003 -2004ல் இந்திய கிறிக்கற் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காலம், அந்த அண
ியில் சடகோபன் றமேஷ் என்ற ஒரு தமிழனும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இடம்பிடித்திருந்தார். அதுவரை கிறிக்கற்றில் பெரிதளவான அக்கறை இல்லாதிருந்த எனக்கு, சக தமிழனின் விளையாட்டை பார்க்கும் ஆர்வக்கோளாறு ஏற்பட்டது. அதற்கு மற்றுமோர் காரணம் இந்த சடகோபன் றமேஷ் எனது மனம் கவர்ந்த நடிகரும், நமக்கெல்லாம் "தல"யுமான கவுண்டமணியின் தீவிர ரசிகன் என்றதை வார சஞ்சிகையொன்றில், அவரின் பேட்டியின் மூலம் அறிந்திருந்ததும் ஆகும். ரசிகனுக்கு ரசிகன் நண்பன் என்றதற்கமைய அந்த 3 ரெஸ்ற் மச்சையும் பார்ப்போம் என்று முடிவெடுத்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் பியருடன் அமர்ந்தேன்.
சனல் 9 என்னும் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய கிறிக்கற் சனல் வழமைபோல் போட்டியை ஒளிபரப்பத்தொடங்கியது. இந்தச் சனல் 9 இன் கிறிக்கற் விமர்சகர்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல.. ரோனி கிறேக்(tony craig), றிச்சி பெனோ,(Richi beno)இயன் சப்பல் (ian chappel), மார்க் ரெய்லர்,(Mark taylor) பில் லோறி,(bill lawry)இயன் ஹீலி (ian healy) ,மார்க் நிக்கிலஸ்,(Mark Nicholas) மைக்கல் ஸ்லேற்றர் (Mikaell Slater) என முன்னாள் கிறிக்கற் வீரர்கள். பெரும்பாலானவர்கள் அவுஸ்திரேலியாவினதும், இங்கிலாந்தினதும் முன்னாள் கப்ரன்கள் (Captains).இவர்களின் விமர்சனங்கள் ஒவ்வொரு வீரரைப்பற்றிய கணிப்பும் அச்சொட்டாக, நெத்தியடியாக இருக்கும். இலேசில் யாரையும் புகழ்ந்தோ, புழுகவோ மாட்டார்கள்.. அதற்கான அவசியமும் ,எந்த அழுத்தமும் இல்லாத விமர்சகர்கள்.
போட்டி ஆரம்பித்தது எனக்கோ ஏமாற்றம், காரணம் அந்த போட்டியில் ரமேஷ் விளயாடவில்லை. அவருக்கு பதிலாக ஆகாஷ் சோப்ராவும், ஷேவாக்கும் களமிறங்கினர். மிகவும் மெதுவாக ஆரம்பித்த ஆட்டம் மெதுமெதுவாக ஆஸ்திரேலியரின் பக்கம் சாயத்தொடங்கியது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்கத்தொடங்கினர். ட்றாவிட் ,பின் சச்சின் (0) என ஆட்டமிழந்து இந்திய அணி சொதப்பிக்கொண்டிருந்தபோது ஆறாவதாக ஒருவர் களமிறங்கினார்.அதுவரை சாதரணமாக போய்க்கொண்டிருந்த ரி.வி. வர்ணனை திடீரென்று சூடுபிடிக்கத்தொடங்கியது. ஒருவர் மாறி ஒருவராக புதிதாகக் களமிறங்கியவரை பற்றியும் அவரின் மணிக்கட்டை சுழற்றி ஆடும் வல்லமையையும், கிளன்மக்றா( Glen Mcrath) என்ற, உலக துடுப்பாட்ட வீரரையெல்லாம் கதிகலங்கச் செய்து கொண்டிருந்த அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரை எந்தவித பயமுமின்றி நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் லாவகத்தைப் பற்றியும், ஷேன் வார்ன் (Shane warne) என்ற சுழல்பந்தின் உச்ச வீரனை பிச்சுக்கு உள்ளே வந்து அடித்தாடப் போகும் ஸ்ரைலயும் பற்றி விளக்கிக் கொண்டே இருந்தார்கள்.. எனக்கோ ஒன்றுமே புரியவில்லை, ஒரு வெளி நாட்டு வீரனை, அதுவும் தமது நாட்டு அணியை எதிர்த்து மோதப் போகின்றவரைப் பற்றி இந்தப் பெரிய கிறிக்கற் ஜாம்பவான்களும், கிறிக்கற்றை கரைத்துக் குடித்த பத்தி எழுத்தாளர்களும் புகழ்கிறார்களென்றால் !! இவர் சாமானிய கிறிக்கற்றர் அல்ல.. இவர் சாதனையாளராகத்தான் இருக்க வேண்டுமென்ற முடிவுடன் அவரின் ஆட்டத்தை பார்க்க தொடங்கினேன்.ஏற்கனவே மற்றய பக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த இந்தியாவின் மிகச் சிறந்த கப்ரன் கங்குலியுடன் சேர்ந்து,தோல்வியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்த அணியை அந்தத் தோல்வியிலிருந்து தடுப்பதற்கான தடுப்பாட்டத்தை (defensive) (போராட்டத்தை)நிதானமாக ஆரம்பித்து, அந்தப் ஆடுகளத்தைப் பற்றியும் பந்துவீச்சாளர்களின் அன்றைய தரத்தைப் பற்றியும்,காலநிலைக்கேற்ப பந்தின் அசைவைப் பற்றியும் அறிந்ததும் தடுப்பாட்டத்திலிருந்து அதிரடி ஆட்டத்துக்கு (Attacking) மாறி, கங்குலியுடன் சேர்ந்து மிகப் பெரும் தோல்வியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றினார் அந்த வீரன். அவர் தான் வி.வி.எஸ்.லக்ஷ்மன்.
இதில் கங்குலி சிறப்பாக விளயாடி 144 ஓட்டங்கள் எடுத்திருந்த போதும் லக்க்ஷ்மனின் 75 ஓட்ட உறுதுணை இல்லாதிருந்தால் தாக்குப் பிடித்திருக்க முடியாது. அவரின் அன்றைய ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த நான் ஏனோ தானோ என்றில்லாமல்அந்த ஆட்டத்தின் நெழிவு சுழிவுகளயும், தந்திரோபாயங்களயும் (Tactics) உணரத்தலைப் பட்டேன். லக்ஷ்மன் தனது அணி மிக இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில், எதிரணியினரை,முக்கியமாக ஆஸ்திரேலியரை கதிகலங்க வைக்க எடுக்கும் உத்திகளை (Tactics) பார்த்து
மெய்சிலிர்த்துப்போனேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல,அவரது தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக அவரது ஆட்டம் அமைந்திருந்ததை பார்த்த போதுதான் நான் இதுவரை காலமும் நினைத்திருந்த கிறிக்கற் வேறு என்பதும் இந்த அழகான விளயாட்டை உடலால் மட்டுமல்ல மனதாலும் (physically & mentally) விளயாட வேண்டுமென்ற உண்மயையும் உணரத்தொடங்கினேன், கிறிக்கற் சம்பந்தமாக வெளிவந்த புத்தகங்களயும், முக்கியமாக முன்னாள் வீரர்களின் சுயசரிதைகளயும் (autobiographs), அவர்களினதும் அவர்களது கப்ரன்களினதும் தந்திரங்களயும் உள்வாங்கத் தொடங்கி, கிறிக்கற்றின் அதிசயமான வெற்றிகளயும்,அதற்குக் காரணமானவர்களின் உத்திகளயும் படிக்கத் தொடங்கிய போது லக்ஷ்மன் என்ற உண்மைக் கிறிக்கற் வீரனை புரிந்து கொண்டதால் அவரை மதிக்கத் தொடங்கினேன்.
லக்க்ஷ்மன் ஆஸ்திரேலியக் கிறிக்கற் ரசிகர்களிடம் பேரபிமானம் பெற்றவர், கிறிக்கற் அறிவுஜீவிகளினால் மிகச்சிறந்த வீரர் என கௌரவிக்கப்படுபவர். இவர் எப்படி மற்றய கிறிக்கற் வீரர்களில் இருந்து வித்தியாசப்படுகிறார்.???
No comments:
Post a Comment