்தத் தோல்வியிலிருந்து தடுப்பதற்கான தடுப்பாட்டத்தை (defensive) (போராட்டத்தை)நிதானமாக ஆரம்பித்து, அந்தப் ஆடுகளத்தைப் பற்றியும் பந்துவீச்சாளர்களின் அன்றைய தரத்தைப் பற்றியும்,காலநிலைக்கேற்ப பந்தின் அசைவைப் பற்றியும் அறிந்ததும் தடுப்பாட்டத்திலிருந்து அதிரடி ஆட்டத்துக்கு (Attacking) மாறி, கங்குலியுடன் சேர்ந்து மிகப் பெரும் தோல்வியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றினார் அந்த வீரன். அவர் தான் வி.வி.எஸ்.லக்ஷ்மன்.

இதில் கங்குலி சிறப்பாக விளயாடி 144 ஓட்டங்கள் எடுத்திருந்த போதும் லக்க்ஷ்மனின் 75 ஓட்ட‌ உறுதுணை இல்லாதிருந்தால் தாக்குப் பிடித்திருக்க முடியாது. அவரின் அன்றைய ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த நான் ஏனோ தானோ என்றில்லாமல்அந்த ஆட்டத்தின் நெழிவு சுழிவுகளயும், தந்திரோபாயங்களயும் (Tactics) உணரத்தலைப் பட்டேன். லக்ஷ்மன் தனது அணி மிக இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில், எதிரணியினரை,முக்கியமாக ஆஸ்திரேலியரை கதிகலங்க வைக்க‌ எடுக்கும் உத்திகளை (Tactics) பார்த்து
மெய்சிலிர்த்துப்போனேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல,அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக அவரது ஆட்டம் அமைந்திருந்ததை பார்த்த போதுதான் நான் இதுவரை காலமும் நினைத்திருந்த கிறிக்கற் வேறு என்பதும் இந்த அழகான விளயாட்டை உடலால் மட்டுமல்ல மனதாலும் (physically & mentally) விளயாட வேண்டுமென்ற உண்மயையும் உணரத்தொடங்கினேன், கிறிக்கற் சம்பந்தமாக வெளிவந்த புத்தகங்களயும், முக்கியமாக முன்னாள் வீரர்களின் சுயசரிதைகளயும் (autobiographs), அவர்களினதும் அவர்களது கப்ரன்களினதும் தந்திரங்களயும் உள்வாங்கத் தொடங்கி, கிறிக்கற்றின் அதிசயமான வெற்றிகளயும்,அதற்குக் காரணமானவர்களின் உத்திகளயும் படிக்கத் தொடங்கிய போது லக்ஷ்மன் என்ற உண்மைக் கிறிக்கற் வீரனை புரிந்து கொண்டதால் அவரை மதிக்கத் தொடங்கினேன்.

லக்க்ஷ்மன் ஆஸ்திரேலியக் கிறிக்கற் ரசிகர்களிடம் பேரபிமானம் பெற்றவர், கிறிக்கற் அறிவுஜீவிக‌ளினால் மிக‌ச்சிற‌ந்த‌ வீர‌ர் என‌ கௌர‌விக்க‌ப்படுபவர். இவர் எப்ப‌டி ம‌ற்ற‌ய‌ கிறிக்கற் வீரர்களில் இருந்து வித்தியாச‌ப்ப‌டுகிறார்.???

இந்தியா முதலாவது இனிங்ஸில் சொதப்பி மிகக் குறைவானதும், ஆஸ்திரேலியா எடுத்த ஓட்டங்களின் தொகையை விட 200 ஓட்டங்களுக்கு மேல் குறைவான ஓட்டங்களை எடுத்த படியால் ஸ்டீவ் வோவுக்கு இரண்டு options இருந்தது.
(1) இரண்டாவது இனிங்ஸையும் வழமைபோல் துடுப்பாட்டத்துடன் தொடங்கி மேலும் அதிக ஓட்டங்கள் குவித்து விட்டு, இந்தியாவை தமது ஓட்டங்களுக்கு மேல் எடுக்க பணிப்பது.
(2) இந்தியாவையே மீண்டும் துடுப்பாடச் சொல்லி விட்டு இந்தியா எடுக்கும் ஓட்டங்களை விட ஒரு ஓட்டத்தை அதிகமாக எடுப்பது.இதை Follow on முறை என்று அழைப்பார்கள்.

இந்தியாவை முறைப்படி மீண்டும் துடுப்பாடும் படி Steve அழைத்தார். அவரின் இந்த முடிவைப்பற்றி கிறிக்கற் உலகில், குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இன்றுவரை வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணமேயுள்ளன. ஆனால் Steve Waugh ன் சுயசரிதையின் படி, அந்த முடிவை தனது அணியிலுள்ள எல்லோருடனும் கலந்து பேசிய பின்னர், அவர்களின் விருப்புடனேயே எடுத்ததாக எழுதியுள்ளார். அந்த முடிவு சரியானதென்றே இன்றுவரை உறுதியாகவும் உள்ளார். ஆனால் Gillespie யின் சுயசரிதையின் படி ஸ்டீவின் முடிவை Michkel Slater ( ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்) கடுமையாக எதிர்த்ததாகவும், Mcrath & Heydan உறுதியாக இருந்து அவரின் முடிவுக்கு வலுச்சேர்த்ததாகவும் எழுதுகிறார்.. எது எப்படியோ ஆஸ்திரேலியக் கப்ரனின் அழைப்புக்கு இணங்க இந்தியா Follow on படி தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸ்சை தொடங்கியது.

 

 
ஆஸ்திரேலியாவின் முதல் இனிங்ஸ்ஸின் மொத்த ஓட்டங்களை பெறவே 274 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆளையாள். கேள்விக்குறியுடன் பார்த்த படி இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சென்னையை சேர்ந்த ரமேசும், தாசும் களமிறங்கினர். 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் warneனின் பந்துவீச்சில் ரமேஷ் அவுட்டானார். அதைத் தொடர்ந்து இந்தியக் கப்ரன் கங்குலி எடுத்த அதிரடியான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் கங்குலி கூட , தனது அந்த முடிவு திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல என்று பல தடவைகள் கூறிவிட்டார். அந்த அதிரடி முடிவு என்னவென்றால் அதுநாள் வரை மூன்றாவதாக களமிறங்கிய ட்ராவிட் என்ற தூணை, நிறுத்திவிட்டு, லக்ஸ்மனை பதிலாக அனுப்பியது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் : உலகின் தலை சிறந்த எந்த ஒரு கிறிக்கற் அணியை எடுத்துக்கொண்டாலும், அந்த அணியின் மிகச் சிறந்த வீரனைத்தான் 3வது வீரனாக களம் அனுப்புவார்கள். ஏனெனில் அவர்தான் ஒரு அணியின் முதுகெலும்பு. அணியின் நிலைமைக்கு ஏற்பவும். சூழ்நிலைக்கு ஏற்பவும் உடனுக்குடன் தன்னை தயார் படுத்தக்கூடிய திறமைசாலியாக அவர் இருக்க வேண்டும். உதாரணமாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் முதலாவது ஓவரிலேயே அவுட் ஆகும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அடுத்ததாக களம் இறங்கும் 3ம் இட வீரர் உடனேயே தன்னை ஆரம்பத்துடுப்பாட்ட வீரனாக மாற்றிக்கொண்டு நிலைமைக்கு ஏற்ப விளையாட வேண்டும். இது இலகுவான விடயமல்ல. பந்துகளின் அசைவுகளிலேயே (Movements) மாற்றம் இருக்கும் .. அவற்றைப் புரிந்து விளயாட வேண்டும். இதனால் தான் டோனி போன்ற அதிரடி மன்னர்கள் 5ம் 6ம் வீரராக போவதற்கு ஆசைப்படுகிறார்கள். சரி விடயத்துக்கு வருவோம். கங்குலியின் இந்த முடிவுக்கு, முதல் இனிங்ஸில் லக்ஸ்மன் எடுத்த அதிக ஓட்டம் மற்றும் அதிக Boundry அடித்ததை காரணமாகச் சொல்லலாம். இதற்கிடையில் இந்தியா தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த ஆஸ்திரேலிய அணியினர் மிகுந்த தன்னம்பிக்கயுடன் தமது 17 வது தொடர்ந்த ரெஸ்ற் வெற்றியுடன் கூடிய சாதனையை கொண்டாடும் முகமாக Partyக் கனவு காணத்தொடங்கி விட்டிருந்தனர். Gil Christ தனது சுய சரிதையில் இப்படி எழுதுகிறார். அன்று காலை நாம் எல்லோரும் உற்சாகத்துடன் காணப்பட்டோம்.. Michael Slater தனது பைக்குள்ளிருந்து ஒரு Cuba சுறுட்டை எடுத்து அதை ரசித்து முகர்ந்துவிட்டு.. ம்ம்ம் இந்த Test வெற்றியை கொண்டாடும் முகமாக, இன்றிரவு உன்னை ஒரு கைபார்க்கிறேன் எனச் சொல்லி சென்றதாக எழுதுகிறார்.

ஆஸ்திரேலியருக்கு நடந்தது என்ன?? லக்ஸ்மன் மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களம் இறங்குவதற்கு பொருத்தமானவர் தானா??? ஆஸ்திரேலியர் தங்களின் சாதனையை முறியடித்தார்களா?? இந்தியா ஆஸ்திரேலியர்களின் தொடர் வெற்றி என்ற சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்களா??



லக்ஸ்மன் - கிறிக்கற்றின் சித்தாந்தத்தை உடைத்தெறிந்தவன், அவுஸ்திரேலியர்களின் சிம்ம சொப்பனம் - 2

லக்ஷ்மன் வெங்கிபுறப்பு வெங்கட் சாய் 1.11.74ல் ஆந்திராவின் ஹைதராபாத்தில் பிறந்தார். பெற்றோர்கள் இருவருமே மருத்துவர்கள்.தனது கல்வியை ஹைதராபாத்தில் மேற்கொண்ட அவர் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு இருந்தும் அதை புறந்தள்ளிவிட்டு தனது கனவான கிறிக்கற்றை தெரிவு செய்து, படிப்படியாக முன்னேறி 20.11.96ல் தனது முதல் ரெஸ்ற் போட்டியை தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஆரம்பித்தார். சர்வதேச ஒரு நாள் போட்டியை 9.4.98ல் சிம்பாப்வேக்கு எதிராகத் தொடங்கினார். இவர் தனது முன்மாதிரியாகவும், கனவு நாயகனாகவும் ஏற்றுக்கொண்டது முன்னாள் இந்திய கப்ரனும், ஆந்திராக்காரருமாகிய மொஹமட் அசாருதீனை ஆகும்.

ஆரம்பத்தில் அவரால் சோபிக்க முடியவில்லை. , இடை நிலை ஆட்டக்காரரான அவரை இந்திய அணியின் கப்ரன்களும், நிர்வாகமும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறக்கியதுதான் இதற்கான முக்கிய காரணமாக கிறிக்கற் விமர்சகர்களால் அது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஆரம்ப தடுமாற்றத்தினால் இந்திய அணியில் நிலையான வீரனாக அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
2000ம் ஆண்டு இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரம் மீண்டும் உள்வாங்கப்பட்ட லக்ஸ்மன் அந்த சுற்றுப்பயணத்தில் சக வீரர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியாவின் வேகமான ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் புற முதுகிட்ட வேளை அவர்களை நேருக்கு நேராய் எதிர்த்து நின்றதோடல்லாமல் உலக கிறிக்கற் வரலாற்றில் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வார்னையும் எதிர்த்து மிகச்சிறப்பாக விளையாடி சிட்னியில் தனது முதல் செஞ்சுரியை (167ரன்கள்) போட்டார். சர்வதேச ரெஸ்ற் கிறிக்கற் விளயாடத் தொடங்கி 33 வது இனிங்சிலேயே அவரால் செஞ்சரி போடக்கூடியதாக இருந்தது.

இந்த வெற்றிகரமான ஆட்டத்துக்கு பின், தன்னை நிரூபித்துவிட்டதாலோ என்னமோ , இவர் இந்திய கிரிக்கற் கட்டுப்பாட்டு சபையிடம்,தன்னால் இனி தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்க முடியாது என கூறிவிட்டு ஹைதராபாத் சென்று, மீண்டும் தனது மாநிலத்துக்காக விளயாட ஆரம்பித்தார். இது உலக கிறிக்கற் ரசிகர்களை பொறுத்த வரை துரதிர்ஷ்டமே.

ஒருவாறாக ,ஒரு வருடத்துக்கு பின்பு ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தை மனதில் கொண்டு மீண்டும் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டார். இதன் முக்கிய காரணம் மக்றா வார்னி போன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக சிட்னியில் அவர் போட்ட 167 ரன்கள் என்றால் அது மிகையல்ல.

அதுவரை இந்திய கிறிக்கற்றில் zero வாக இருந்த லக்ஸ்மன் நடக்கப் போகும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பின் hero வாகப் போகிறார் ,என்பதோ கிறிக்கற்றின் சித்தாந்தத்தையே (theory) மாற்றப் போகிறார் என்பதையோ லக்ஸ்மன் உட்பட யாருமே நினைத்துப்பார்க்கவில்லை.

2001 februaryயில் 3 ரெஸ்ற் மற்றும் ஒரு நாள் தொடர்களை விளயாடாடுவதற்காக, இன்றுவரை உலகின் தலை சிறந்த கிறிக்கற் கப்ரன்களில் ஒருவரும், கிறிக்கற் உலகில் மிக மதிப்புக்குரியவருமான Steve Waugh தலைமையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சென்றது. இந்த பயணம் ஆஸ்திரேலியர்களுக்கு மிக முக்கியமானது என அவர்கள் கருதினார்கள் காரணம், தொடர்ந்து 15 ரெஸ்ற் போட்டிகளில் வெற்றிவாகை சூடிய அவர்கள் இந்த 3 ரெஸ்ற் தொடரின் முதல் இரண்டையும் வெல்வார்களாயின் ஏற்கனவே அவர்களின் முன்னோர்களால் ( முன்னைய ஆஸ்திரேலிய அணி ) உருவாக்கப் பட்டிருந்த 16 ரெஸ்ற் போட்டிகளில் தொடர் வெற்றி, என்ற சாதனையை (Record) மீண்டும் தாமே முறியடித்து விடலாம் என்ற ஆசையாகும்.. இந்த வெற்றி, ஸ்டீவ் வோவ் வின் சரித்திரத்தில் பதிக்கப்பட்டிருக்கும் என்பதுடன், கிறிக்கற் அறிவு நிரம்பப் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய மரியாதையை அவரின் மேல் எதிர்கால சந்ததிக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்லாமல் 1969ல் பில் லோறியின் தலைமையில் இந்தியா சென்று வென்ற ஆஸ்திரேலிய அணிக்குப் பிறகு, எந்தவொரு ஆஸ்திரேலியக் கப்ரனும் இந்தியாவில் test series (தனி test போட்டிகளில் வென்றுள்ளார்கள்) இனை முழுமையாக வென்றதில்லை. எனவே அந்த வெளையில் உலகின் தலை சிறந்த பந்து வீச்சு இரட்டையர்களான (Shane warne) வார்னி மற்றும் (Mc grath )மக்றாவையும், சிறந்த துடுப்பாட்ட வீரர்களான லங்கர்,(Justin lager) பொன்ரிங் (Ricky ponting),ஹெய்டன் (Mathew hayden),மார்க் வாஹ், (Mark Waugh) போன்றவர்களை தனது அணியில் கொண்டிருந்த ஒரு கப்ரன் (steve
wagh) தன்னம்பிக்கயுடன் இருப்பது இயற்கையானதுதானே??

Border - Gavasker என்ற trophy க்காக நடாத்தப்பட்ட இந்தத் தொடரின் முதல் ரெஸ்ற் 27.2.2001 மும்பாயில் தொடங்கி ஆஸ்திரேலியாவால் 10 விக்கற்றுக்களால் இலகுவாக வெற்றிகொள்ளப்பட்டது. இந்த வெற்றி மூலம் தமது முன்னோர்களின் தொடர்ந்து 16 test match களில் வென்ற சாதனையை சமப்படுத்திய ஆஸ்திரேலியா, அந்த வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையில் கொல்கொத்தா நோக்கி பயணமானார்கள். இந்த வெற்றிக்கு பிறகு Steve Waugh, தனது சுயசரிதையில் இப்படிக்கூறுகிறார். மும்பையில் பெற்ற வெற்றிக்கு பின்பு கல்கட்டாவில் எமது 2 வது ரெஸ்ற்ரிலும் இலகுவாக வென்றதும் அந்த வெற்றியை கொண்டாடி மகிழ்வதற்காக southern comfort ( அவுஸ்திரேலியர்கள் விரும்பிக்குடிக்கும் மதுபானம்) ரெடியாக இருந்தது.... இப்படி அவர் தனது அனுபவத்தையும், மிகவும் தன்னம்பிக்கையுடன் கொல்கத்தா வெற்றியை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதையும் விபரிக்கிறார்.








Photo: V.V.S.லக்க்ஷ்மன் - தன்னம்பிக்கயின் தாரக மந்திரம்கிறிக்கற்றின் சித்தாந்தத்தை (Theory) உடைத்தெறிந்த, அவுஸ்திரேலியர்களின் புரியாத புதிர் - 3

11.3.2001 கொல்கொத்தா EDEN GARDENல் 3 வது ரெஸ்ற் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டிக்கு அம்பயர்களாக இந்தியாவை சேர்ந்த எஸ்.கே. Pansal இங்கிலாந்தை சேர்ந்த பி.wills சும் பணியாற்றினார்கள். மூம்பாயில் நடந்த முதல் test ல் இந்தியா படு தோல்வியடைந்திருந்தாலும்,EDEN GARDEN ல் கூட்டம் நிரம்பத்தொடங்கியது. கொல்கத்தாவில் கங்குலியின் செல்வாக்கு, STEVE WA
UGH கல்கத்தாவிலுள்ள உதயன் என்ற ஆதரவற்ற அமைப்பின் மேல் காட்டிவந்த பரிவும் உதவிகளும், மற்றும் ஆஸ்திரேலியா 17 வது வெற்றியை பெற்று இந்தியாவில் சாதனையை நிலைநாட்டுவார்களா??? அல்லது இந்திய வீரர்கள் தொடரும் ஆஸ்திரேலியர்களின் சாதனையை முறியடிப்பார்களா?? போன்ற ஆர்வக் கோளாறுகளுடன் , கொல்கத்தா வாசிகளுக்கு இயல்பிலேயே கிறிக்கற்றின் மேலுள்ள வெறித்தனமான காதலையும் இதற்கான காரணங்களாகக் கொள்ளலாம்,

நாணயச் சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆடத்தொடங்கியது. இதில் STEVE WAGH 110 ரன்களும், MATHEW HEYDEN 97 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினார்கள். இதில் முக்கியமானது கடைசி விக்கற்றான JASON GILLESPIE STEVE WAUGH வும் கூட்டுச் சேர்ந்து 133 ரன்கள் எடுத்ததுதான். இறுதியில் ஆஸ்திரேலியா எல்லா விக்கட்டுக்களையும் இழந்து 445 ரன்களை எடுத்திருந்தது. உண்மையில் eden gardenல் இந்த எண்ணிக்கையான ரன்களை முதலில் எடுக்கும் அணி அதை வெற்றி எண்ணிக்கை என்றே கொள்வார்கள். இந்தியாவின் பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி 7 விக்கட்டுக்களை எடுத்திருந்தார்.

இதை தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலியர்களின் வேகப் பந்துக்கு முகம் கொடுக்க முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக விக்கட்டுக்களை இழக்கத்தொடங்கியது. இதில் ஆறாவது வீரனாக களமிறங்கிய லக்ஸ்மன் மட்டும் 122 நிமிடங்கள் விளையாடி 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இதில் விஷேடம் என்னவென்றால் 48 (12@4) ரன்களை boundry யாக அவர் எடுத்திருந்ததுதான். இதைப்பற்றி STEVE WAUGH தனது நூலில் ,இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஆறாவது துடுப்பாட்ட வீரனாக களமிறங்கிய laxman Out of foam மில் இருந்தார்.அந்த வேளையில் இந்திய அணியில் நிரந்தரமான வீரராக இடம்பிடிப்பதற்கு மிகவும் போராடிய லக்ஸ்மனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் test ராக அந்த போட்டி இருந்தது.. லக்ஸ்மன் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரது சக வீரராகவும் இந்திய அணியின் இறுதி வீரருமாக விளையாடிக்கொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாத் Gillespieயின் ஒரு பந்துக்கு clean L.B.W. ஆனால் அம்பயரின் பிழையான தீர்ப்பால் அவருக்கு அவுட் கொடுபடவில்லை. இதனால் லாபம் அடைந்தவர் லக்ஸ்மனே, ஏனெனில், பிரசாத் அவுட் ஆகி இருந்தால் முதலாவது இனிங்ஸ் முடிந்திருக்கும், ஆனால் இந்த bad decision ஆல் லக்ஷ்மனுக்கு மேலும் விளயாடி தனது foam இனை திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது. 37ரன்னுடன் போக வேண்டியவர் கடைசியில் 59 ரன்வரை விளையாடியதால் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டார்.. இப்படிச் சொல்கிறார் steve, இதில் உண்மை இல்லாமலில்லை ஆனால் ஒரு கட்டத்தில் தவறான தீர்ப்பினால் Gillespie யிற்கும் கொடுக்கப்பட வேண்டிய அவுட்டும் கொடுக்கப் படவில்லை என தனது நூலில் Gillespie குறிப்பிடுகிறார். எனவே கிறிக்கற்றில் இப்படியான சம்பவங்கள் நடப்பது இயல்பானது.தவிர்க்க முடியாதது. அதைக் கொண்டு எதனையும் தீர்மானிக்க முடியாது

இந்தியா தனது முதலாவது இனிங்ஸில் 171 ரன்கள் மாத்திரமே எடுத்திருந்தது. இதில் லக்ஸ்மன் அதிக ஓட்டங்களான 59 ஓட்டங்களை எடுத்திருந்தார்.ஆஸ்திரேலியர்கள் மிகத்திறமையாக பந்துவீசியிருந்தனர்.அவர்களின் 3 வேகப் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து Shane Warne ம் பந்துவீச்சில் கலக்கி இருந்தார்.இவர்களில் Glen Mcrath 14 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கட்டுக்கள் எடுத்திருந்தார். இவரின் இந்த 14 ஓவர்களில் 8 Maiden ஓவராகப் போட்டிருந்தது அவரின் பந்து வீச்சின் தரத்தையும் சாணக்கியத்தையும் எடுத்துக் காட்டுகிறதல்லவா???

இந்தியா முதலாவது இனிங்ஸில் சொதப்பி மிகக் குறைவானதும், ஆஸ்திரேலியா எடுத்த ஓட்டங்களின் தொகையை விட 200 ஓட்டங்களுக்கு மேல் குறைவான ஓட்டங்களை எடுத்த படியால் ஸ்டீவ் வோவுக்கு இரண்டு options இருந்தது.
(1) இரண்டாவது இனிங்ஸையும் வழமைபோல் துடுப்பாட்டத்துடன் தொடங்கி மேலும் அதிக ஓட்டங்கள் குவித்து விட்டு, இந்தியாவை தமது ஓட்டங்களுக்கு மேல் எடுக்க பணிப்பது.
(2) இந்தியாவையே மீண்டும் துடுப்பாடச் சொல்லி விட்டு இந்தியா எடுக்கும் ஓட்டங்களை விட ஒரு ஓட்டத்தை அதிகமாக எடுப்பது.இதை Follow on முறை என்று அழைப்பார்கள்.

இந்தியாவை முறைப்படி மீண்டும் துடுப்பாடும் படி Steve அழைத்தார். அவரின் இந்த முடிவைப்பற்றி கிறிக்கற் உலகில், குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இன்றுவரை வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணமேயுள்ளன. ஆனால் Steve Waugh ன் சுயசரிதையின் படி, அந்த முடிவை தனது அணியிலுள்ள எல்லோருடனும் கலந்து பேசிய பின்னர், அவர்களின் விருப்புடனேயே எடுத்ததாக எழுதியுள்ளார். அந்த முடிவு சரியானதென்றே இன்றுவரை உறுதியாகவும் உள்ளார். ஆனால் Gillespie யின் சுயசரிதையின் படி ஸ்டீவின் முடிவை Michkel Slater ( ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்) கடுமையாக எதிர்த்ததாகவும், Mcrath & Heydan உறுதியாக இருந்து அவரின் முடிவுக்கு வலுச்சேர்த்ததாகவும் எழுதுகிறார்.. எது எப்படியோ ஆஸ்திரேலியக் கப்ரனின் அழைப்புக்கு இணங்க இந்தியா Follow on படி தொடர்ந்து இரண்டாவது இனிங்ஸ்சை தொடங்கியது.

ஆஸ்திரேலியாவின் முதல் இனிங்ஸ்ஸின் மொத்த ஓட்டங்களை பெறவே 274 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆளையாள். கேள்விக்குறியுடன் பார்த்த படி இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சென்னையை சேர்ந்த ரமேசும், தாசும் களமிறங்கினர். 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் warneனின் பந்துவீச்சில் ரமேஷ் அவுட்டானார். அதைத் தொடர்ந்து இந்தியக் கப்ரன் கங்குலி எடுத்த அதிரடியான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் கங்குலி கூட , தனது அந்த முடிவு திட்டமிட்டு எடுக்கப்பட்டதல்ல என்று பல தடவைகள் கூறிவிட்டார். அந்த அதிரடி முடிவு என்னவென்றால் அதுநாள் வரை மூன்றாவதாக களமிறங்கிய ட்ராவிட் என்ற தூணை, நிறுத்திவிட்டு, லக்ஸ்மனை பதிலாக அனுப்பியது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் : உலகின் தலை சிறந்த எந்த ஒரு கிறிக்கற் அணியை எடுத்துக்கொண்டாலும், அந்த அணியின் மிகச் சிறந்த வீரனைத்தான் 3வது வீரனாக களம் அனுப்புவார்கள். ஏனெனில் அவர்தான் ஒரு அணியின் முதுகெலும்பு. அணியின் நிலைமைக்கு ஏற்பவும். சூழ்நிலைக்கு ஏற்பவும் உடனுக்குடன் தன்னை தயார் படுத்தக்கூடிய திறமைசாலியாக அவர் இருக்க வேண்டும். உதாரணமாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் முதலாவது ஓவரிலேயே அவுட் ஆகும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அடுத்ததாக களம் இறங்கும் 3ம் இட வீரர் உடனேயே தன்னை ஆரம்பத்துடுப்பாட்ட வீரனாக மாற்றிக்கொண்டு நிலைமைக்கு ஏற்ப விளையாட வேண்டும். இது இலகுவான விடயமல்ல. பந்துகளின் அசைவுகளிலேயே (Movements) மாற்றம் இருக்கும் .. அவற்றைப் புரிந்து விளயாட வேண்டும். இதனால் தான் டோனி போன்ற அதிரடி மன்னர்கள் 5ம் 6ம் வீரராக போவதற்கு ஆசைப்படுகிறார்கள். சரி விடயத்துக்கு வருவோம். கங்குலியின் இந்த முடிவுக்கு, முதல் இனிங்ஸில் லக்ஸ்மன் எடுத்த அதிக ஓட்டம் மற்றும் அதிக Boundry அடித்ததை காரணமாகச் சொல்லலாம். இதற்கிடையில் இந்தியா தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த ஆஸ்திரேலிய அணியினர் மிகுந்த தன்னம்பிக்கயுடன் தமது 17 வது தொடர்ந்த ரெஸ்ற் வெற்றியுடன் கூடிய சாதனையை கொண்டாடும் முகமாக Partyக் கனவு காணத்தொடங்கி விட்டிருந்தனர். Gil Christ தனது சுய சரிதையில் இப்படி எழுதுகிறார். அன்று காலை நாம் எல்லோரும் உற்சாகத்துடன் காணப்பட்டோம்.. Michael Slater தனது பைக்குள்ளிருந்து ஒரு Cuba சுறுட்டை எடுத்து அதை ரசித்து முகர்ந்துவிட்டு.. ம்ம்ம் இந்த Test வெற்றியை கொண்டாடும் முகமாக, இன்றிரவு உன்னை ஒரு கைபார்க்கிறேன் எனச் சொல்லி சென்றதாக எழுதுகிறார்.

ஆஸ்திரேலியருக்கு நடந்தது என்ன?? லக்ஸ்மன் மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களம் இறங்குவதற்கு பொருத்தமானவர் தானா??? ஆஸ்திரேலியர் தங்களின் சாதனையை முறியடித்தார்களா?? இந்தியா ஆஸ்திரேலியர்களின் தொடர் வெற்றி என்ற சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்களா??

இந்தியாவின் கொல்கொத்தாவில் உள்ள கிறிக்கற் மைதானத்தின் பெயர் Eden garden. பல வருட பாரம்பரியம் நிறைந்த இந்த மைதானம் ஏறத்தாழ 95000 பார்வையாளர்களை தன்னகத்தே கொள்ளக் கூடியது. வெளிநாட்டு வீரர்களை தனது பாரம் பரியத்தாலும்,பிரமாண்டத்தாலும் மிகவும் கவர்ந்துள்ள இந்த மைதானத்தை இந்தியாவின் லோர்ட்ஸ் என steve waugh தனது புத்தகத்தில் வர்ணித்துள்ளார். இந்த மைதானத்திலே தான் வரலாற்றுச் சிறப்பும், கிறிக்கற் சரித்திரத்தில் மிகச்சிறந்த test match என கணிப்பிடப் பட்டுள்ளதுமான இரண்டாவது போட்டி நடந்தது.
11.3.2001 இல் தொடங்கிய அந்த ரெஸ்ற் போட்டி நூறு வருடங்களுக்கு மேல் விளையாடப்பட்டு வரும் இந்த விளயாட்டின் சித்தாந்தத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியது. புதிதாக உருவாகும் இளம் வீரர்கள், இந்த விளையாட்டை அணுகும் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பல லட்சம் மக்கள் பார்த்த அந்தப்போட்டி, இன்றுவரை பலகோடிப் பேரை கவரக்காரணமானது.. ஸ்ரிவ் வோவ்வின் கனவு பலித்ததா?? ஆஸ்திரேலியா தனது சாதனையை, தானே முறியடித்து அதை southern comfort டுடன் கொண்டாடினார்கள ?? !!! லக்ஸ்மன் அப்படி அங்கு என்ன தான் செய்தான் ??? தொடர்ந்து பார்ப்போம் ( stumps
day 2)

V.V.S.லக்‌ஷ்மன் - தன்னம்பிக்கயின் தாரக மந்திரம் கிறிக்கெட்டின் சித்தாந்தத்தை (Theory) உடைத்தெறிந்த, அவுஸ்திரேலியர்களின் சிம்ம சொப்பனம் - 1










 003 -2004ல் இந்திய‌ கிறிக்க‌ற் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்டிருந்த‌ கால‌ம், அந்த‌ அண
ியில் ச‌ட‌கோப‌ன் ற‌மேஷ் என்ற‌ ஒரு த‌மிழ‌னும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இட‌ம்பிடித்திருந்தார். அதுவ‌ரை கிறிக்க‌ற்றில் பெரித‌ள‌வான அக்க‌றை இல்லாதிருந்த‌ என‌க்கு, சக‌ த‌மிழனின் விளையாட்டை பார்க்கும் ஆர்வ‌க்கோளாறு ஏற்ப‌ட்டது. அத‌ற்கு ம‌ற்றுமோர் கார‌ண‌ம் இந்த‌ ச‌ட‌கோப‌ன் ற‌மேஷ் என‌து ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ ந‌டிக‌ரும், ந‌ம‌க்கெல்லாம் "த‌ல‌"யுமான‌ க‌வுண்ட‌ம‌ணியின் தீவிர‌ ர‌சிக‌ன் என்ற‌தை வார‌ ச‌ஞ்சிகையொன்றில், அவ‌ரின் பேட்டியின் மூல‌ம் அறிந்திருந்த‌தும் ஆகும். ர‌சிக‌னுக்கு ர‌சிக‌ன் ந‌ண்ப‌ன் என்ற‌த‌ற்க‌மைய‌ அந்த‌ 3 ரெஸ்ற் ம‌ச்சையும் பார்ப்போம் என்று முடிவெடுத்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் பிய‌ருட‌ன் அம‌ர்ந்தேன்.

சனல் 9 என்னும் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய கிறிக்கற் சனல் வழமைபோல் போட்டியை ஒளிபரப்பத்தொடங்கியது. இந்தச் சனல் 9 இன் கிறிக்கற் விமர்சகர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல.. ரோனி கிறேக்(tony craig), றிச்சி பெனோ,(Richi beno)இயன் சப்பல் (ian chappel), மார்க் ரெய்லர்,(Mark taylor) பில் லோறி,(bill lawry)இயன் ஹீலி (ian healy) ,மார்க் நிக்கிலஸ்,(Mark Nicholas) மைக்கல் ஸ்லேற்றர் (Mikaell Slater) என முன்னாள் கிறிக்கற் வீரர்கள். பெரும்பாலானவர்கள் அவுஸ்திரேலியாவினதும், இங்கிலாந்தினதும் முன்னாள் கப்ரன்கள் (Captains).இவ‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ஒவ்வொரு வீர‌ரைப்பற்றிய‌ க‌ணிப்பும் அச்சொட்டாக‌, நெத்திய‌டியாக‌ இருக்கும். இலேசில் யாரையும் புக‌ழ்ந்தோ, புழுக‌வோ மாட்டார்க‌ள்.. அத‌ற்கான‌ அவசிய‌மும் ,எந்த‌ அழுத்த‌மும் இல்லாத‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள்.

போட்டி ஆர‌ம்பித்த‌து என‌க்கோ ஏமாற்றம், கார‌ண‌ம் அந்த‌ போட்டியில் ர‌மேஷ் விள‌யாட‌வில்லை. அவ‌ருக்கு ப‌திலாக‌ ஆகாஷ் சோப்ராவும், ஷேவாக்கும் க‌ள‌மிற‌ங்கினர். மிக‌வும் மெதுவாக‌ ஆர‌ம்பித்த‌ ஆட்ட‌ம் மெதுமெதுவாக‌ ஆஸ்திரேலிய‌ரின் ப‌க்க‌ம் சாய‌த்தொட‌ங்கிய‌து. இந்திய‌ வீர‌ர்க‌ள் அடுத்த‌டுத்து ஆட்ட‌மிழ‌க்க‌த்தொட‌ங்கின‌ர். ட்றாவிட் ,பின் ச‌ச்சின் (0) என‌ ஆட்ட‌மிழ‌ந்து இந்திய‌ அணி சொத‌ப்பிக்கொண்டிருந்த‌போது ஆறாவ‌தாக‌ ஒருவ‌ர் க‌ள‌மிற‌ங்கினார்.அதுவ‌ரை சாத‌ர‌ண‌மாக‌ போய்க்கொண்டிருந்த‌ ரி.வி. வ‌ர்ண‌னை திடீரென்று சூடுபிடிக்க‌த்தொட‌ங்கிய‌து. ஒருவ‌ர் மாறி ஒருவ‌ராக‌ புதிதாக‌க் க‌ள‌மிற‌ங்கிய‌வ‌ரை ப‌ற்றியும் அவ‌ரின் ம‌ணிக்க‌ட்டை சு‌ழ‌ற்றி ஆடும் வ‌ல்ல‌மையையும், கிளன்ம‌க்றா( Glen Mcrath) என்ற, உலக துடுப்பாட்ட வீரரையெல்லாம் க‌திக‌ல‌ங்க‌ச் செய்து கொண்டிருந்த அவுஸ்திரேலிய‌ வேக‌ப்ப‌ந்துவீச்சாள‌ரை எந்த‌வித‌ ப‌ய‌முமின்றி நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் லாவ‌க‌த்தைப் ப‌ற்றியும், ஷேன் வார்ன் (Shane warne) என்ற‌ சுழ‌ல்ப‌ந்தின் உச்ச‌ வீர‌னை பிச்சுக்கு உள்ளே வ‌ந்து அடித்தாட‌ப் போகும் ஸ்ரைல‌யும் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டே இருந்தார்க‌ள்.. என‌க்கோ ஒன்றுமே புரிய‌வில்லை, ஒரு வெளி நாட்டு வீர‌னை, அதுவும் த‌ம‌து நாட்டு அணியை எதிர்த்து மோத‌ப் போகின்ற‌வ‌ரைப் ப‌ற்றி இந்த‌ப் பெரிய‌ கிறிக்க‌ற் ஜாம்ப‌வான்க‌ளும், கிறிக்க‌ற்றை க‌ரைத்துக் குடித்த‌ ப‌த்தி எழுத்தாள‌ர்க‌ளும் புக‌ழ்கிறார்க‌ளென்றால் !! இவ‌ர் சாமானிய‌ கிறிக்க‌ற்ற‌ர் அல்ல‌.. இவ‌ர் சாத‌னையாள‌ராக‌த்தான் இருக்க‌ வேண்டுமென்ற‌ முடிவுட‌ன் அவ‌ரின் ஆட்ட‌த்தை பார்க்க தொடங்கினேன்.ஏற்கனவே மற்றய பக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த இந்தியாவின் மிகச் சிறந்த கப்ரன் கங்குலியுடன் சேர்ந்து,தோல்வியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்த அணியை அந்தத் தோல்வியிலிருந்து தடுப்பதற்கான தடுப்பாட்டத்தை (defensive) (போராட்டத்தை)நிதானமாக ஆரம்பித்து, அந்தப் ஆடுகளத்தைப் பற்றியும் பந்துவீச்சாளர்களின் அன்றைய தரத்தைப் பற்றியும்,காலநிலைக்கேற்ப பந்தின் அசைவைப் பற்றியும் அறிந்ததும் தடுப்பாட்டத்திலிருந்து அதிரடி ஆட்டத்துக்கு (Attacking) மாறி, கங்குலியுடன் சேர்ந்து மிகப் பெரும் தோல்வியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றினார் அந்த வீரன். அவர் தான் வி.வி.எஸ்.லக்ஷ்மன்.

இதில் கங்குலி சிறப்பாக விளயாடி 144 ஓட்டங்கள் எடுத்திருந்த போதும் லக்க்ஷ்மனின் 75 ஓட்ட‌ உறுதுணை இல்லாதிருந்தால் தாக்குப் பிடித்திருக்க முடியாது. அவரின் அன்றைய ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த நான் ஏனோ தானோ என்றில்லாமல்அந்த ஆட்டத்தின் நெழிவு சுழிவுகளயும், தந்திரோபாயங்களயும் (Tactics) உணரத்தலைப் பட்டேன். லக்ஷ்மன் தனது அணி மிக இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில், எதிரணியினரை,முக்கியமாக ஆஸ்திரேலியரை கதிகலங்க வைக்க‌ எடுக்கும் உத்திகளை (Tactics) பார்த்து
மெய்சிலிர்த்துப்போனேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல,அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக அவரது ஆட்டம் அமைந்திருந்ததை பார்த்த போதுதான் நான் இதுவரை காலமும் நினைத்திருந்த கிறிக்கற் வேறு என்பதும் இந்த அழகான விளயாட்டை உடலால் மட்டுமல்ல மனதாலும் (physically & mentally) விளயாட வேண்டுமென்ற உண்மயையும் உணரத்தொடங்கினேன், கிறிக்கற் சம்பந்தமாக வெளிவந்த புத்தகங்களயும், முக்கியமாக முன்னாள் வீரர்களின் சுயசரிதைகளயும் (autobiographs), அவர்களினதும் அவர்களது கப்ரன்களினதும் தந்திரங்களயும் உள்வாங்கத் தொடங்கி, கிறிக்கற்றின் அதிசயமான வெற்றிகளயும்,அதற்குக் காரணமானவர்களின் உத்திகளயும் படிக்கத் தொடங்கிய போது லக்ஷ்மன் என்ற உண்மைக் கிறிக்கற் வீரனை புரிந்து கொண்டதால் அவரை மதிக்கத் தொடங்கினேன்.

லக்க்ஷ்மன் ஆஸ்திரேலியக் கிறிக்கற் ரசிகர்களிடம் பேரபிமானம் பெற்றவர், கிறிக்கற் அறிவுஜீவிக‌ளினால் மிக‌ச்சிற‌ந்த‌ வீர‌ர் என‌ கௌர‌விக்க‌ப்படுபவர். இவர் எப்ப‌டி ம‌ற்ற‌ய‌ கிறிக்கற் வீரர்களில் இருந்து வித்தியாச‌ப்ப‌டுகிறார்.???

Wednesday, 16 January 2013

அது ஒரு அழகிய நிலாக்காலம்..













திரையுலகு, விளையாட்டு இலக்கிய உலகு அரசியல் என பல்வேறு துறைகளில் மின்னிப்பிரகாசிக்கும் சிலர் அல்லது நிறுவனங்கள் திடீரென்று எரி நட்சத்திரம் போல் காணாமல் போய்விடுவது வழமை , அப்படி என்னைக் கவர்ந்து காணாமல் போனவர்களைப் பற்றியும், காணாமல் போனவைகளைப் பற்றியும் என்பாட்டுக்கு எழுதினால் என்னைப் போன்ற , அவர்களால் கவரப் பட்ட மற்றவர்களுக்கும் அது சில சந்தோஷமான நினைவுகளை மீட்டலாம் என்பதால் என்பாட்டுக்கு மனதில் வருவதை எழுதப் போகிறேன்.

யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சியில் T.V படக்காட்சி..

இன்று நம் ஒவ்வொருவர் வீட்டிலும் Theatre Room, என்றும் Home theatre என்றும் அதி நவீன வசதிகளுடன் கூடிய சினிமாத் தியேட்டருக்கு ஒப்பான சினிமா சாதனங்களையும், தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வைத்திருக்கிறோம் ஆனால் இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தாயகத்தில் எமக்கு அறிமுகமான நாட்கள் இனிமையானவை. பல அனுபவங்களை ஏற்படுத்தியவை அவற்றைப் பற்றிய நினைவலைகள் கண்டிப்பாக எம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் அவற்றை இதனை வருடங்கள்.. அனுபவங்கள் வளர்ச்சிகளுக்குப் பின் இப்போ நினைக்கும் போது…

1977 வரை சோஷலிசக் கொள்கையுடன் இருந்த சிறிமாவின் இலங்கை சுதந்திரக்கட்சியை (S.L.F.P) 1977இல் தேர்தலில் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவக் கொள்கையுடைய ஜே.ஆரின் ஐக்கிய தேசியக் கட்சி மேற்குலகுடன் கைகோர்க்கத் தொடங்கியது. அதன் முதற்படியாக செய்த முக்கியமான இரண்டு செயற்பாடு சுதந்திர வர்த்தக வலய உருவாக்கம் மற்றும் தொலைக்காட்சியை பன்முகப் படுத்தி தொலைக்காட்சி ஓளிபரப்பை ஆரம்பித்தது

79 களின் கடைசியில் தான் இலங்கையில் தொலைக்காட்சி சாதாரண மக்களிடமும் பரவத்தொடங்கியது. இந்தக்கால கட்டத்தில் இலங்கையில் ரூபவாஹினி என்ற ஒரேயொரு அரச ஒளிபரப்பு தொடங்கப்பட்டாலும் அது மும்மொழிகளுக்கும் பொதுவானதாக இருந்ததால் தமிழ் நிகழ்ச்சிகள் வெகு அரிது. இடைக்கிடை தமிழ் படங்கள் மட்டும் ஒளிபரப்புவார்கள். எனவே தமிழ் பேசும் மக்கள் தமிழ் நிகழ்ச்சியைப் பார்க்க இந்தியாத்தொலைக்காட்சி நிலயங்களை இலங்கைத் தொலைக்காட்சியில் தேடத்தொடங்கினார்கள்.

இவை இரு நாடுகள் என்ற போதும் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களில் இருந்து தமிழகம் வெறும் 40 மைல் (அண்ணழவாக) தூரம் தான். இது தமிழகத்தின் ஒரு தொங்கலில் இருந்து மறு தொங்கலுக்குப் போவதிலும் பார்க்க மிகக் கிட்டிய தூரம். எனவே தமிழகத் தொலைக்காட்சிகளை இலங்கையின் வடபகுதியில் இலகுவாகப் பார்க்கலாம் என்பது சாத்தியம் தானே..

அக்காலகட்டத்தில் இந்தியத் தூர தர்ஷனில் ஒலியும் ஒளியும் போடுவார்கள். அப்போவெல்லாம் தமிழகத்தில் இலங்கை வானொலி அதன் தரமான நிகழ்ச்சிக்கும் திரயிசைப் பாடல்களுக்கும் எவ்வளவு பிரசித்தமோ.. அதேபோல யாழ்ப்பாணத்தில் தூரதர்ஷனின் ஒலியும் ஒளியும் பிரசித்தம். காரணம் தமிழகத்திலும் இப்போ மாதிரி தடுக்கிவிழுந்தால் ஆயிரம் தனியார் சனல்கள் அப்போ இருக்கவிலை. தூரதர்ஷன் ஒன்றுதான், அதுவும் அடிக்கடி தடங்கலுக்கு வருந்துகிறோம் என்றும், அடுத்த நிகழ்ச்சி சில நொடிகளில் தொடரும்.. என்றும் அறிவிப்பை போட்டபடியே அரை மணிநேரம் அடுத்த நிகழ்ச்சிக்காக ஓட்டியபடி, முக்கி முனகித்தான் தனது ஓளிபரப்பை தொடரும்

அதன் ஒளித்தரம் யாழில் மிகக் குறைவாகவே காணப்பட்டது. அதன் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு காலநிலை கைகொடுக்க வேண்டும். பெரும்பாலான நாட்களில் நிகழ்ச்சியின் தெளிவுக்காக வீட்டு உரிமையாளர் ரோச் லைற்றும் கையுமாக வெளியே சென்று, அன்ரனாவை அங்குலம் அங்குலமாகத் திருப்பிக் கொண்டு சரியா.. சரியா என்று கேட்டுக் கொண்டிருப்பார் உள்ளேயிருப்பவர் இன்னும் கொஞ்சம் திருப்புங்கோ.. மற்றப்பக்கமாக திருப்புங்கோ என்று சொல்லியபடி இருப்பார். இப்பிடி அன்ரனாவை திருப்பித் திருப்பியே கையொடிஞ்ச கனவான்கள் பலபேர்.அனேகமான நாட்களில் இரச்சலுடன் தொலைக்காட்சித்திரையில் புள்ளிகள் வந்து போய்க்கொண்டிருக்கும்.இறுதி வரை ஒரு சிறு ஒலியோ ஒளியோ வராது




ஒரு முறை எனது அப்பு,(எனது தாயின் தகப்பனார்,, அழிந்து கொண்டு போகும் தமிழ் சொல்லில் இதுவும் ஒன்று இப்போ நாகரீகம் கருதியோ என்னமோ எல்லோரும் தாத்தா அல்லது அம்மப்பா என்கிறார்கள் ) தானும் ரீ. வீ. பார்க்கப்போகிறேன் என்று கூறிவிட்டு ஆர்வத்துடன் எம்முடன் வந்தார் . வயதான அவரால் நிகழ்ச்சிக்கான போராட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.. வீடு வந்த அவரிடம், எனது தாயார், தொலைக்காட்சி அனுபவம் எப்படி என்று கேட்டதற்கு அவர் சொன்னது, அதென்ன… அந்தத் திரையிலை ஒரே தேனிலையான் (தேனீ) தான் பறந்து திரியிது.. உதையே உவங்கள் மினக் கெட்டுப் போய் பார்க்கிறான்கள்???

அக்காலகட்டத்தில் நிகழ்ச்சியைக் கடைசிவரை பார்க்க முடியாமல் போன நாட்கள் தான் அதிகம். சில வேளைகளில் ஒன்றிரண்டு பாடல்களை அரையும் குறையுமாக தெளிவில்லாமல் பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்த்துவிட்டால் .அப்பாடா.. அந்தக் காலத்தில் அது பெரும் பொக்கிஷமாகவே எமக்கிருந்தது.

தொலைக்காட்சி அறிமுகமாக்கப்பட்ட அந்த நாட்களில் சாதாரணமானவர்களால் அதை வாங்குவது இயலாத காரியம். எனவே ஒவ்வொரு ஊரிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருப்பார்கள். தூரதர்ஷன் ஒலியும் ஒளியும் போடும் நாட்களில் அயலவர்கள் கூடி தொலைக்காட்சிப் பெட்டியுள்ள வீட்டுக்கு சென்று எல்லோரும் சிரித்தும் பாட்டுக்களை அவரவருக்கு ஏற்றார்போல விவாதித்தபடியும் அந்நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பார்கள். சில வேளைகளில் வீட்டு உரிமையாளரால் எல்லோருக்கும் பெருமையுடன் தேனீர் பரிமாறப்படுவதும் உண்டு. அது அவரின் மனநிலையைப் பொறுத்தது.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த மட்டுப்படுத்தப் பட்ட எமது தொலைக்காட்சி அனுபவம், யாழ் நகரில் அக்காலத்தில் மிகப் பிரபலமாக விளங்கிய நியூ விக்ரேர்ஸ் ( NEW VICTORS) victor and sons போன்ற Tape Recorder மற்றும் Audio cassette விற்பனை செய்த நிறுவனங்கள் மூலம் முடிவுக்கு வந்தது.

இவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் அவற்றுடன் சேர்த்து தமிழ் திரைப்படக் கசெற்றுக்களையும் வாடகைக்கு விடத்தொடங்கினார்கள். அதனால் பாடசாலைகளின் விழாக்களிலோ, கோயில் பெருநாட்களிலோ, திருவிழாக்களிலோ இவர்களை அழைத்த பொது அமைப்புக்கள் T.V. படக் காட்சி என்ற அறிவிப்புடன் படங்கள் போடத்தொடங்கினார்கள். பொது அமைப்புக்கள் இப்படியான படக்காட்சிகளை ஒழுங்கு செய்ததால் 3.00 ரூபாக்கள் தொடக்கம் 5.00 ரூபாக்கள் வரை படங்களின் எதிர்பார்ப்பு, நடிகர்கள், தரத்துக்கு ஏற்ப கட்டணம் அறவிட்டு தொலைக்காட்சியின் வாடகை போக மீதியை கோயில் அல்லது பாடசாலை நிதியுடன் சேர்த்து பொதுப்பணிக்கு செலவிட்டார்கள்.

நான் முதலில் 5.00 ரூபா கொடுத்துப் பார்த்த படம் ஒரு பிரபலமான நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட கமலின், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.


அந்தக் காலத்தில் நியூ விக்ரேர்ஸ் போன்ற நிறுவனங்களிடம் வாடகைக்கு எடுப்பதற்கு அந்த நிறுவனங்களால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ டெக் மற்றும் சினிமாப் பட கசற்றுக்களை நியூ விக்ரேசின் ஊழியர் ஒருவர் காரில் கொண்டு வந்து இயக்கி படங்களை ஒளிபரப்பி விட்டு தம்முடனேயே எடுத்துச் செல்வார். அவரைத்தவிர வேறு ஒருவரும் ரீ.வி.யையோ டெக்கையோ அனுமதியின்றி தொட முடியாது.

இவற்ரைக் கொண்டு வந்து இயக்குபவரின் பந்தா இருக்கிறதே.. ஷப்பா.. அதைச் சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அமெரிக்க நாசாவில் வேலை பார்க்கும் விஞ்ஞானிகள் கூட பந்தா காட்டுவதில்லை ஆனால் இவரின் பந்தாவை தாங்க முடிவதில்லை.. அவர், தான் போடும் படத்தின் ஹீரோவைப் போலவே தன்னை நினைப்பார் போலிருக்கிறது. அவருக்கு கோழிக்கறியுடன் நளபாக உணவு வேறு பரிமாறப் படும். படத்தைப் போட்டுவிட்டு உணவை உண்பார் அதன்பின் ரஜினிகாந்த் நடப்பதுபோல விரு.. விரு வென்று நடந்து போய் தனது நிறுவனத்துக்கு சொந்தமான Volks Wagen காரில் ஏறிப் படுத்துவிடுவார்.

படம் முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எழுந்து வந்து அருகே நிற்பார் ஆனால் யாருடனும் சினேகபூர்வமான புன்னகையோ, உரையாடலோ இருக்காது. முதலாவது படம் முடிந்ததும் அடுத்த படத்தை போட்டுவிட்டுப் போய் மீண்டும் தூங்கத்தொடங்குவார், 





அனேகமான ரீ.வி. படக்காட்சிகள் இரண்டு அல்லது மூன்று படங்களை கொண்டதாக இருக்கும், படங்கள் தொடங்கு முன் துண்டுப்படம் என்று அழைக்கப் படும் வேறு ஒரு படத்தின் உபரியாக சில காட்சிகளை அவர் போடுவார் போட்டுவிட்டு முக்கியமான கட்டத்தில் அதை நிறுத்திவிடுவார். அந்தக் காட்சியின் உந்துதலால் கவரப் பட்ட ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நேரம் விடலாமே என்று ஆரவாரிப்பார்கள்.. ஆனால் அதையெல்லாம் அவர் சட்டை செய்யவேமாட்டார் காரணம் அவருக்குத் தெரியும், தான் உதிரியாகப் போட்ட படம் ஏற்படுத்தியிருக்கும் ஆர்வத்தால் மீண்டும் அந்தப் படத்துக்காக தம்மிடம் வருவார்கள் என்பது.

இது அந்த நிறுவனத்தின் கெட்டித்தனமான வியாபார உத்தி என்பது நான் பெரியவன் ஆனபிற்பாடுதான் புரிந்தது.

அப்படி உபரிப்படமொன்று மிகுந்த எதிர்பார்ப்பை எம்மத்தியில் ஏற்படுத்தியது என்றால் கமலும் ரஜினியும் நடித்த ஆடுபுலி ஆட்டம். இன்றளவும் அந்த பிரமிப்பு என் கண்முன்னே நிற்கிறது.

நான் முதன் முதலில் ரீ.வி. படக்காட்சியில் பார்த்த தமிழ்ப் படம் சிவாஜி நடித்த “ஜெனரல் சக்கரவர்த்தி”. அந்தப் படம் நான் 5ம் ஆண்டு படித்த போது எமது பாடசாலையில் போடப்பட்டது. எமது பிரின்சிபாலின் மேற்பார்வையில், நாம் எல்லோரும் வரிசையாகச் சென்று சத்தமில்லாமல் ஒழுங்காக அமர்ந்திருந்து கண்கள் விரிய அந்தப் படத்தை பார்த்தது இப்போ போல உள்ளது.

படம் முடிந்ததும் வீட்டுக்கு ஓடோடிப்போய் தியேட்டரை தூக்கிக்கொண்டு வந்து படம் போட்டவை என்று நான் பிரமிப்புடன் சொன்னதும் அதைக் கேட்டுவிட்டு எனது தாய் தந்தையர் விழுந்து விழுந்து சிரிச்சதையும் நான் வெட்கப்பட்டதையும் மறக்க முடியவில்லை.

இரண்டொரு கிழமைக்கு முன்பு ஜெயா ரீ.வி.யில் (அல்லது விஜை ரீ.வி.யில் ) “ஜெனரல் சக்கரவர்த்தி” படம் ஒளிபரப்பினார்கள். எனது முதல் ரீ.வி.படம் என்பதை எனது மனைவி மகளுக்கு கூறிவிட்டு சிறிய மகளுடன் அதை எனது தியேட்டர் ரூமில் பார்த்தேன். சத்தியமாக எமது பள்ளிக்கூடத்தில், நிலத்தில் அமர்ந்திருந்து பார்த்துப் பிரமித்த திருப்தியை என்னால் இந்த நவீன தொழிநுட்பத்திலோ, பிரமாண்டத்திலோ, சொகுசு இருக்கையிலோ பெற முடியவில்லை. அந்தப் படத்தை முழுமையாகக் கூட என்னால் பார்க்க முடியவில்லை..

இரண்டாவதாகப் பார்த்த படம் “அண்ணன் ஒரு கோவில்”. அதில் “நான்கு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு”… பாடலின் காட்சியின் படி,, தேடப்படும் குற்றவாளியான சிவாஜி, பொலிசின் சுற்றிவளைப்புக்கள் அகப் பட்டிருக்கின்ற போதும் காமத்திலும் காதலிலும் சிக்குண்டு பாடுவதாக அமைந்த அந்தப்பாட்டைப் பார்த்து அந்தச் சிறிய வயதில் நாணிக்கோணியதை இப்போ நினைக்க சிரிப்புத்தான் வருகிறது. எங்களின் எதிர்கால சந்ததி அப்படியான அப்பாவித்தனத்துடன் இருக்கப் போவதில்லை என்பது துரதிர்ஷ்டமே.

அமைதியாக இருந்த நாட்டில் இனங்களுக்கிடையில் துவேஷம் வளர்க்கப்பட்டு இனப்பிரச்சினை கூர்மையடையத்தொடங்கிய 80 களின் ஆரம்பத்தில் ஒரு நாள். சுற்றிவளைப்பு இளைஞர்களின் கைது என்ற காலம் ஆரம்பித்த நேரம்.

ஆங்காங்கே குண்டுவெடிப்புக்கள் அரங்கேறத்தொடங்கிய காலமது. இரவு 6 மணிக்குப் பிறகு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தாமாகவே தவிர்க்கத் தொடங்கியிருந்தார்கள். மக்கள் மனங்களில் பயம் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு தாயும் தந்தையும் தமது இளம் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கத் தொடங்கியிருந்தார்கள்.

அந்த வேளையிலும் ஏற்கனவே அறிவித்திருந்த ஒரு ரீ.வி. படக்காட்சியை, மோசமான நாட்டு நிலைமையில் போடுவது, பாதுகாப்பானதா இல்லையா என்ற பலத்த இழுபறிக்குப் பின் போடுவதாகத் தீர்மானம் ஆயிற்று.

முதல் நாள் யாழ் தெல்லிப்பழையில் ஒரு மிகப் பெரும் குண்டுவெடிப்பு இடம் பெற்று எல்லோரையும் கிலிகொள்ள வைத்திருந்த காரணத்தால். என்ன நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம் எல்லோர் மனதிலும்.

எனக்குப் படத்துக்கு போக பயமாக இருந்த போதிலும் எனக்குப் பிடித்த மோகனின் படமான உதய கீதம் என்பதால் எப்படியாவது பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தேன்.

இந்தப் படத்தை மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரித்து இசைஞானியின் முத்தான பாடல்களை S.P.B. பாடியிருந்ததும் அதற்கு மோகன் அற்புதமாக நடித்திருந்ததாகக் கேள்விப்பட்டதும் எனது விடாப்பிடிக்கான முக்கிய காரணம்.

ஒருவாறு அம்மாவை கெஞ்சிக் கூத்தாடிச் சமாளித்துவிட்டு நண்பர்களுடன் படம் பார்க்க சென்றுவிட்டேன். படம் போடப்பட்ட இடம் எமது தேவாலய பின்புறம். அதிலிருந்து பிரதான வீதி 300 மீற்றர் தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மெயின் ரோட்டில் இருந்து பார்த்தால் தெரியாத மாதிரி தேவாலயத்துக்கு பின்புற வளவில் தான் படம் போய்க்கொண்டிருந்தது.

மோகனின் படங்களில் S.P.Bயின் பாட்டுக்களுக்கும் அதற்கு அவரின் நடிப்புக்கும் நான் தீவிர ரசிகன். படத்தில் ஒன்றிப்போனதால் நாட்டு நிலைமையை மறந்து சந்தோஷமாக நணபர்கள் எல்லோரும் படத்தை ரசித்துக்கொண்டிருந்தோம்
. திடீரென்று மெயின் ரோட்டில் இருந்து சைக்கிலில் வேகமாக ஓடி வந்த ஊர் முதியவர் ஒருவர் கத்தினார். டேய் படத்தை நிப்பாட்டுங்கோடா… தூரத்திலை ராணுவ வாகனத் தொடர் ஒன்று வருமாப் போல இருக்குது. தொடர் வெளிச்சங்கள் இரைச்சலுடன் வந்து கொண்டிருக்கு!!

அவர் திகிலுடன் உடம்பு நடுங்கப் பதறிக்கொண்டிருந்தார்.அங்கிருந்த ஒருவருக்கும் ஈயாடவில்லை... உடனேயே ரீ,வி,யும் அங்கிருந்த சிறு வெளிச்சமும் நிற்பாட்டப்பட்டன. எல்லோரும் கும்மிருட்டில் இருந்தோம்.. ஒருவரின் மூச்சுக்காற்று மற்றவர்களுக்கு கேட்கும் நிசப்தம்.

அந்த வாகனத்தொடரணியின் இரைச்சல் நெருங்குவதும் நிலத்தின் அதிர்வை கொண்டு அது ராங்கியுடன் கூடிய வாகன அணியென்பதையும் எல்லோரும் புரிந்து கொண்டதும் அங்கிருந்த அனைவரையும் மரணபயம் ஆட்கொண்டது. நெருங்கி வந்த வாகனத் தொடரணி எமது சந்தியில் கிரீச்சிட்டு நிற்பதும் துல்லியமாகக் கேட்டது…

இது என்ன சோதனை.. கடவுளே இவ்வளவுதானா??? என கடவுளை எண்ணத்தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த வாகனத்தொடர் புறப்பட்டுப் போவது கேட்கத்தொடங்கி எல்லோர் முகத்திலும் புன்சிரிப்பை உருவாக்கியது. ஆளுக்காள் பயந்திருந்த விதத்தை நையாண்டி பண்ணி நண்பர்களெல்லோரும் சிரிக்கத் தொடங்கினோம். ஒரு அசம்பாவிதமும் நடக்காததால் எல்லோருக்கும் மகிழ்ச்சி இருந்தாலும் அடி மனதில் அந்தப் பயம் இல்லாமல் இல்லை. 





படம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தது.
படம் தொடர்ந்து கொண்டிருந்தது இசைஞானி, S.P.B. மோகன் இவர்களுடன் கவுண்டமணியின் அசத்தலான கொமடி வேறு படம் ஜனரஞ்சகமாகப் போய்க் கொண்டிருந்தது மீண்டும் எல்லாவற்றையும் மறந்து படத்தில் மூழ்கிப்போனோம்…

டமால் திடீரென்று காதைப்பிளக்கும் குண்டுவெடிப்பு மாதிரியானதொரு பாரிய சத்தம். கைகால் எல்லாம் அதிர்வதைப் போன்றதொரு பிரமை.. எல்லோரும் வாரிச்சுருட்டிக்கொண்டு கால் போன திசையில் ஓடினோம் ஓட்டமென்றால் ஒரு ஓட்டம் அப்படியொரு ஓட்டம்..இருட்டில் எங்கு போவதென்று தெரியாது ஓடியதில் ஒருவரோடுருவர் அடிபட்டு விழுந்தவர்கள் ஒருபுறமும், இருட்டில் பள்ளங்களுக்குள் விழுந்தெழும்பி கால் பிரண்டவர்கள் ஒருபுறமாகவும் தலைதெறித்த ஓட்டம் அந்த ஓட்டத்தை ஒலிம்பிக்கில் ஓடியிருந்தால் பதக்கம் நிச்சயம் கிடைத்திருக்கும்…

பலமணி நேரத்தின் பின் ஒருவாறு வீடு போய்ச்சேர்ந்தேன். அதன் பிறகு சொல்ல வேண்டுமா.. வேண்டாம் ..வேண்டாம்.. எனக் கூறியும் கேட்காமல் படத்துக்குப் போனதனால் தான் இப்படியான அசம்பாவிதம் நடந்ததாக சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அம்மா இரவிரவாக பெரிய lecture அடிக்கத் தொடங்கி விட்டா.. எனக்கோ மறுத்துப் பேச முடியாத நிலை. மனமெல்லாம் நண்பர்களைச் சுற்றியே வந்தது,

அவர்கள் பாதுகாப்பாக வீடு சென்றிருப்பார்களா என்ற அங்கலாய்ப்பு.. இப்போ போல கைப்பேசியில்லாத காலமது. அதுமட்டுமல்லாமல் நடந்த அசம்பாவிதம் காரணமாக எப்படியான பின்விளைவுகள் ஏற்படப்போகின்றதோ ???என்று அம்மா வேறு புலம்பத்தொடங்கிவிட்டா.. எனக்கும் அந்த அச்சம் ஏற்பட்டு நாவறளத்தொடங்கியது.

சிலமணிநேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற பயப்பீதியுடன் விடியத் தொடங்கிய அடுத்த நாள் காலையில் வீட்டு வாசலில் ஆளரவம்.. தொடர்ந்து சைக்கில் பெல் சத்தம்..

அது இரவு என்னுடன் ரி.வி. படக்காட்சிக்கு வந்த ஒரு நண்பனுடையது என்பதை அதன் மக்கர் பண்ணும் சத்தத்தை வைத்துப் புரிந்து கொண்ட நான் வீட்டின் வெளியே ஓடிச்சென்றேன்

வெளியே மற்றும் இரு நண்பர்களுடன் எதையோ பேசி பெரிதாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் மேலும் குதூகலமாகி என்ன மச்சான் உனக்கு கால் கையெல்லாம் முறியேல்லையே ?? என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் நண்பன்.

நான் அதைத் தவிர்த்து விட்டு இரவு என்னதான் நடந்தது, எங்கு குண்டு வெடித்தது அதன் பின்னான அசம்பாவிதங்கள் பாரிய அழவிலா ??? எவருக்காவது ஏதாவது தெரியுமா?? என்று பதை பதைப்புடன் கேட்டேன்.. அதைக் கேட்டதும் மீண்டும் பெரிதாகச் சிரித்துவிட்டு அவன் சொல்லத் தொடங்கினான்.










நாம் படம் பார்த்த இடத்துக்கு அருகில் ஒரு பழைய கட்டடம் இருந்தது. அதன் கூரை தகரங்களால் வேயப் பட்டிருந்தது. இரவில் ஓங்கி அடித்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாத பப்பாசி மரம் ஒன்று முறிந்து தகரத்தின் மேல் விழுந்த போது ஏற்பட்டதுதான் அந்தச் சத்தம்.

இது தெரியாமல் நாட்டின் சூழ்நிலை காரணமாகவும் கடந்துபோன வாகன அணியின் நினைவு அடிமனதில் இருந்ததாலும் நாம் பயந்து ஓடியுள்ளோம்..

கேட்டதும் எனக்கு சிரிப்பு ஒருபக்கம், நிம்மதி ஒரு பக்கம் என பல உணர்ச்சிகள் வந்து மறைந்தன.

அது சரி ரீ.வி. கொண்டுவந்தவர் பாடு என்ன ??? அவர் வேறு இடத்தைச் சேர்ந்தவரென்ற படியால் இங்கத்தைய இடங்கள் ஒன்றும் தெரிந்திருக்காதே எப்படி ஓடியிருப்பார் ?? சிரித்தபடி நான் கேட்டேன் அவர் ஓடி விழுந்து காயங்களுடன் அதிகாலையில் தான் சென்றதாக நண்பன் பரிதாபத்துடன் கூறினான்.

அந்த ராணுவத் தொடரணி எங்களின் பிரதான சந்தியில் நிறுத்தப் பட்டதற்கான காரணம்?? இது நான் அவர்கள் ரோந்து செல்லும் வழியில் சந்தியில் நிறுத்தி அங்கிருந்த கடைக்காரரிடம் சிகரட் வாங்கிச் சென்றுள்ளதாக நண்பன் கூறினான்.

அப்பாடா பெரிய நிம்மதி..
அதன் பிறகு நாட்டின் சூழ்நிலை வேகமாக அதல பாதாளத்துக்கு செல்லத்தொடங்கியது, அன்றாட சாதாரண வாழ்க்கை கேள்விக்குறியாகத் தொடங்கியது நண்பர்களை நாட்டின் சூழ்நிலை வெவ்வெறு தேசங்களுக்கு போக வைத்தது..

அவ்வளவுதான்… அந்தச் சம்பவமும் படமும் தான் எங்கள் ஊரில் நடந்த கடைசி T.V. படக்காட்சியும், நான் பார்த்த கடைசி T.V. படக்காட்சியுமாகும்.

அதற்குப் பிறகு நானறிய எமது சுற்று வட்டாரத்தில் அந்த அருமையான பொழுது போக்கு நின்று போயிற்று

 

ஏன் S.p.B. மற்றய பாடகர்களில் இருந்து வேறுபடுகிறார்.






தமிழ்ப் பின்னணிப் பாடகர்களில் பல ஜீனியஸ்கள் இருந்தார்கள் , இருக்கிறார்கள், இருப்பார்கள். ஆனால் எவராலும் எஸ்.பி.பீ.யிற்குப் பிறகு அவரின் இடத்தை நிரப்ப முடியுமா??? என்னைப் பொறுத்தவரை அது இலகுவான விடயமல்ல, என்றே தோன்றுகிறது. காரணம் எஸ்.பி.பிக்குப் பிறகு வந்த இளம் பின்னணிப்பாடகர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள், அவர்களின் பாடல்களை ரசிக்கக் கூடியதாக இருக்கிறது, ..ஆனால் தமிழ் சினிமாவைப் பார்த்துக்கொண்டு அந்தப் பாடல்கலைக் கேட்கும்போதுதான் வித்தியாசம் தெரிந்து நெருடுகிறது. அந்தப் பாடல்களில் அதை வாயசைத்து நடிக்கும் நடிகர்கள் தெரிகிறார்கள் இல்லை. அந்தப் பாடகர்களே தனித்துவமாகத் தெரிகிறார்கள்.

எஸ்.பி.பி மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப் படுவதற்கான காரணம் அவர் ஒரு காட்சிக்காகப் பாடல்களைப் பாடும்போது அந்தக் காட்சியை நன்கு விளங்கிக் கொண்டு அந்தப் பாட்டுக்கு நடிக்கப்போகும் நடிகரின் தனித்தன்மையை உணர்ந்து, அவரின் குரலின் frequency க்கு ஏற்றாற் போல தனது குரலை மாற்றுகிறார். ஒரு காலத்தில் வெள்ளிவிழாப் படங்களாகக் கொடுத்து தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த மோகன் இதற்கு நல்ல உதாரணம்.

அந்த நேரத்தில் மோகனுக்குக் டப்பிங் குரல் கொடுத்தவர் சுரேந்தர். அந்த சுரேந்தரின் குரலாலும் அதற்கேற்றாற்போல எஸ்.பி.பி.யின் பாட்டாலும் அவர் பெரு வெற்றியடைந்தார் என்றால் அது மிகையல்ல.

இவரின் இந்தத்திறமையைப் பற்றி ஒருவருமே , இசைஞானி உட்பட பெரிதாக கிலாகித்து ஒரு போதும் கதைப்பதில்லையே என்ற ஆதங்கமும் வருத்தமும் எனக்குண்டு.

எப்போதாவது, எங்கேயாவது, எஸ்.பி.பியைப் பற்றிய நிகழ்ச்சியோ, பேட்டியோ, நடக்கும்போதும், அல்லது அவரின் இசை நிகழ்ச்சியை நேரில் பார்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் எல்லோரும் அவரை சிறந்த பாடகர் என்றும், பல்லாயிரம் பாடல்கள் பாடிவிட்டார் என்றும், நான்கு தசாப்தமாக பாடுகிறார் என்றும், கமல் ரஜினிக்கு அதிக பாட்டுப் பாடியவர் என்றும் புகழ்ந்துவிட்டு, அவரின் மயக்கும் குரல் இன்றுவரை காந்தர்வக்குரலாக இருப்பதாக புகழாரம் சூட்டுகின்றனர்.


உண்மையில் இவற்றைப் பார்க்கும் போது அவரின் குரல் இனிமையால் மட்டும் தான் அவர் இவ்வளவு தூரம் வெற்றியடைந்துள்ளார் என்பதே அனேகரின் எண்ணமாக இருப்பதாக நான் எண்ணுகிறேன். ஆனால் ஒவ்வொரு நடிகரின் frequency யில் பாடும் தனித்தன்மை அவரை மற்ற எல்லா பாடகர்களிலும் இருந்து வித்தியாசப் படுத்துகிறது என்பதே மிக முக்கியமானது. அவர் இன்றுவரை இளம் நடிகர்கள் பிரசன்னா, தனுஷுக்கும் பாடி வெற்றியடையக்கூடியதாக இருப்பதற்குக் காரணம் இந்தத் திறமைதான் . ஆனால் எல்லா இடத்திலும் அழவுக்கு மீறிய பவ்வியத்துடன், அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்கும் எஸ்.பி.பி. யும், தனது வெற்றியின் இரகசியம் இதுதான் என்பதை சொல்லியதில்லை.


அவரின் இந்தத் தனித்தன்மையை முதன் முதல் நான் உணர்ந்தது 1989 இல் வந்த ரஜினியின் மாப்பிள்ளை படத்தில் அவர் ரஜினிக்காகப் பாடிய "வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி" .. என்ற பாட்டாகும். இந்தப் பாட்டை வித்தியாசமாக தினாவெட்டுடன் பாடுவதைப் போல ரஜினிக்கு ஏற்றாற் போல பாடும் அவர் பல்லவியின் இறுதியில் ஹாஹ்..ஹா...ஹாஹா..ஹாஹா என்று ஒரு சிரிப்புச் சிரிப்பார் கேட்டுப் பாருங்கள் ... அதன் பின் சரணத்தின் இறுதியில் ஹ்ம்ம்.. என்று ஒரு ஹம் பண்ணுவார் ..அப்படியே அச்சொட்டாக ரஜினிதான் ஞாபகத்துக்கு வருவார். இந்தப் பாட்டைக் கீழே பகிர்ந்துள்ளேன் கேட்டுப்பாருங்கள் நண்பர்களே

http://www.youtube.com/watch?v=kVMmDtK5drY


அடுத்தது ரஜினிக்கு முற்றிலும் வேறுபாடான இமேஜை, அந்த நாட்களில் கொண்டிருந்த பிரபுவுக்கு ராஜகுமாரனில் பாடிய என்னவென்று சொல்வதம்மா..வஞ்சியவள் பேரழகை... என்ற பாட்டு. இதில் மீனாவிடம் தான் காதலிக்கும் நதியாவைப் பற்றிக் கூனிக்குறுகி வெட்கப்பட்டு என்னென்று சொல்ல..எப்படிச் சொல்ல.. என்கிறார் பிரபு. இதை அவர் தனது சொந்தக்குரலிலேயே நாணிக் கோணிச் சொல்கிறார். இந்த வசனம் முடிந்தும் முடியாததுமாக இசைஞானியின் அற்புதமான இசை தொடங்கிக் கிறங்கடித்து முடிந்ததும் எஸ்.பி.பி என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சியவள் பேரழகை என்று தொடங்குகிறார். ... பிரபுவின் குரலில் இடம் பெற்று முடிந்த அதே frequency யில் எஸ்.பி.பி.யின் பாடல் தொடங்கும் . இந்தப் பாட்டைக் கீழே பகிர்ந்துள்ளேன் கேட்டுப்பாருங்கள் நண்பர்களே.. ரஜினு பிரபு என்ற இரு வெவ்வேறு திறமை கொண்ட நடிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமாகப் பாடியிருப்பதை நீங்கள் உணர்ந்து பூரித்துப் போவீர்கள்.

http://www.youtube.com/watch?v=QoPcvYqmFUc

இது ஒரு கொடை. இது ஒரு Amazing talent. S.P. பாலசுப்ரமணியம் என்கிற ஒருவருக்கே தமிழ் திரையுலகில் இது கிடைக்கப் பெற்றுள்ளது. கிரிக்கெட்டுக்கு ஒருசச்சின்.. இசைக்கு ஒரு இசைஞானி, நடிகர்களின் உருவத்துக்குள் புகுந்து பாடுவதற்கு எஸ்.பி.பி. இவர்களின் இடத்தைப் பிடிக்க இனி ஒருவரும் பிறக்க முடியாது.

ராஜாவின் ராக ராஜாங்கம், நெஞ்சில் நிறைந்தவை 1





80களில் ராஜா, ராஜாங்கம் நடாத்திய காலத்தில் வந்ததும், மணிரத்னத்தின் முதல் தமிழ்ப் படமுமான பகல் நிலவு என்ற படத்துக்காக இசைஞானி படைத்த பொக்கிஷங்களில் ஒன்றுமான பூமாலையே..தோள் சேரவா.. என்ற அற்புத மெலடியைப் பற்றி நண்பர் கானா பிரபா இட்ட பதிவுக்கு கருத்திட விழைந்தேன் ..ஏனோ தெரியவில்லை கருத்திட முடியவில்லை. எனவே எழுதியதை வீணாக்குவானேன் என எண்ணி அதனை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

80களில் எங்கும் ராஜா.. எதிலும் ராஜா என்றிருந்த காலத்தில் பதின்ம வயதில் இருந்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள். ராஜா கைவைத்த எல்லாமே பொக்கிஷங்கள். அதில் தாய்க்கொரு தாலாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற இசைஞானியும் சித்திராவும் பாடிய‌ காதலா.. காதலா ..கண்களால் என்னைத்தீண்டு என்ற பாட்டிருக்கிறதே அப்பப்பா .. அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பாட்டின் தொடக்கம் ஒரு தொகையறா போன்றது. அது சித்திராவினுடையது. அவர் காதலா.. காதலா ..என்று உச்சரிக்கும் இரண்டு தடவையும் வித்தியாசமான பரிமாணத்தை தனது குரலில் கொண்டு வந்திருப்பார். முதல் முறை காதலா எனும் போது சாதாரணமாகவும் இரண்டாம் முறை அதே காதலா .. எனும் போது ஏக்கத்தையும் தனது குரலில் கனியவிட்டு நம்மையெல்லாம் பித்துப்பிடிக்க வைக்கும் சித்திராவுக்கு பதிலாக இசைஞானி காதலி.. காதலி கண்களால் எனைத்தீண்டு என்று விட்டேந்தியாக பாடி சித்திராவின் கூப்பிடலுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். அடுத்த வரியான காதல்.. ஒரு வேதம்.. கண்கள்.. அதை ..ஓதும் என்று ஏங்கும் சித்திரா, அதை மென்மையாகவும் அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாகவும் பாடும் போது அந்தக் குரலில் காதலுடன் சேர்ந்ததொரு காமத்தை இழையோட விட்டிருப்பார். .. அதைத்தொடர்ந்து இசைஞானி, ஒரு கோயில் மணியோசையை மட்டும் இசையாகக் கொடுத்து பின் புல்லாங்குழலுடனும் தபேலாவுடனும் தனது இசை ராஜாங்கத்தை தொடர்ந்து அவற்றின் முடிவில் பல வயலின்களை ஒன்று சேர்ந்து ஆலாபனை செய்து முதல் சரணத்துக்கு பிள்ளையார் சுழி போடவைப்பார். கேட்கும் போது அவ்வளவு சுகமாக இருக்கும். .



முதலாவது சரணத்தை இசைஞானி ,` நீ...ரோடையின் ஓ..சையில் உந்தன் பேரைக் கே..ட்கிறேன்.. பூ..ஞ்சோலையின் பூ..க்களில் உன்னை நா..னும் பார்க்கிறேன் என்று பாட அதற்குச், சித்திரா போட்டியாக தே..வனே உன்..னிலே என்னை தே..டிப் பா..ர்க்கிறேன், நீ.. விடும் மூ..ச்சிலே, நா..னும் கொஞ்சம் வா..ழ்கிறேன் என்பார் இது ராஜாவுக்கு நெத்தியடியாக இருக்கும். விடுவாரா ராஜா அவரும் அடுத்த வரியான என் தே..வியே உன் பே..ச்சிலே ஏ..தோ இசை கேட்கிறேன் என்று முடிப்பார். இதில் என் தேவியே என்பதை அழுத்தி சுகமாகப் பாடும் இசைஞானி முடிவில் ஏதோ இசை கேட்கிறேன் எனும் போது பின்னணி இசை எல்லாவற்றையும் நிறுத்தி கொஞ்சலும் ஏக்கமுமாகப் பாடுவார்.. ஆஹா..ஆஹா.. என்னவொரு பாவம் ராஜாவுடன் சேர்ந்து.. சித்திரா பின்னிப் பெடலெடுத்திருப்பார்.
(பாடலைக் கேட் இங்கே சொடுக்கவும்)
http://www.youtube.com/watch?v=twpQjSruwh0

இதே போலவே இரண்டாவது இடையிசையின் தொடக்கமும் புல்லாங்குழ்லின் எக்கோவுடன் தொடங்கி வயலின்களின் குழுமம் தொடர்ந்து சென்று அமைதியான காற்றின் ஓசையை மட்டுமே இறுதி இசையாக்கி நிறுத்துவார் இசைஞானி. அதைத் தொடர்ந்து முதல் சரனத்தில் ராஜா தொடங்கியதற்குப் பதிலாக இரண்டாவது சரணத்தை சித்திரா கண்ணா.. என்ற ஏக்கக் கூவலுடன் ஆரம்பிப்பார் . இப்படியே நெஞ்சை அள்ளிச் செல்லும் இந்தப் பாட்டிற்கு இசைஞானி பெரும்பாலான இடங்களில் பாவித்திருப்பதெல்லாம் தபேலா,வய‌லின் புல்லாங்குழல்,கிற்றார், பேஸ்கிற்றார் மற்றும் டோலக் மட்டுமே. எந்தக் கொம்பியூட்டரும் கிடையாது, இங்கிலாந்தின் இசைக்குழுவும் கிடையாது, சிம்பொனி இசை வல்லுனர்கள் கிடையாது, மும்பாய் ஒலிப்பதிவுக்கூடம் கிடையாது.. ஐந்து நட்சத்திர ஹொட்டேலில் தங்கி கொம்போசிங் செய்யவு மில்லை. இதுதான் ஞானம். இயற்கையின் கொடை. 













இந்தப் பாட்டை எங்கே எப்போ கேட்டாலும் 80கலின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கிற்கும் விக்னா ரியூசன் சென்ரருக்கும் அருகில் இருந்த வீனஸ் ரெக்கோடிங் பார் தான் நினைவு வரும் .

80களின் நடுப்பகுதியில், போருக்கு முந்திய யாழ்ப்பாணத்தில் நண்பர்கள் நாங்கள் விக்னாவுக்கு வார விடுமுறை ரியூசனுக்கு போகின்றபோது வகுப்பு தொடங்குவதற்கு ஓரு மணி அல்லது அதற்குக்கும் முன்பாக யாழ் நகர் சென்று, வெலிங்டன் திரையரங்கிற்கு நேரே முன்னால் இருந்த ரவர் ரீ அன் கூல் பாரில் ஒரு பிளேன்ரியும் வடை அல்லது றோளும் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து வெவ்வேறு இடங்களில் இருந்து பஸ்ஸில் வரும் நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக நடந்து சென்று , வீனசுக்கு முன் ரயில்வே கடவைக்கு அருகில் இருந்த குட்டிச் சுவர் ஒன்றிலும் ஏனையோர் கைவிடப்பட்ட பழம் விற்கும் வண்டில் ஒன்றிலும் ஏறி இருந்துகொள்ளுவோம்.

. அங்கிருந்தபடியே வீனஸில் ஒலிக்க விடப்படும் புதிய பாடல்களை நண்பர்களாகச் சேர்ந்து கேட்டு ரசிப்பதில் அப்படி ஒரு குஷி எங்களுக்கு. படிக்கவென்று செல்லும் நாங்கள் இந்தப் பாடல்கலைக் கேட்ட பாதிப்பில், ஏதோவொரு இனம் புரியாத சுகத்துடனும், அமைதியுடனும், கனவுகளுடனும் தான் வகுப்புக்குள் செல்வோம். உள்ளே சென்றால் வாத்தி படிப்பித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பாடல்களைப் பற்றிய பிரமையே மனதுள் ரீங்காரமிடும். பிற‌கென்ன .. வாத்தி தன்ரை பாட்டுக்கு லெக்சர் அடிச்சுக்கொண்டிருக்க அது எமக்கெல்லாம் செவிடன் காதிலை ஊதிய சங்குதான். ம்ம் நினைவழியா நாட்கள் அவை.

அந்த நேரத்தில் கேட்டு, இன்றும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. இன்று இந்தப் பாட்டைக் கேட்கும் போது , இன்றுகூட வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை வந்து அடைப்பதையும் அந்தக் கால யாழ்ப்பாணம் கண்ணுக்குள் மின்னி மறைவதையும் தடுக்க முடியவில்லை. இந்த எனது அனுபவம் யாழ்ப்பாணத்தின் 80ன் நடுப்பகுதி ரீன் ஏஜ்ஜுக்கள்... சத்தியாக் கட் வெட்டிக் கொண்டு திரிந்தவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு







Add caption

பெரியாரின் கனவு நிறைவேறுமா / வெற்றி பெறுமா?


 



 
வெறி - 
 
முகநூல் நண்பரொருவர், தான் சார்ந்த
மதத்தின் பெருமையை கிலாகித்து இன்னொருவர் சொன்ன வாக்கியத்தை share பண்ணியதைப் பார்த்த போது, ஏனோ பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் பல இனங்களுடனும்,, பல மதங்களைத் தழுவுபவர்களுடனும், பல கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களுடனும் சேர்ந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இப்படியான பிற்போக்குத்தனமான மனநிலையுடன் உள்ளோரால எப்படி சமாளிக்க முடியும்?? இப்படியான வெறியை ஊட்டும் கருத்துக்களை Time line இல் அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருப்பது எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. இவர்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள்.. ??

சமீபத்தில் பெரியாரின் 131வது பிறந்த நாள் ஆண்டுமலரில், அவரைப் பற்றி இப்படிக் கூறப்படுகிறது:

"உண்மை - நேர்மை - நியாயம் - நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திற்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார். தமிழர்களின் மொழியை சீராக்குவதிலும், எளிமைப்படுதுவதிலும் காட்டிய அக்கறையில் அவர் தமிழை தெயிவமாக்கவில்லை. வளர்ச்சியடையாத, மாற்றமும் முன்னேற்றமும் அடையாத எதுவும் காட்டுமிரண்டிதனமானவையே என்பதுதான் அவரது தத்துவ அணுகுமுறை.


தமிழர்கள் என்பதாலேயே கரிகார்ச்சோழனும்,நரசிமபல்லவனும்,ராஜராஜ சோழனும் போற்றுவதர்க்குரியவர்களாக பெரியார் ஏற்றுகக் கொண்டதில்லை.

தமிழ் என்பதாலேயே தேவாரமும்,திருவாசகமும்,கந்தபுராணமும் அவருக்கு பெருமிதமாக படவில்லை, அவர்களாலும் அவைகளாலும் மனுதர்மம் தழைத்ததா,சமதர்மம் தழைத்ததா என்பதுதான் அவரது அளவுகோல். சமத்துவத்தை மறுக்காத சமநீதி சொன்ன திருக்குறளை ஏற்றுக்கொண்டதும் தமிழன் மீதான பற்றினால் அல்ல சமதர்மத்திர்க்காகதான்.

ஒப்பற்ற மனிதப் பற்றாளரான பெரியார் எப்போதும் பாதிக்கப்படவர்களுக்காக சிந்தித்தார்,செயல்பட்டார் போராடினார். போலித்தனம் ஏதுமின்றிப் போராடினார்.

ஆதிக்க ஆரியத்திற்கு எதிராக
பாதிக்கப்பட்ட திராவிடர்களுக்கான விடுதலை.

தன்னல பார்ப்பனியத்திற்கு எதிராக
பார்பனரல்லதொரின் விடுதலை.

தேவமொழி சமஸ்கிருதத்திற்கு எதிராக
மக்கள் மொழி தமிழுக்கான விடுதலை.

மடமை மதவாதத்தின் கொடுமைகளிலிருந்து
பகுத்தறிவின் மூலம் பாமரர்களுக்கு விடுதலை.

ஆணாதிக்க மரபுகளிலிருந்து
பெண் விடுதலை.

மூடநம்பிக்கயிளிருந்து பகுத்தறிவுக்கு விடுதலை.

வன்மைங்களிருந்தும் வெறிதனன்களிருந்தும் விடுதலை
(வன்முறையின் - பயங்கரவாதத்தின் விதையே வெறித்தனம் அல்லவா?)
 
இவ்வாறு தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கும் நெடிய போராட்டங்களுக்கும் உணர்வாக,உயிரோட்டமாக இருப்பது அவரது விடுதலை தத்துவமே.

அது வெறும் அரசியல் விடுதலை தத்துவம் அல்ல. சமுக விடுதலை தத்துவமல்ல

அது மனவிடுதலை முதல் சமுக பொருளாதார அரசியல் விடுதலை என அனைத்தையும் தழுவிய முழுவிடுதலை தத்துவம்" இப்படிப் போகிறது அந்தக் கட்டுரை.

மனிதனுக்கு, தான் சார்ந்த மொழியிலும்,மதத்திலும் பற்று இருக்க வேண்டும் ஆனால் அது வெறியாக இருக்கக் கூடாது.. அது ஆபத்தானது. வெறி-
அது மதத்தில் இருந்தாலும், மொழியில் இருந்தாலும், இனத்தில் இருந்தாலும், அல்லது சாதியென்று இருந்தாலும் அது காட்டுமிராண்டித்தனமே.


கல்வியிலும், நாகரீகத்திலும் மிக..மிக வளர்ந்து எங்கோ போய்விட்ட இந்த உலகில் கிணத்துத்தவளைகளாக, உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர விரும்பாதவர்கள் இன்னும் தமது சுயலாப , பொருளாதார வளர்ச்சிக்காக தம்மிடம் உள்ள பேச்சுத்திறமையால் இப்படியான வெறிகளை அப்பாவி மக்களிடத்திலும், முக்கியமாக கல்வியறிவில் பின் தங்கியுள்ளவர்களித்திலும் வளர்த்துக் குளிர்காய்கிறார்கள்.

முகநூல் நண்பர்கள் சிலர் மத வெறியர்களினதும் மொழிவெறியர்களினதும், இனவெறியர்களினதும் கருத்துக்கள் என்று சிலவற்றை Share பண்ணும் போது அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் பண்ணுகிறார்களா???

உலகின் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் மதமும், மொழியும் தான். மனிதர்களுக்கிடையில் அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பதற்குத் தோன்றியதுதான் மதங்கள்.அது எந்த மதமாக இருந்தாலும் நற்பண்பை போதித்தால் அது நல்ல மதமே.

அவனுக்குள்ளே தொடர்பாடலை ஏற்படுத்த உருவானதுதான் மொழி. அது இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. அது இங்கிலாந்தில் ஆங்கிலமாகவும் ஜேர்மனியில் ஜேர்மனாகவும் இருக்கிறது.. அவ்வளவே. ஒருவரின் உள்ளக்கிடக்கையை மற்றவர் புரிவதற்கு உதவும் எந்த மொழியும் சமமானதே. மக்களும் சமமானவர்களே. இதில் உயர்வு தாழ்வு எப்படி ஏற்பட்டது??

நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மதங்கள், மொழிகளில் வெறிகொண்டு மனிதர்கள் தம்மைத்தாமே அழிக்கிறார்கள்.முக்கியமாக கல்வியறிவில் பின்தங்கியுள்ள மூன்றாம் உலக நாடுகளில் இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. காரணம், ஒவ்வொருவரும் தமது மதம், மொழிதான் சிறந்தது என்றும் மற்றயோர்களது தாழ்ந்தது என்றும் எண்ணும் எண்ணம் தான். இதனால்தான் கம்யூனிசத்தின் தந்தை லெனின் மதபோதகர்களை இல்லாமல் செய்தார்.

மக்களிடத்தில் மூட நம்பிக்கையை வளர்த்து, அவர்களை சோம்பேறிகளாக்கி, அதன் மூலம் உழைப்பில் நம்பிக்கையை இழக்க வைப்பவர்களான மத போதகர்களின் அழிவு, மக்களை, கடவுள் பார்த்துக் கொள்ளுவார் தானே என்ற மூட நம்பிக்கையில் இருந்து அவர்களை விடுவித்து, தன்னம்பிக்கையுடன் உழைக்கவைத்தது. இது வங்குரோத்தாகப் போயிருந்த ரஷ்யா என்றொரு நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் மிக வேகமாக வளர்வதற்கு வழிவகுக்க பெரிதும் உதவிய்தென்றால் அது மிகையல்ல..


ஒருவன் ஆத்திகனாகவோ, நாத்திகனாவோ இருக்கலாம் அது அனின் தனிப்பட்ட விருப்பு. சுதந்திரம். ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்கும் , அவரவர்களின் மதமும் மொழியும் முக்கியமானது. இதை நாம் மதிக்க வேண்டும். உலகம் எங்கேயோ போய்விட்டது. எனவே வளர்ச்சியடைந்த உலகத்தில் ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்று சிந்த்தித்து வாழ முற்பட்டால் எல்லா நாட்டிலும் , எல்லா இன,மொழி பேசும் மக்களுடனும் அன்புடனும், சகோதரத்துவத்துடனும், சமாதானத்துடனும் நிம்மதியாக வாழலாம்.

அதை விடுத்து எனது மதந்தான் சிறந்தது என்றும், எனது மொழிதான் சிறந்தது என்றும் மதத்தையும், மொழியையும் முன்னிறுத்தினால் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்தும், பயந்தும், நிமதியின்றியும் வாழவேண்டியதுதான். இது தேவையா??? மத, மொழிக் கடும் போக்காளர்களை ஆதரிப்பவர்கள் சிந்திக்கவேண்டும்.

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.






ஆரம்ப பாடசாலைக்கு சென்றிருந்த மகளை அழைத்துவரப் போயிருந்தேன்.பாடசாலையால் வெளியில் வரும்போது முகத்தில் மகிழ்ச்சியும் கையில் சிறு பரிசுப் பொருட்களுமாக வந்தாள். காரில் ஏறியதும் இன்று தனது வகுப்பில் தான் கேட்ட கேள்வியை ஆசிரியை பாராட்டி சக மாணவர்களை கைதட்ட சொன்னதாகவும், பின்பு பிரின்சிபாலிடம் அனுப்பப்பட்டு அவரும் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப் படுத்தியதுடன் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாகவும் காட்டினாள். முகத்தில் பெருமிதம் குடிகொண்டிருந்தது. இருக்காதா பின்னே..அடுத்து அவள் கேட்ட கேள்வி, அப்பா, உங்கடை ரீச்சர் உங்களுக்கு எப்பவாவது பரிசு தந்திருக்கிறாவா?
நினைவுகள் பின்னோக்கிப் பாய்கின்றன,நான் ஓ.எல் படித்துக்கொண்டிருந்த காலமது. படித்ததோ கத்தோலிக்க பாடசாலை. கத்தோலிக்க குருமார்தான் Rector (அதிபர்) ஆகவும் Wise Rector (உப அதிபர்) ஆகவும் எப்போதுமே பணிபுரிவார்கள். அங்கு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளும் கல்வி கற்பித்துக்கொண்டிருந்தார்கள். அது எனது பதின்ம வயதாகையால் கண்டதையும் கற்க பண்டிதனாவாய் என்பதற்கமைய ஆனந்த விகடன் குமுதம் தாண்டி சுடர், மல்லிகையுடன் பெரியார், மற்றும் கே.டானியல் போன்றவர்களை படிக்கத்தொடங்கி உலகத்தை உண்மையாக பார்க்கத்தொடங்கி இருந்தேன். இவர்களில் முதன்மையானவர் கே.டானியல்.
கே.டானியல் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு தாழ்த்தப் பட்ட மக்களுக்காக உழைத்த ஒருவர். வாழ்வில் தான் பெற்ற அனுபவங்களை உண்மையுடன் எழுதி மக்களை சிந்திக்க வைக்க முயன்று பல வாதப் பிரதிவாதங்களின் மையமாக்கப்பட்டவர். மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் அவர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற கொள்கையுடன் இறுதிவரை வாழ்ந்தவர். பஞ்சமர் என்ற சொற்பதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்றே பஞ்சமர் என்ற மிகப்பிரபல்யமான நாவலை, தனது அனுபவங்களின் ஊடாக எழுதி பெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர். 70 களில் தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் சென்று கும்பிடுவது எழுதாத சட்டமாக தடைசெய்யப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அந்தத் தடை மனித சந்ததிக்கு விரோதமானது என்றும் ,எல்லா மக்களும் சரிசமமாக கோயில் வழிபாட்டில் பங்கெடுக்கும் உரிமையுள்ளவர்கள் என்பதை வலியுறுத்தியும் ஆலயப் பிரவேசப் போராட்டங்களை முன்னின்று நடாத்தி சிறை சென்றவர். ( சிறையில் அவருடன் ஒரே செல்லில் ஒன்றாக சிறைவைக்கப் பட்டிருந்தவர் 70 களின் தென்னிலங்கை கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட ஜே.வி.பி.தலைவர் ரோகண விஜேவீர .) அதேபோல் தாழ்த்தப்பட்டோருக்கு தேனிர்கடைகளிலும், அவர்களின் வேலைத்தலங்களிலும் தேனீர் போன்ற குடிவகைகளை சிரட்டைகளிலும், பேணிகளிலும், போத்தல்களிலும் கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை இல்லாதொழிக்க வெகுண்டெழும்பி அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு, அதில் கணிசமான வெற்றியும் பெற்ற ஒரு போராளி. ( அவரின் கராஜுக்கு எவர் போனாலும் அவர் எந்த இனமானாலும்,எந்த சாதிமானாக இருந்தாலும் ஒரே மாதிரித்தான் கவனிப்பு இருக்கும். எல்லோரும் இருப்பது ஒரே வாங்கு மற்றயது, போத்தலில் பிளேன்ரீ ) தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் .தனது எழுத்துக்கள் மூலம் தீண்டாமை எனும் கொடுமைக்குள்ளாகி பாமர மக்கள் பட்ட பாடுகளையும், படும் வேதனைகளையும், அவர்கள் என்னென்ன வகைகளில் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியவர். இதன் மூலம் அடக்குபவர்களின் அறியாமையையும், அடக்கப்படுபவர்களின் உணராமையையும் வெளிக்கொணர்ந்து அடக்குபவர்களை வெட்கப்படவும், அடக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவும் வழி வகுத்தவர்., பஞ்சமரின் பஞ்சமாபாதக நிலையை அவர்களுக்கு உணரச் செய்து, அதற்கெதிராக போராடுவதற்கும் தனது பேனாவை ஆயுதமாகப் பாவித்த ஒரு சமத்துவ வாதி. மதங்கள் மனிதரிடையே மூடப் பழக்க வழக்கங்களை எப்படி உருவாக்குகின்றன என்பதையும் அதன் மூலம் வர்க்க பேதங்களும் இனக்குரோதங்களும் வளர்வதற்கு எந்தவகையில் துணைபோகின்றன என்பதையும் தனது பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தியவர்.
அந்த நேரத்தில் நான்படித்த டானியலின் ஒரு நாவல் ( போராளிகள் காத்திருக்கின்றனராக இருக்கலாம்) கிறிஸ்தவ கடலோரக் கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. அந்த நாவலில் வரும் ஒரு சம்பவத்தில் ஊரின் கிறிஸ்தவ குருவானவர் கடவுளின் பிரதிநிதியாக நோக்கப்படுபவர், ஊரில் நடக்கும் நிகழ்வு ஒன்றில் கடவுளின் மேன்மையையும், பெருமைகளையும் பிரசங்கிக்கிறார். இவையெல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் அப்பாவியாக குருவானவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறார்

கேள்வி இதுதான்.
வயோதிபர் – சுவாமி ! மோட்சத்திலை (சொர்க்கம்) கெட்ட எண்ணம் சிந்தனைகளே இல்லையே ???
குரு – மோட்சம் கடவுளின் இடம் , அங்கு கெட்ட எண்ணத்துக்கோ சிந்தனைக்கோ இடம் இல்லை.
வயோதிபர் – அப்பிடியெண்டா சம்மனசுகள் (தேவதூதர்கள்) பிசாசாக மாறினதுக்கான காரணம் என்ன..
இப்படியானதொரு கேள்வியை பாமர வயோதிபரிடம் இருந்து எதிர்பார்க்காத குருவானவர் பதில் சொல்லமுடியாமல் திண்டாடுகிறார் ஏனென்றால் பைபிளின் பழைய ஏற்பாட்டில், மோட்சத்தில் எந்தவித கெட்ட எண்ணங்களோ அதற்கான சந்தர்ப்பங்களோ இல்லையென்று ஒரு இடத்திலும், தேவதூதர்களாக இருந்தவர்கள் தலைமைத்துவப் போட்டியால் பொறாமைக்கு உள்ளாகி கடவுளால் சாத்தானாக சபிக்கப் பட்டதாக இன்னோர் இடத்திலும் கூறப்படுகிறது. எனவே இந்த முரண்பாட்டைத்தான் அந்த வயோதிபரின் பாத்திரத்தில் டானியல் கேட்பதாக அந்தக் கதை செல்கிறது. இந்தக் கதையை படித்த மாத்திரத்தில் எனக்குள் ஒரு குடைச்சல்.. ஏதோ புரிந்தமாதிரியும் இருக்கிறது குழப்பிய மாதிரியும் இருக்கிறது எனவே இந்தச் சந்தேகத்தை எப்படியாவது தீர்ப்பது என முடிவெடுத்தேன்.

எமது கல்லூரியில் G.C.E O/L வகுப்பில் கிறீஸ்தவம் ஒரு பாடமாக இருந்தது. அதை படிப்பிப்பவர் ஒரு கன்னியாஸ்திரி. எனவே அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது என்று முடிவெடுத்தேன். அதற்கு இரு காரணங்கள்.
1) இப்படியான கேள்வி கேட்பதால் என்னை புத்திசாலியென அவர் பாராட்டுவார், எனும் அதிகப் பிரசங்கித்தனம்.
2) உண்மையிலேயே இந்தக் கேள்வி என்னை புடம் போடத்தொடங்கியது. அதுவரை ஒரு ஞாயிறு பூசையை கூட தவற விடாமலும், கோயில் பாடகர்குழாமில் அங்கத்தவனாகவும்,கோயில் சம்பந்தப் பட்ட வேலைகளில் முன்னுக்கு நிற்பவனும் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவனுமாக இருந்த எனக்கு பைபிளின் நம்பகத்தன்மையில் சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ( பதின்ம வயது இளைஞர்களுக்கு இப்படியான சந்தேகங்கள் வருவது இயற்கைதானே )

வழமைபோல அன்றும் எமது கன்னியாஸ்திரி ஆசிரியை வகுப்புக்குள் நுழைந்து பாடத்தை ஆரம்பித்தார். எனக்கோ ஆர்வக் கோளாறு. மனம் பதை பதைத்தது.எப்படியாவது இந்தக் கேள்வியைக் கேட்டுவிடவேண்டுமே.. பொறு மனமே..பொறு.. என துடிப்புடன் காத்திருந்த அந்தச் சந்தர்ப்பமும் வந்தது….
சிஸ்டர்.. இது நான்,
கரும்பலகையில் எதையோ எழுதிக்கொண்டிருந்த சிஸ்டர் திரும்பிப்பார்க்காமலேயே என்ன தம்பி என்றார்..
ஒரு கேள்வி.. இது நான் ..
என்ன கேள்வி.. எரிச்சலுடன் சிஸ்டர்..
மோட்சம் புனிதமானதா?? இந்த உலகத்தைப் போல கெட்ட சிந்தனைகள் ,எண்ணங்கள், போட்டிகள் இல்லையா?? இது நான்..
இதைத்தானே இத்தனை வருஷமாப் படிப்பிக்கிறம்.. நீங்களும் படிக்கிறியள்.. இப்ப வந்து கப்பல் பாக்க விட்ட சேவகன் மாதிரி பாலர் வகுப்புக் கேள்வியெல்லோ நீர் கேட்கிறீர்..நீர் O/L exam வேற எடுக்கப் போறீர்..பாஸ் பண்ணின மாதிரித்தான். இது எரிச்சலும் நையாண்டியுமாக எமது ஆசிரியை (சிஸ்டர்) இதைக் கேட்டு முழு வகுப்புமே விழுந்து விழுந்து சிரித்தது.
எல்லோரது சிரிப்பும் அடங்கியவுடன் நான் மீண்டும் கேட்டேன், அப்போ சம்மனசுகள் எனப்படும் இறைதூதர்கள் எப்படி சாத்தான் ஆனார்கள்????

வகுப்பில் ஈயாடவில்லை.. மாணவர்கள் என்னையே பார்த்தார்கள்.. தன்னை நிதானப் படுத்திய சிஸ்டரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. என்ன கேட்டனி.. எப்படி இப்படியொரு கேள்வியை நீ கேட்கலாம்?? இது நீயாகக் கேட்கவில்லை உன்னிடம் உள்ள சாத்தான் தான் கேட்கிறது வா முன்னுக்கு எனக் கூப்பிட்டு தன்னிடம் இருந்த பிரம்பு முறிந்து முடியுமட்டும் அடியோ அடி எனக்கு அப்படியொரு அடி. அதன் பின்னும் ஆத்திரம் தீரவில்லை அவருக்கு. கல்லூரியின் பியூனைக் கூப்பிட்டு அவருடன் எமது Rector (அதிபர்) இன் office இற்கு அனுப்பிவிட்டு நடந்தவற்றை குருவான அவரிடம் விலாவாரியாக அழுவாரைப் போலே சொன்னார். அதைக் கேட்டதும் கதிரையில் இருந்து துள்ளி எழும்பிய Rectorம் என்னை ஆத்திரத்துடன் பார்த்துவிட்டு ( சாத்தான் வந்தால் அப்படித்தான் பார்ப்பார்கள் ) முழங்காலில் இருக்குமாறு பணித்துவிட்டு அவரிடம் பிரத்தியேகமாக இருக்கும் பிரம்பினால் புடித்தாரே ஒரு புடி.. அப்பாடா அதை இன்று நினைத்தாலும் தூக்கம் வராது. அடி பின்னிப் பெடலெடுத்துவிட்டார்…அதன் பிறகு பாடசாலையில் கேள்வியாவது.. கேட்பதாவது.
ஆனால் என்ன ஆச்சரியம், அந்த ஆண்டில் எமது கல்லூரியில் G.C.E. O/L பரீட்சையில் கிறிஸ்தவ சமயத்துக்கு தோற்றியோரில் மிகச் சிலருக்குத்தான் அதிகூடிய புள்ளியான Distinction (D) கிடைத்தது, அதில் நானும் ஒருவன். அதுவரை ஞாயிறுப் பூசையை தவற விடாது, பயபக்தியோடு கோயிலுக்கு போன ஒரு பக்தன் ( நான் ) ஒரு நாள் தன்னும் அங்கு வாசிக்கும் வாசகங்களையோ சடங்குகளையோ சட்டை செய்ததில்லை. ஆனால் இந்த கேள்வி கேட்ட அனுபவத்துக்குப் பிற்பாடு, ஒவ்வொரு பூசையிலும் வாசிக்கும் வாசகங்களின் நப்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் கிரகிக்கத் தொடங்கினேன்.. கேட்கக் கேட்க ,, கிரகிக்க கிரகிக்க அவற்றின் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை குறைந்து டானியலும், பெரியாரும் அதிகளவில் ஈர்க்கத்தொடங்கினார்கள்.

தற்போதய நாட்டு நடப்பைப் பார்க்கும் போது நான் அடிக்கடி சிந்திக்கும் விடயம் ஒன்று உண்டு. அதாவது எமது அரசியல் / நாட்டுத் தலைவர்கள் ஆசிரியர்களிடம் படித்தார்களோ இல்லையோ ஆனால் ஒன்றை மட்டும் அவர்களிடமிருந்து பய பக்தியுடன் பின்பற்றுகிறார்கள் அது.. எவனாவது எதிராகக் கேள்வி கேட்டாலோ, புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டாலோ தலைவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆசிரியார்களாவது அடியுடன் விட்டார்கள் ஆனால் தலைவர்கள் !!!!

வளர்ந்து பெரியவனாகிவிட்டேன், இனி ஒருவரும் அடிக்க மாட்டார்கள் என்ற துணிவில் சமீபத்தில், சிறுவயது முதலே பரிச்சயமானவரும், தற்போது கிறிஸ்தவ குருவாக இருப்பவருமாகிய ஒருவரை நீண்ட நாளக்குப் பின் சந்தித்தபோது மிகவும் நட்புடன் அவர் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார். எனவே அந்தத் துணிவில் அதே கேள்வியை மெதுவாகக் கேட்டேன்.. என்னை ஒரு மாதிரியாக பார்த்த அவர்.. நீர் என்ன குதர்க்கக் கேள்வி கேட்கிறீர் ?? இப்படியெல்லாமா பகிடி விடுவார்கள்?? என்றுவிட்டு அந்த Topic ஐயே மாத்தி வேறு கதை கதைக்கத்தொடங்கிவிட்டார்.

பாடசாலையில் கேள்விகேட்டதால் எனக்குக் கிடைத்த இந்தப் பரிசை எனது சின்ன மகளுக்கு சொல்லி அந்தப் பிஞ்சு உள்ளத்தை வேதனைப் படுத்த முடியுமா?? எனவே இருக்கவே இருக்கிறது நம்ம தல கவுண்டமணி சிரிப்பு அந்தச் சிரிப்புடன், அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே, அவளை சமாளித்துவிட்டேன். வேறு வழி??

நந்தினி சேவியர் என்கிற ,எங்கள் தங்க (ர்) மாமா!!





"You will never reach your destination,
if you stop and throw stones at every dog
that barks"
- Winston Churchhill -

முகப்புத்தகத்தின் மூலம் பல தொலைந்த
நண்பர்களை மட்டுமல்ல தொலைந்த சொந்தங்களயும் தேடிப்பிபிடிக்கலாம் என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு அண்ணன் ரஞ்ச குமாருக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

சமீபத்தில் ரஞ்சகுமார் அண்ணனின் பதிவொன்றை மேய்ந்து கொண்டிருந்த போது மனதில் ஒரு பளிச். அவரின் நண்பர்களின் புகைப்படங்களில் ஒன்று, எனக்கு பரிச்சயமானதாகவும் ஆனால் கொஞ்சம் முதிர்ச்சியுடனும் தெரிந்தது. உடனே அவரின் time line ற்குள் நுழைந்து பார்த்தபோது ஆஹா .. இன்ப அதிர்ச்சி அது நந்தினி சேவியர் என்னும் எங்களின் தங்கர் மாமாவேதான். இவர் எனது சிறு வயது ஹீரோக்களில் ஒருவர். உடனே மனம் பின்னோக்கிப் பாய்கிறது..

எனது சிறு பராயக்காலம் இலங்கையின் யுத்தத்துக்கு முந்தியது. இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த காலமது. பெல்பொட்டம், அகலமான பெல்ற், ஹிப்பி தலைமயிர், நெஞ்சின் மேலுள்ள ஒரு பொத்தானை திறந்து தம்காட்டுவது, இரண்டு பக்கமும் கீழிறங்கிய மீசை, வாயில் பிறிஸ்ரல் அல்லது 3 ரோசஸ் சிகறற், இடையிடை பொப்பிசையை விசிலடிப்பது பின்னிரவில் செக்கண்ட் ஷோ படம் பார்த்துவிட்டு நாய்கள் துரத்த சைக்கிலில் ஜாலியாக யாழ் வீதியெல்லாம் வலம் வந்த எனது மற்றய மாமாக்கள், சித்தப்பாக்கள், மச்சான்மார் மத்தியில் தங்கர் மாமா மட்டும் விதிவிலக்கு. பார்ப்பதற்கு பாவி போல் இருப்பார்.
அந்தக்காலத்தின் இள்வட்டங்களை கவர்ந்த எந்த அம்சமும் பாதிக்காத ஒருவராக இருந்தார். இப்ப அவரை நினைக்கும் போது கூட அவரின் அந்தப் பளுப்பு நிற ஷேர்ட்டும், சாம்பல் நிற லோங்ஸ்சும் கறுப்பு பாட்டா செருப்பும் தான் கண்முன் முதலில் வருகிறது.

விடுமுறைக்கும் விஷேஷங்களின் போதும் எனது தந்தையின் வீட்டுக்கு செல்வதென்றால் எனக்கு ஒரே புளுகம். நல்லூரில் இருந்த அந்த வீட்டில் என்னயொத்த வயதினர்களான எனது பெரியப்பா பிள்ளைகள் ஜெனா வின்சன், மச்சான் வசந்தன் பக்கத்துவீட்டு உறவினர்களான ஹென்றி, தவம் மற்றும் ஜெனாவின் நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடுவோம் முற்ற‌த்தில் நாங்கள் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் போது அடுப்படியில் இருந்து ( இப்போ குசினி என்கிறார்கள்) எங்கள் ஆச்சியின் பேர்போன வறுத்த அரிசிமாப்புட்டும் மாசிச்சம்பலும், முரல் அல்லது கருவாட்டு சொதியின் வாசனையும் கிளம்பி வீட்டை நிறைக்கும். முற்றத்தில் சிறுவர்களான எங்களின் நடுவே சிறுவர்களோடு சிறுவனாக தங்கர்மாமா வீற்றிருந்து எம்மிடம் வித்தியாசமான ஆனால் ரசிக்கத்தக்க வகையில் எம்முடன் கதைத்தும் கேள்வி கேட்டுக் கொண்டும் இருப்பார். அவரின் கேள்விகள் சிறுவர்களான எமக்கேற்ற வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கிறீஸ்தவர்களின் பூசைகளயும், சுவாமிமார்களையும் பற்றியதாயும், கோயிலில் சுவாமிக்கு ஏன் குறிப்பிட்டவர்கள் மட்டும் உதவுகிறார்கள்... போன்றவையும், என்னமாதிரியான புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்பதும் விளக்கங்களுமாக இருக்கும். இவற்றை சிறுவர்களான நாம் ரசிக்கும்படியாக எம்முடன் கதைப்பதுதான் அவரின் தனித்தன்மை.

எனக்கு இன்றும் நல்ல நினைவிருக்கிற‌து ஒவ்வொரு முறை தங்கர் மாவுடனான எமது சம்பாஷணையை எங்கள் அம்மாக்களில் ஒருவர் வந்து " டேய் தங்கர் நீ கெட்டுக் குட்டிச்சுவரானது போதாதெண்டு ஏன்ரா இவங்களையும் கெடுக்கிறாய் என்று விட்டு எங்களைப் பார்த்து அவனுக்குத்தான் வேலைவெட்டியில்லை சும்மா கூட்டம்,பேச்சு, எண்டு சுத்துறான் நீங்களும் அவனைப்போல வராமல் போங்கோ போய் அங்கால விளையாடுங்கோ என்று அதட்டுவதில் முடியும். ஓம் ஓம் என்று சிரிக்கும் அவர் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல, பெருந்தன்மயான சிந்தனைகளையும் அம்புலிமாமா தொடக்கம் இன்னோரன்ன நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை எம்முள் தூண்டவேண்டும் என்பதிலும் மிக முனைப்பாக இருப்பார்.
மிகவும் எளிமையாகவும், ஒருவிதமான பிடிவாதத்துடனும் இருந்த தங்கர் மாமாவுக்கு திருமண வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. நான் புல ம்பெயரும் வரை அதே உடுப்பு அதே செருப்பு, அதே பிரம்மச்சாரி அதே தங்கர் தான்.

புலம் பெயர்வுக்குப் பிறகு சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் திக்குத்திக்காய் திசையெங்கும் சென்றபின் தொடர்புகள் எல்லாம் முற்றாக இல்லாமல் போன கால்கட்டத்தில் எனது தந்தையுடன் தொலைபேசும் வேளைகளில் தங்கரைப் பற்றிக்கேட்பதுண்டு. அப்பா சொல்லுவார் அவன் திருகோணமலயில் இருக்கிறான் எனத் தெரியும் ஆனால் தொடர்பில்லை" எப்படியாவது அவரின் தொடர்பை எடுத்துத்தாருங்கோ என்றுவிட்டு இந்த வேகமான வாழ்க்கையில் நானும் மறந்து விடுவேன் முதுமையோ என்னமோ எனது தந்தையும் மறந்துவிடுவார். இப்படி ஒரு நிலைமயில் தான் முகப்புத்தகம் மூலம் அவரை நந்தினி சேவியராகக் காணப் பெற்று பெருமகிழ்ச்சியடைந்தேன்.

அனறு சொந்தங்களாலும் பந்தங்களாலும் புரிந்துகொள்ளப்படாதவர், இப்போ நந்தினி சேவியராக, இலக்கிய உலகில் எல்லோராலும் அறியப்பட்டவராக பெருவளர்ச்சியடந்துள்ளதைக் காணும் போது பெருமையாக இருக்கிறது. அன்று சிறுவர்களான எமக்கு மார்க்சியர்தின் பாலும் லெனினிசத்தின் மேலும் ஈர்ப்பு ஏற்பட்டு ஒரு காலத்தில் அவற்றை படிக்க தலைப்படவேண்டும் என்பதற்கான உந்துதலை ஏற்படுத்தும் உரையாடல்களாகவே எம்மீதான அவரது கேள்விகள் அமந்திருந்ததை இப்போ உணர்கிறேன். அவரது படைப்புக்களின் தொகுப்பான " நெல்லி மரத்துப் பள்ளிக்கூடம்" என்ற சிறுகதைத் தொகுப்புக்கு இலங்கையின் பேர்பெற்ற பதிப்பகமான கொடகே பதிப்பகம் எனது இன்னுமொரு மாமனான கே. டானியலின் பெயரால் விருது வழங்கிக் கௌரவித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.

அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக அவரது சிறுகதைளைப் பற்றியும், அவரைப் பற்றியுமான ஒரு பாடம், இலங்கைப் பாடப்புத்தகம் ஒன்றில் உள்ளதாகக் கேள்வியுற்ற போது, சிறுவர்களாக இருந்த எமக்கு அவர் சொல்லவந்த நல்லவைகளை இனிமேல் எந்தத்தடையுமின்றி இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர் சொல்லப்போவதை நினைத்து பெருமைப் படுகிறேன்.
தங்கர்மாமா, வாழ்க்கையில் எவ்வளவோ வேதனைகளையும் சோதனைகளயும் சந்தித்துள்ளார். பெரிய இழப்புக்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளதை அறிந்து வேதனைப்படுகிறேன். இவை எவையும் அவரை தளரச் செய்ய முடியாது. ஏனென்றால் எழுத்துக்கு மட்டுமல்ல, அவர் உண்மையாகவே மார்க்சியவாதியாக வாழ்பவர். இதை அந்நாட்களில் கண்கூடாகக் கண்டவன் நான்.ஒரு சிறந்த படைப்பாளி எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும், எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும், அவையெல்லாவற்றையும் தாண்டி வெளிவருவான் என்பதற்கு , இரத்த சொந்தங்களாலேயே ஒரு காலத்தில்
அங்கீகரிக்கப்படாத தங்கர் என்கிற நந்தினி சேவியரின் வாழ்க்கையும் வெற்றியும் நல்லதோர் எடுத்துக்காட்டு.வாழ்க தங்கர் மாமா. Congrats and All the best

Saturday, 12 January 2013

ஈழத் தமிழன், இழக்கத் தயாராயில்லாத, இளையராஜா .


                    


                   

நெஞ்சமெல்லாம் நீயே - யாழ்தேவி







.
இன்று பல நண்பர்களின் முகப் புத்தக Time line இல், யாழ்தேவியைப் பற்றிய குறும்படம் ஒன்று Share பண்ணப்பட்டிருந்தது. ( அந்த Documentary யைப் பார்க்க இங்கே சொடுக்கவும். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=h9kVvtI3S6c )
யாழ்தேவி என்பது ஒரு காலத்தில் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் சேவையாகும். பார்த்ததும் பலவிதமான மனப்போராட்டங்கள் எனக்கு. என்னடா ஒரு சாதாரண ரயிலைப் பற்றிய Documentary தானே இதிலென்ன விஷேடம் இருக்கிறது என்று பலர் நினைக்கலாம்.. ஆனால் அது அப்படியல்ல. இந்த ரயில் ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது.
 இலங்கையின் வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றரக்கலந்திருந்த யாழ்தேவி என்ற இந்த ரயிலைப் பற்றி 90 களுக்குப் பிந்திய எங்களின் இளம் சந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை. காரணம் துரதிர்ஷ்டவசமாக 90ம் ஆண்டுடன் இந்த ரயில் யாழ்ப்பாணத்துக்கான தனது சேவையை நிறுத்திக் கொண்டது.
 ஒரு காலத்தில் இலங்கையின் மிகப்பிரதான ரயிலாக இருந்ததும், இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ்ப்பாணத்தையும், கொழும்பையும் இணைக்கும் பாலமாக இருந்ததும் இந்த கடுகதி ரயில்.இதன் வரலாறும் இந்த ரயிலைப் போலவே கடுகதியானது.
பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் இலங்கை இருந்த காலத்தில் 1864ல் முதன் முதலில் இலங்கைக்கு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1902ல் தான் யாழ்ப்பாணத்துக்கான சேவை தொடங்கியது. இதில் சாமான்களை காவும் Goods trainம் மற்றும் கடிதங்கள் பொதிகளைக் காவும்  mail trainம் அடங்கும். இந்த மெயில் ரயில் மிக மெதுவானது. ஒவ்வொரு புகையிரத நிலையத்திலும் நின்று கடிதப் பொதிகளை ஏற்றிக்கொண்டு, கொழும்பு சென்று சேரும் நேரம் மிக அதிகம். பின்னேரம் 5 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்படும் இந்த மெயில் ரயில் 10 – 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை வரும் சிறு சிறு ஸ்ரேஷன்களிலும் நின்று பொதிகளை ஏற்றிப் புறப்படும்போது பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்த ரயில் அடுத்த நாள் காலையில்தான்  கொழும்பை சென்றடையும்.    இதனால் பொதுமக்களின் இந்த அசௌகர்யங்களைத் தவிர்ப்பதற்காக  1956 இல் யாழ்தேவி என்ற பிரயாணிகளுக்கான ஸ்பெஷல் கடுகதி ரயில் ஆரம்பிக்கப் பட்டது.
கனடாவில் இருந்து தருவிக்கப்பட்ட அதி சக்திகொண்ட என்ஞின்களால் உருவாக்கப் பட்டது  இந்த யாழ்தேவி.
1956இல் இதன் முதல் பயணம் மிக உணர்வு பூர்வமானது. இலங்கை பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெற்று 8 வருடங்களேயான அந்தக் காலகட்டத்திலேயே சிங்கள தமிழ் இனங்களுக்கிடையில் வேறுபாடுகள் உருவாகத்தொடங்கிய காலமது. எனவே இந்தக் காலத்தில் இலங்கையின் தலை நகரான கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ் நகரை மட்டுமே மையப் படுத்தி செல்வதை இரு இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான ஒரு அறை கூவலாக பாவிப்பதற்கு நேர்மையான சிங்கள அரசியல்வாதிகள் முயன்றார்கள்.

முக்கியமாக இதில் இடது சாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ,அந்தக் காலத்திலேயே தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சம அந்தஸ்துக் கொடுத்து இலங்கையை பல இனங்களைக் கொண்ட சமத்துவ நாடாக்க வேண்டும் என்று கூறிவந்த, கேம்பிரிட்ஜ் பட்டதாரி  பீற்றர் கெனமன் ( Pieter Keuneman) முக்கியமானவர். பீற்றர் கெனமன் டச் பாரம்பரியத்தில் வந்த பறங்கியினத்தவர். அவர் இடதுசாரி அரசியல்வாதியாக இருந்ததால், அவரால், இலங்கையின் அரச நிர்வாகத்தில் பெருமளவான  ஆளுமையைச் செலுத்தமுடியாமல் இருந்த போதிலும், இரு இனங்களிலும் இருந்த சமாதானத்தை விரும்பிய மக்களால் மிகவும் நேசிக்கப் பட்ட ஒருவராக இருந்தார். இதற்கு காரணமாக, இவர் பறங்கியினத்தவராக இருந்ததால் பக்கச் சார்பற்று செயற்படுவார் என்று இரு இனத்தவரும் நினைத்திருக்கலாம்.
                              Peter Keuneman
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமான யாழ்தேவி ஆரம்பிக்கப் பட்ட போது பீற்றர் கெனமன் மிக மகிழ்வுடன் சொன்ன வாக்கியம் “This is Life line of this country” இதிலிருந்து இந்த ரயில் சேவைக்கும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய  இனக்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும்,  அவர் போன்றவர்கள், கொடுத்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.இந்த ரயில் இலங்கையை இணைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
யாழ்தேவி ஓடத்தொடங்கிய காலத்தில் இலங்கையின் ரயில்வேயின் பிரதான முகாமையாளராக இருந்தவர் Rampala. இவரின் காலத்தில் இன மத மொழி பேதமின்றி இலங்கையர்கள் எல்லோருக்கும் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புக் கொடுக்கப் பட்டது. அவருக்குப் பின்  வந்தவர் கே.கனகசபை என்ற தமிழர். மிக நேர்மையான இவரின் காலத்திலும் யாழ்தேவி விஷேடமாகக் கவனிக்கப் பட்டு மெருகூட்டப்பட்டு தரத்தில் கோலோச்சியது. அத்துடன் இலங்கையின் ரயில்வேயில் அதிக வருமானம் உழைத்த பெருமையையும் பெற்றது.
இந்தக்காலகட்டத்தில் இலங்கையின் பிரதமர் W. டஹனாயக்கே யாழ்தேவியில் பயணம் செய்து அவரின் நெருங்கிய நண்பரும் சுன்னாகம் ஸ்கந்தா அதிபராகவும் இருந்த ஒறேற்ரர் சுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்று தங்கியது, குறிப்பிடத்ததக்கது.
அந்தக் கால கட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தைசெல்வா, 
கொழும்பு செல்வதற்கு யாழ்தேவியையே பயன்படுத்தினார் என்றும்  நேர்மையான அரசியல் தலைவரான அவர், தனது வீட்டிலிருந்து நடந்தே ரயில்நிலையம் செல்வார் என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 இப்போதைய சூழ்நிலையில் நம்புவதற்குக்க் கடினமாக இருந்தாலும் இது உண்மை.  
இந்த யாழ்தேவி இருக்கிறதே.. அப்பப்பா அது சமூகத்துக்கு செய்த சேவைகளில் முக்கியமானது கலப்புத்திருமணங்களை ஊக்குவித்ததுதான். கொழும்பில் மதியச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு யாழ்தேவியில் ஏறினால் இரவுச் சாப்பாட்டை யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் சாப்பிடலாம். இதனால் தென்னிலங்கையில் பரவலாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற தமிழ் இளைஞர் இளைஞிகள் வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு யாழ் வந்துவிட்டு மீண்டும் ஞாயிறு புறப்பட்டு கொழும்புசென்று திங்கட்கிழமை வேலைக்குச் செல்வது வழமை. இப்படியாக ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் இந்த ரயிலில் சந்திக்கும் இளஞ்ர்களும் இளைஞிகளும் பிரயாண இடைவெளியில் தமக்குள் தாமே கதைத்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட புரிந்துணர்வால் காதல் வசப்பட்டு, திருமணம் செய்த வரலாறுகள் பலவற்றை சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.
அந்தக்காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மற்றய ரயில்களுடன் ஒப்பிடுகையில்,  யாழ்தேவி பல விதங்களில் வித்தியாசப்பட்டதை அதைப் பற்றிய தேடலின் போது காணக்கூடியதாக இருக்கிறது. அது தனது பயணிகளுக்கு பரிமாறிய  உணவு, பாரம்பரியமான யாழ்ப்பாண உணவுகளாகும். எக்காரணத்தைக் கொண்டும் அதன் தரத்திலோ சுவையிலோ மாற்றம் இருந்ததில்லை. யாழ்தேவி செல்லும் பாதையின் அருகில் வசித்துவந்த மக்களின் கூற்றுப் படி, அந்த ரயில் கடந்து சென்று பல நிமிடங்கள் சென்றாலும் அதனுள் இருந்து வந்த உணவு வாசனை கம கமத்துக் கொண்டேயிருக்குமாம். அதன் பணியாளர்கள் நேர்த்தியான உடையுடன் காணப்படுவார்கள். மற்றய ரயில்களின் பணியாளர்களின் சேவைத் தூரம் அதிகபட்சம் அநுராதபுரம் மட்டுமே. அதற்கப்பால் வேறு பணியாளர்கள் பொறுப்பெடுப்பார்கள் ஆனால் யாழ்தேவியின் பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வேலையை முடிப்பது கொழும்பில் மட்டுமே. இதனால் பயணிகளுடனான தேவைகளை உனர்ந்தவர்களாகவும் உடனுக்குடன் நிறைவேற்றுபவர்களாகவும் அக்கால கட்டத்திலேயே அவர்கள் காணப்பட்டது ஆச்சரியமான உண்மை.
கொழும்பு கோட்டையில் இருந்த்து புறப்படும் இந்த ரயில் 256 மைல்களைக் கடந்து ( 409 கி.மி.) தனது இலக்கை அடையும். இடையில் காணப்படும் :
ராகம, பொல்காவெல, குருநாகல், மாஹோ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, ஆனையிறவு, யாழ்ப்பாணம்,
 [ போருக்கு முதல், கம்பீரமாகத்தோற்றமளித்த யாழ் ரயில் நிலையம் ]

 இறுதியாக கே.கே.எஸ்.என்றழைக்கப்படும் காங்கேசந்துறையில் தனது பயணத்தை,  காலங்காலமாக முடித்த யாழ்தேவியின் எஞ்ஞினின் உறுமல் சத்தம் வலிகாமத்தில் இருந்த எங்களின் வீட்டில் மெதுவாகவும் ஆனால் இனிமையாகவும் கேட்டது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது.
விடுமுறையில் வந்துசெல்லும் அப்பாவிற்கும், மாமாமார்களுக்கும், கட்டுச்சோறையும், கறிகளையும், அவித்த முட்டையுடன் சேர்த்து, வெப்பமாக்கியதால் நினைத்தபடி வளைக்கக்கூடியதாக மாறிய  வாழையிலையால் சுற்றிக்கட்டி, மணக்க மணக்க அம்மா கொடுத்துவிட்டது கண்முன்நிழலாடி அவர்களின் இளமை முகம் அப்படியே முன்னேவருகிறது.
நான் இறுதியாக யாழ்தேவியில்,1988 மே முதலாம் திகதி கொழும்புக்கு சென்றிருந்தேன். இந்திய ராணுவம் இலங்கையின் வடகிழக்கில் நிலைகொண்டிருந்த அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு வவுனியா சென்றடையுமட்டும் முழத்துக்கு ஒரு இந்திய சிப்பாய் ரயில் பாதைக்கருகே நின்றதைக் கண்டபோது 





அவர்களின் தொகை அவர்கள் அறிவித்ததை விட பலமடங்கு என்பதும்  எதிர்காலத்தில் நடக்கப் போகும் அனர்த்தங்களும் புரிந்ததுடன், திரும்பி யாழ் நோக்கிய யாழ்தேவிப் பயணம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற உண்மை புலப்படத் தொடங்கியது.  

 இளைஞனாகப் புலம்பெயர்ந்து, பலவருடங்களின் பின் பெரியவனாக தாயகம் சென்றபோது, ஆவலாகத் தேடிச் சென்று பார்த்ததில் இந்த யாழ்தேவியும் ஒன்று. இப்போதும் யாழ்தேவி என்ற பெயருடன் ஏதோவொரு இயந்திரம் அனேகமான ரயில் நிலையங்களில்  நின்றபடி, கொழும்பிலிருந்து புறப்பட்டு வவுனியாவுடன் தனது சேவையை முடிக்கிறது.. முன்பெல்லாம் சிரித்துக்கதைத்தபடி முட்டி மோதிய மகிழ்ச்சியான மக்கள் கூட்டத்தை அதில் காணமுடியவில்லை. எங்கோ ஒன்றிரண்டுபேரைக் காணமுடிந்தது. மிகச் சுத்தமாகவும் புதிதாகவும் பேணப்பட்ட பெட்டிகள் பழையனவாகியும், மலசலகூடங்கள் கேட்பாரற்றும் காணப்படுகின்றன. ஒருகாலத்தில், தான் தாண்டிப் போன இடங்கள் எல்லாவற்றிலும், கமகமத்து, வாயூறவைத்த உணவுக் கன்ரீன் இல்லாதுபோய், உள்ளே, கையேந்திபவன் மாதிரி ஏதோவொன்று பேருக்கு இருக்கிறது.
பிறந்துள்ள இந்த 2013 இலாவது எமது மக்களும் இந்த யாழ்தேவியும் பழைய பொலிவைப்பெற்று காங்கேசந்துறைவரை செல்ல வேண்டும். கட்டுநாயக்காவிலிருந்து யாழ்தேவிமூலம் நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு சென்று, கிணத்தில் அள்ளிக் குளித்துவிட்டு, அம்மாவின் கையால் பிட்டும் முரல்கருவாட்டுச் சொதியும் மாசிக்கருவாட்டுச்சம்பலும் வாங்கிச் சாப்பிட வேண்டும். இந்த 2013ல் அதுதான் எனது புதுவருடத்தீர்மானம்.